இராமபாணம் வீண்போகாது.....
மிதிலாபுரியிலிருந்து அயோத்தி நோக்கி தசரத மன்னனுடைய கூட்டம் புறப்பட்டது. பயணம் ஆரம்பத்தில் இன்பம் நிறைந்ததாயிருந்தது. ராஜகுமாரர்கள் நால்வரும் நல்ல பயற்சி பெற்றிருந்தனர். இல்வாழ்வில் பிரவேசிப்பதற்கான மணச் சடங்கும் அவர்களுக்குச் செய்து வைக்கப்பட்டிருந்தது. அவையாவற்றையும் எண்ணிப் பார்த்த மன்னார் மட்டில்லா மகிழ்வில் ஊறியிருந்தார். ஆயினும் இடைவழியில் எதிர்பாராத வண்ணம் திடிரென்று விபத்து ஒன்று வாய்ப்பதாயிற்று. காற்று பயங்கரமாக வீசியது. வானம் முழுவதும் இருள் சூழ்ந்ததாக காட்சி கொடுத்தது. பயங்கர மூர்த்தியாகிய பரசுராமன் திடிரென்று அயோத்தி அரச கூட்டத்தில் எதிரே தென்பட்டார். சத்திரியர்களை துடைத்துத் தள்ளுவது அவருடைய வாழ்க்கை செயல். ஒரு தோளில் பெரிய வில் ஒன்றையும் மற்றொரு தோளில் தமக்குச் சின்னமாய் அமைந்திருந்த கோடரியையும் அவர் தங்கியிருந்தார். அவர் சிரசில் தாங்கியிருந்த ஜடாமுடி பார்ப்பதற்குப் பயங்கரமாய் இருந்தது. அவர் முகத்தினின்று தீப்பொறி பறந்துகொண்டிருந்தது. இத்தகைய காட்சியை தசரதர் எண்ணவில்லை. அவர் திகைத்து போனார். தழதழத்த குரலிலே தம் இளம் தனயனாகிய இராமனுக்கு உயிர்ப்பிச்சை தரும்படி அவர் கெஞ்சிக் கேட்டார்.
பயங்கர மூர்த்தியாகிய பரசுராமனோ தசரதனைக் கண்ணெடுத்துப் பார்க்கவில்லை. அரசர் கூட்டத்தையும் அவர் பொருட்படுத்தவில்லை. வசிஷ்ட மகரிஷியையும் ஏனைய முனிவர்களையும் அவர் மனதில் வாங்கவில்லை. தசரத ராமன் ஒருவனே அவர் நாடி வந்த உயிர் பிராணியாகும். அந்த இளைஜனைப் பார்த்து கர்ஜிக்கிற பாங்கில் இங்ஙனம் அவர் அறைகூவினார்.
பரசுராமன்:- "அடே சத்திரியப் பதரே, துருபிடித்தப் போன ஒரு சிவ வில்லை ஒடித்துக் கயவர் கூட்டத்தில் நீ வீராதி வீரன் என்று மிக எளிதில் கீர்த்தியைப் பெற்றுவிட்டாய். இதோ பார், என் கையிலிருப்பது விஷ்ணு தனுசு; இதில் நாண் ஏற்றி என்னோடு போர் செய்; போரில் மடிந்து போ. அது உனக்கு இல்லாவிடில் உன்னையும் உன்னுடைய கூட்டத்தையும் விட்டில் பூச்சி போன்று துடைத்து தள்ளத் தீர்மானித்திருக்கிறேன்".
தசரத ராமனுடைய முதல்விடை:- "போற்றுதற்குரிய பெரியோய்! தங்களைப் போன்ற முதியோர்களைப் பார்த்து இளையவர்களாகிய நாங்கள் நல்லியல்பையும் நல்லொழுக்கத்தையும் சாந்தத்தையும் கற்றுக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம். ஆனால் தாங்களோ ஒரே பதைபதைப்பும் சினமும் பூண்டவராகக் காட்சி கொடுக்கின்றீர்கள். நல்லொழுக்கத்தை நாடி இனி நாங்கள் யாரிடம் போவது?'
மேலும் ராமன் கூறியதாவது:- "போற்றுதற்குரிய பெரியோய்! என்னை சத்திரிய குலத்தில் பிறந்தவன் என அவமதித்தீர். என் பிறப்புக்கு நான் பொறுப்பாளி அல்லன். அது தெய்வாதீனமாக நிகழ்ந்தது. சான்றோர் ஒருவர் மானுடனொருவனுடைய பண்பை மட்டும் கருத்தில் வாங்கிக் கொள்கிறார். பிறப்பை அவர் பொருட்படுத்தவில்லை.
முன்கோபமே வடிவெடுத்திருந்த பரசுராம முனிவர் தாம் பிழையை உணர்ந்தார். ஆனால் வாய்விட்டு ஒன்றும் பேசவில்லை. ரகுராமன் பொழிந்த இக்கருத்தும் பரசுராமனுக்குப் பிரதிகூலமாகப் போயிற்று.
மீண்டும் ராமன் கூறியதாவது:- "ஆராதனைக்குரிய அரும் தவத்தோய்! தம் ஆணைக்குட்பட்டு தமது வில்லில் நாண் ஏற்ற முயலுகிறேன். என்னுடைய வல்லமையைக் காட்டும் முன்னீட்டம் என்னிடத்தில் இல்லை. ஆன்றோர் ஆணைக்கு அடிபணிவதே என் பாங்கு. இதோ அம்பைத் தொடுக்கிறேன். தொடுக்கிற அம்பு ஒருபொழுதும் வீண் போகாது. அதற்கு இலக்கு யாது என்று தாம் இயம்பி அருள்வீராக."
பரசுராமன்:- "பிரபோ, தாம் யார் என்பதைத் தம் அருளால் நான் இப்போது அறிய வருகிறேன். என்னுடைய வீண் செருக்கை கிருபை கூர்ந்து தாம் கழற்றிவிட்டீர். அறம் காக்க தாம் அவனியில் அவதரித்துள்ள புருஷோத்தமன். தமது அம்பை என் ஆணவ அகங்காரத்தின் மீது தொடுத்து அவைகளை அழித்து அருள்வீராக!"
அயோத்தி ராமன் பரசுராமனுடைய வேண்டுதலை மானசீகமாக நிறைவேற்றுகிறான். பரசுராமனுக்கு ஞானம் உதயமாகிறது. ஸ்ரீராமன் அருளை வாரி உலகக்கு வழங்க வந்த அண்ணல். மக்களைப் பண்படுத்திப் பெருநிலைக்குக் கொண்டு வந்த அரிய செயல்களுள் இது முதல் செயலாகிறது. ராமபாணம் வீண்போகாது என்னும் கோட்பாட்டுக்கு இது முதல் விளக்கமாகிறது

No comments:
Post a Comment