Saturday, May 21, 2011

பெண்களின் பெருமை

பெண்களின் மகிமை


பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என நம் நாட்டு பத்திரிக்கைகளிலும் சட்ட சபைகளிலும் எல்லா இடங்களிலும் கூக்குரல் எழுப்புகின்றனர் . இப்படிப்பட்ட பெண்களின் மகத்துவத்தை பற்றி புராண கால இதிகாசங்களிலும் ஆன்மீக கதை , கட்டுரைகளிலும் , இராமாயணம் , மகா பாரதம் , பகவத்கீதைகளிலும் கூறப்பட்டுள்ளது .
பரமசிவன் தனது தேவியாகிய பார்வதியை பாகத்திலும் , கங்கை என்னும் மற்றொரு பெண்ணை தலையில் வைத்துக்கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன . மகா விஷ்ணுவானவர் தனது மனைவியாகிய லட்சுமியை தனது மார்பிலும் , நான்முகன் ஆகிய பிரம்மதேவன் தனது பத்தினியை நாவிலும் வைத்துள்ளார் . அது மட்டுமல்லாமல் சிவபெருமான் வலது புறம் சிவனாகவும் , இடது புறம் சக்தியாக அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளிக்கின்றார் . நமது உடம்பில் வலது கை மோதிர விரலில் மோதிரம் போட்டால் மோதிரம் அணிவதற்கு கடினமாக இருக்கும். அதே மோதிரத்தை இடது கை மோதிர விரலில் மோதிரம் போட்டால் எளிதாக போய்விடும் . அதே போல் பெண்ணின் மார்பு வலது புறம் பெரியதாகவும் , இடது புறம் மார்பு வலது புறத்தை விட சற்றுக் குறைவாகவே இருக்கும். இதற்கு என்ன அர்த்தம் என்றால் இடது புறம் சரிபாதி பெண் உடம்பு , வலது புறம் சரிபாதி ஆண் உடம்பு இது . இதை தான் அர்த்தநாரீஸ்வரர் நமக்கு காட்டுகின்றார். நமது உடம்பில் இருவரும் இருப்பதால் தான் யாரையாவது ' ஏண்டா சிவனேன்னு உட்கார்ந்து இருக்கின்றாய் ' எனக் கேட்டால் , அதற்கு அவன் ' சக்தி இருந்தால் தானே வேலை செய்ய முடியும் ' எனக் கூறுவான் . அது சக்தியை குறிக்கும் . ஆகையால் தான் அனைத்து சக்தியையும் கொடுப்பவள் பெண் தான். ஆகையால் தான் கைரேகை பார்த்தால் கூட பெண்ணிற்கு இடது கையையும் , ஆணிற்கு வலது கையையும் பார்ப்பார்கள் . மருத்துவர்கள் நாடி பார்த்தால் கூட பெண்ணிற்கு இடது கையிலும் ஆணிற்கு வலது கையிலும் பார்ப்பார்கள் . இது மட்டுமின்றி பாம்புகளில் கூட பெண் பாம்பு கடித்தால் கண்ணில் உள்ள கருப்பு விழி கிழ்நோக்கியும் , ஆண் பாம்பு கடித்தால் கருப்பு விழி மேல்நோக்கியும் இருக்கும். இதையெல்லாம் அறிந்தே சிவபெருமான் அனைத்து சக்தியையும் சக்தியாகிய பார்வதிக்கே கொடுத்து விட்டார். ஆகையால் தான் பூமாதேவி ,கங்காதேவி ,கோதாவரி , யமுனை , நர்மதா ,சிந்து , வைகை , தாமிரபரணி இப்படி இந்தியாவில் ஓடும் அனைத்து நதிகளுக்கும் பெண்ணின் பெயர்களையே வைத்துள்ளார்கள் . இந்தியாவை கூட பாரத தாய் என்று கூறுகிறார்கள் .
பெண்கள் அனைத்தையுமே சுமக்கக்கூடியவள் . ஆகையால் தான் தனது உடம்பிலே பாருங்கள் - இடது கால் பெண்ணுக்கு சொந்தம் .வலது கால் ஆணுக்கு சொந்தம் .
ஆகையால் தான் நாம் அமர்கின்றபோது இடது கால் மீது வலது காலை போடுகின்றோம் . கை கட்டும் போதும் இடது கை மீது வலது கை அமர்ந்துள்ளது . நம்மையறியாமலேய நாம் இவ்வாறு செய்கின்றோம் .
மேலும் பெண்கள் மூக்குத்தி அணிந்தால் கூட இடது மூக்கில் தான் அணிய வேண்டும் . வலது மூக்கில் அணியக் கூடாது . மதுரையில் உள்ள மீனாட்சி அம்மனை பார்த்தால் அம்மன் இடது மூக்கில் தான் மூக்குத்திஅணிந்திருக்கிறார் . அதே போல் திருமணம் செய்யும் பொழுது கூட தாலி கட்டும் போது பெண்ணை இடது புறம் வைத்து தான் தாலி கட்ட வேண்டும் .வலது புறம் வைத்து தாலி கட்டகூடாது .
குழந்தை பிறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் ஒரு தம்ளர் தண்ணிரை எடுத்து தாய்பாலை பீச்சி ஒரு சொட்டு விட்டால் , பால் மிதந்தால் ஆண் குழந்தை , பால் முழ்கிவிட்டால் , பெண் குழந்தை . இதில் கூட பெண்கள் சுமக்க கூடியவராக தான் இருக்கிறார்கள் .
ஒரு பெண் , குழந்தையை பெற்றெடுக்கும் போது அவள்படும் வலியும் , வேதனையையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது . இப்பொழுது தான் பெண் மறுபிறவி எடுக்கிறாள் . பத்து மாதங்கள் தன் வயிற்றில் சுமந்து பிரசவம் ஆன பின்னரும் இரவு எல்லாம் கண் விழித்து அடிக்கடி பால் கொடுத்து ,மருந்து கொடுத்து தாங்கள் பத்தியம் இருந்து பிள்ளைகளின் மல ஜாலங்களை சகித்துக்கொண்டு , வாயைக்கட்டி , வயிற்றை கட்டி பிள்ளைகள் வளரும் பொருட்டு தாய்மார்கள் படும் கஷ்டம் எவ்வளவு என சொல்ல முடியுமா ?
எந்த ஒரு விஷயத்தை எடுத்துகொண்டாலும் ஆண்களை விட பெண்ணுக்களுக்கே அதிக சுமை . நம் உடலில் உள்ள எலும்புகளில் கூட ஆண்களை விட பெண்களுக்கு ஒரு எலும்பு அதிகம் . தாயின் கருவறையில் கூட பெண் சிசுவே பத்து நாட்கள் அதிகமாக தங்கி வெளிவருகிறது . அதேபோல் நாம் சுவாசிக்கும் பொழுது சூரிய கலையாகிய சிவன்(ஆண்) பகுதியில் 8 அங்குலம் சுவாசம் ஓடும் . ஆனால் சக்தி (பெண்) பகுதியில் 16 அங்குல சுவாசம் ஓடும். ஆணுக்கு சிறுநீர் வரும் துவாரம் ஒரே துவாரம் தான். ஆனால் பெண்ணுக்கு சிறுநீர் வரும் துவாரம் வேறு . நாதம் வரும் துவாரம் வேறு , என இரண்டு துவாரங்கள் இருக்கும். அதே போல் தத்துவங்கள் 96 ல் உட்கருவின் தத்துவங்கள் 36 கூறுகள், சிவத்தின் கூறுகளாகும். புறக்கருவின் 60 கூறுகள் சக்தியின் கூறுகளாகவும் உள்ளது . இதில் சிவனின் கூறுகளை விட சக்தியின் கூறுகளே அதிகம் . அதே போல் பெண்களின் பத்தினி , சித்தினி ,சங்கினி , அத்தினி என்று நான்கு ஜாதியினர் உள்ளனர் . ஆனால் ஆண்களுக்கு , மான் ,பட்சி , அசுவ என்று முன்று ஜாதியினர் உள்ளார்கள் . மேலும் தமிழ் சொற்களில் கூட ' அ ' முதல் ' ஒள ' வரை உள்ள 12 எழுத்துக்கள் ஆண் எழுத்துக்கள் . மீதமுள்ள 217 எழுத்துக்கள் பெண் எழுத்துக்கள் ஆகும்.அது மட்டுமல்ல யோகங்களில் கூட சக்திக்குரிய யோகங்கள் எட்டு . சிவனுக்குரிய யோகங்கள் மூன்று . இதில் கூட ஆனான சிவனின் யோகங்களை விட பெண்ணான சக்தியின் யோகன்களே அதிகம் . நட்சத்த்திரகளில், ஆண் நட்சத்திரங்கள் 8 , பெண் நட்ச்சத்திரங்கள் 16 என உள்ளன . ஜாதக திருமண பொருத்தம் பார்க்கும் போது கூட பெண்ணின் நட்சத்திரத்தை முதன்மையாக வைத்து தான் ஆணின் நட்சத்திரத்தை பொருத்தம் பார்க்கின்றோம் . பொதுவாக அனைத்து விஷயங்களிலும் , அனைத்தையும் தாங்கிகொள்ளும் சக்தியும் , சகிப்பு தன்மையும் பெண்களுக்கு அதிகம் இருப்பதால் தான் ' அம்மை அப்பன் ' என கூறுகின்றனர் . ' அப்பன் அம்மை ' என கூறுவது கிடையாது .
பெண்கள் தன் தாய் தந்தையருடன் இருக்கும் பொழுது , பொட்டு வைத்து , பூ வைத்து , வளையல் அணிந்து வண்ண வண்ண ஆடைகள் அணிந்து வளர்கின்றனர் . தம் அண்ணன் , தம்பி , தமக்கை , உற்றார் உறவினர்கள் கையாண்ட சொத்தும் , சுகந்தரமும் மறந்து , தன் கணவனே கதி என வருகிறாள் . திருமணம் ஆகும் வரை தம் தந்தையின் பெயரின் முதல் எழுத்தை தன் பெயரின் முன் போடுகின்றனர் . திருமணம் ஆன பிறகு தன் கணவனின் முதல் எழுத்துக்கு மாறி கொள்கின்றனர் . அது மட்டும் அல்ல தம் கணவன் உயிர் நீத்த பின்பு தலைக்கு வைக்கும் பூவையும் பொட்டையும் இழக்கின்றனர் . இடையில் வந்த தாலியையும் இழக்கின்றனர் . கடைசியில் ' விதவை ' என்கின்ற பட்டத்தை தன் வாழ்நாள் முழுதும் சுமக்கிறார்கள் . எவ்வளவுதான் சீரும் சிறப்புமாக வாழ்ந்தாலும் , மேலே உள்ள பட்டத்தை அந்த பெண் வாங்கிய பிறகு இந்த சமுதாயம் அவர்களை எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் , ஏன் தன் சொந்த மகன் , மகள் , பேத்தி , பேரன் , முதியோர்களுக்காக நடக்கும் நல்ல சடங்குகளுக்கும் முதன்மையாக அனுமதிக்காமல் ' அமங்கலி ' என கூறி தனிமை படுத்துகின்றது . இப்படி கணவனுக்காக தன்னையே மாற்றிக்கொள்கிறார்கள் . அப்படி இருக்க தன் மனைவிக்காக அவன் என்ன மாற்றம் செய்கின்றான் .
இவ்வாறு பல விதங்களில் பெருமை பெற்று பெண்ணிற்கு எந்த மனக்குறையும் , கவலையையும் அணுக விடாமல் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமை

No comments:

Post a Comment