ஒரு ஊரில் இருந்த தொழிலதிபர், ஆன்மிகவாதியாகவும் இருந்தார். அடிக்கடி, "பெருமாளே
துணை! எல்லாம் அவன் செயல்' என்று சொல்வார்.
தொழில் பக்தி கொண்ட அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. குடும்பத்தில் மகிழ்ச்சி.. சமூகத்திலும் மதிப்புக்கு குறைவில்லை.
ஒருமுறை கோயில் திருவிழா குழுவினர், நன்கொடை கேட்டு அவரது இல்லத்திற்கு வந்தனர். அவர், பெருந்தொகை ஒன்றைக் கொடுக்க உதவியாளருக்கு உத்தரவிட்டார். உதவியாளரும் கொடுத்து விட்டார்.
உதவியாளர், ""ஐயா! இந்த பணம் உங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. அதைப் போய் இப்படி கொட்டிக் கொடுக்கலாமா? இது உங்கள் செல்வச் செழிப்பைக் காட்டவா அல்லது கடவுள் கொடுத்ததைப் பறித்துக் கொள்வார் என்ற பயமா?'' என்று கேட்டார்.
தொழிலதிபர் சிரித்து விட்டார்.
"" உழைப்பே உயர்வுக்கு வழி! ஆனால், உழைப்பு மட்டும் வெற்றி தருவதில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன், எனக்கு எத்தனையோ கஷ்டங்கள் குறுக்கிட்டன. இப்போதை விட 20 மடங்கு உழைக்கும் இளமைக் காலம் அது. ஆனால், அடிமேல் அடி தான் விழுந்தது. ஒருநாள் திருப்பதி கோயிலுக்குச் சென்று, ""பெருமாளே! பாடுபட்டு உழைத்தும் பலனில்லையே!
உழைப்புக்கான உயர்வைக் கொடு'' என்று மனப்பூர்வமாக வேண்டினேன். நம்பிக்கையுடன் பணியில் ஈடுபட்டேன். சந்தோஷச் சாரல் என் மீது விழத் தொடங்கியது'' என்றார்.
""உழைப்பு மட்டும் போதாது. உழைப்பும், நேர்மையும் இருந்தாலும், வெல்வதற்குரிய நேரம் வர வேண்டும். அதை செயல்படுத்துபவர் கடவுளே!'' என்று விளக்கினார்

No comments:
Post a Comment