மும்மூர்த்திகளில் ஒருவரும், படைப்புக் கடவுளுமாக போற்றப்படுபவர் பிரம்மதேவர். இவர் மகாவிஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து உதித்தவர். இவருக்கு நான்முகம், சதுர்முகன், விரிஞ்சி என்பன போன்ற பல பெயர்கள் உண்டு. உலகத்தில் பிறக்கும் அனைத்து ஜீவராசிகளையும் படைப்பவர் பிரம்மதேவரே ஆவார்.
பிரம்ம தண்டத்தால் அவரவர் தலையெழுத்தை, இவர் எழுதுவதாக புராணங்கள் அனைத்தும் தெரிவிக்கின்றன. கல்விக் கடவுளான சரஸ்வதி தேவி இவரது மனைவி ஆவார். பிரம்மதேவரின் உடன்பிறந்தவளான மகாலட்சுமி குறிப்பிடப்படுகிறாள்.
பிரம்மதேவரின் இருப்பிடம் சத்தியலோகம் ஆகும். அன்னப்பறவை இவரது வாகனமாக உள்ளது. இவரை நோக்கி தவம் செய்தவருக்கு வேண்டிய வரங்களை தந்தருள்வார். இவரை தவம் செய்து பெறப்படும் பிரம்மாஸ்திரம், அதீத சக்தி வாய்ந்த ஆயுதமாக கூறப்படுகிறது. இத்தகையை சிறப்பு மிக்க பிரம்மதேவரை வணங்கினால் செல்வ நலன்கள் அனைத்தையும் பெறலாம்.
No comments:
Post a Comment