சிவனை நோக்கி நந்தி மூன்று முறை தவத்தில் ஆழ்ந்தார். முதல் முறை என்றும் மாறாத சிவ பக்தியை வரமாகப் பெற்றார். இரண்டாம் முறை சிவநிந்தை செய்பவர்களைத் தண்டிக்கும் உரிமை பெற்றார். மூன்றாம் முறை 300 ஆண்டுகள் தவம் இருந்து சிவபெருமானின் அம்சத்தையே பெற்று அழியாவரம் பெற்றார்.
நந்தியின் தவத்தினால் மகிழ்ந்த ஈசன், தன் சிரசில் இருந்து மாலை எடுத்து நந்திக்கு அணிவித்து, அதிகார நந்தி என்ற பட்டத்தையும் கொடுத்தார். அது முதல் நந்தி என்ற பெயரோடு ஈஸ்வரர் என்ற பட்டமும் சேர்ந்து நந்திகேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.
சுயம்பிரபை என்ற பெண்மணியை மணம் செய்து கலாயத்தை அடைந்து சிவகணங்களின் தலைவரானார். நந்திகேஸ்வரர் சிவந்த நிறம் கொண்டவர். நெற்றிக்கண் உள்பட மூன்று கண்கள் பெற்றவர். ஜடாமுடியும், வலக்கையில் மழுவும், இடக்கையில் மானும் ஏந்தி இருப்பார்

No comments:
Post a Comment