திருப்தியே முக்கியம்!
ஒரு குரு தன்னிடம் படித்த முன்னாள் சீடர்களுக்கு விருந்தளிக்க ஏற்பாடு செய்தார். அவர்களும் ஏராளமாய் குவிந்தனர்.விருந்து துவங்கும் முன் சீடர்களிடம்,நீங்கள் மனிதர்களைப் போல் உண்ணப் போகிறீர்களா? விலங்குகளைப் போல் உண்ணப் போகிறீர்களா? என்று கேட்டார்.எதற்காக இப்படி கேட்கிறார் என்று புரியாத சீடர்கள்,ஏன்...மனிதர்களைப் போல் தான் உண்ணப்போகிறோம், என்றனர்.அதற்கு மகான்,அப்படியானால் நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஏனெனில், விலங்குகள் தங்களுக்கு போதுமான அளவு உணவையே எடுத்துக் கொள்ளும். மனிதர்கள் தான் என்ன சாப்பிட்டாலும், இதை இன்னும் கொஞ்சம் சாப்பிட்டிருக்கலாமோ! இதை இன்னும் ருசியாக சமைத்திருக்கலாமோ என்று குறைபடுவார்கள். மனிதர்களை திருப்திப்படுத்த முடியாது. மிருகங்கள் அப்படியில்லையே! என்றார்.இனியேனும், இருப்பதைக் கொண்டு திருப்திப்படுவோமா!
No comments:
Post a Comment