Thursday, July 24, 2014

அப்பாலும் அடிச்சார்ந்தார் நாயனார் புராணம்

அப்பாலும் அடிச்சார்ந்தார் நாயனார் புராணம்


யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது

தாராரு மூவேந்தர் பயிலுந் தொல்லைத்
    தமிழ்நாட்டப் புறத்திறைவன் சரணஞ் சார்ந்த
சீராருந் தொண்டர்களு மண்ட ரேத்துந்
    திருத்தொண்டத் தொகையருளாற் செப்புங் காலத்
தேராருந் தொடையிலுறா திப்பா லப்பா
    லெந்தைபிரா னடியடைந்த வியல்பி னோரு
மாராத காதலுடை யவர்க ளன்றோ
    வப்பாலு மடிச்சார்ந்த வடியார் தாமே.
சேரசோழபாண்டியர் என்னும் மூவேந்தருக்கும் உரிய தமிழ்நாட்டுக்கு அப்புறத்திலே சிவபெருமானுடைய திருவடிகளை அடைந்தவர்களும், சுந்தரமூர்த்திநாயனாருடைய திருத்தொண்டர்த் தொகையிலே சொல்லப்பட்ட திருத்தொண்டர்களுடைய காலத்துக்கு முன்னும் பின்னும் சிவபெருமானுடைய திருவடிகளை அடைந்தவர்களும், அப்பாலுமடிச்சார்ந்தாரென்று சொல்லப்படுவார்கள்

No comments:

Post a Comment