வாஸ்துவில் பல நுணுக்கங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த இயந்திர யுகத்திலும் இட நெருக்கடியின் காரணத்தாலும் எல்லாம் அமைய முடியாமல் இருக்கிறது. சொந்த நிலம் என்றால் நாம் தேர்ந்தெடுக்கும் டிசைன் படி வாஸ்துவுடன் வீடு கட்ட முடியும். ஆனால் எல்லோருக்கும் இந்த வசதி கிடைப்பதில்லை. எப்படியோ தனக்கென்று ஒரு வீடு அமைய வேண்டும் என்று மட்டுமே பலர் நினைப்பர். அதுவும் லோன் வாங்கி பின் அந்தக் கடனை அடைக்கும்படியான சந்தர்ப்பமும் ஏற்படும். இப்படி இருக்கும் போது எல்லாம் வாஸ்து பிரகாரம் எப்படி அமையும்?
இந்தக் காலத்தில் பலர் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வாங்குகின்றனர். அதில் ஒரு பாதியில் சரியான வாஸ்து அமைய, மறு பாதி
அதாவது, கிழக்கு ஒரு பக்கம் இருந்தால், மறு பகுதி மேற்குப் பக்கம் இருக்கும். இதில் நிச்சயமாக எதாவது ஓர் அறை, வாஸ்து பிரகாரம்
அமையாது. என்ன செய்வது? சொந்த வீடாக பூமியுடன் இருந்தால் பிரச்சினை இல்லை. நாமே இஷ்டப்படி இடித்துக் கட்டலாம். ஆனால் பிளாட்டில் (flat) இது எப்படி சாத்தியமாகும்?
இது போல் அமைவதும் அதனால் மன வேதனை அடைவதன் காரணம் நம் பிறந்த நேரமும் அதன் பிரகாரம் கணிக்கப்பட்ட ஜாதகமும்தான் காரணம். நிச்சயமாக வீடு பாக்கியத்தில் ஏதாவது இடத்தில் கேடு செய்யும் கிரகம் இருக்கலாம் (malific planet) லக்னத்திலிருந்து நாலாவது இடம் வீட்டைக் குறிக்கும். இதற்கு பூமிகாரகன் செவ்வாய்; அந்தச் செவ்வாய்க்கு அதிபதி முருகன். ஆகையால் செவ்வாய்க்குப் பிரீதியாக முருகனுக்கு அபிஷேகம் செய்யலாம். அல்லது முருகனது ஸ்லோகங்கள் படிக்கலாம். இதைத் தவிர வாஸ்து சரி செய்யும் ஸ்லோகமும் இருக்கிறது. ஓர் அன்பர் இதை என்னிடம் கேட்டிருந்தார். எல்லோருக்கும் பயன் படட்டுமே என்று அதை எழுதுகிறேன்.
இதைப் படிக்கும் போது ஊதுவத்தி ஏற்றி, வீட்டில் நாலு முக்கிலும் காட்ட வேண்டும். எல்லாவற்றுகும் மேலாக நம்பிக்கையும் சிரத்தையும் வேண்டும். இந்த ஸ்லோகத்தில் வேதத்தில் வருவது போல் மேலும் கீழும் ஒலி எழுப்பிப் படித்தால் நல்லது. இதைப் படித்து ஒப்பித்துக்கொள்ளுங்கள். தினமும் காலையில் குளித்த பின் இதைச் செய்ய வேண்டும்.
ஒருவரின் வீடு பாதியில் கட்டும் போது நின்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினை. சில நாட்கள் ஆட்கள் வரமாட்டார்கள். சில சமயம் மணல் மூட்டை கிடைக்காது. இப்படி பல மாதங்கள் கட்ட இழுத்து அடித்தது. பின் நான் இந்த வாஸ்து ஸ்லோகத்தைக் கொடுத்தேன். அவர் தினமும் நாலு பக்கமும் சாம்பிராணி காட்டி வேண்டிக்கொண்டார். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. உடனே ஆடகள் வர, இரண்டு மாதங்களில் மளமளவென்று முடிந்துவிட்டது.
அது என் நல்ல நேரமோ, அவரது நம்பிக்கையோ, ஸ்லோகத்தின் சக்தியோ.... மூன்றும் சேர்ந்து இருக்கலாம்.
வாஸ்து ஸ்லோகம்
வாஸ்தோஷ்பதே ப்ரதி ஜாநீஹ்யஸ்மான் ஸ்வாவேஸோ அனமீவோ பவான" (bavana:)
யத்வேமஹே ப்ரதிதன்னோ ஜுஷஸ்வஸ்ரந்த ஏதி த்விபதே ஸ்ஞ்சதுஷ்பதே
வாஸ்தோஷ்பதே சக்ம்யா ஸ்கும் ஸதாதே ஸக்ஷீம ஹிரண்வயா காது மத்யா
ஆவஹக்ஷேம உதயோகே வரன்னோ பாத ஸ்வஸ்தி பிஸ்ஸதான:
வாஸ்தோஷ்பதே ப்ரதரணோன ஏதி கோபி ரஸ்வே பிரிந்தோ
அஜராஸஸ்தே ஸகயேஸ்யாம பிதேவ புத்ரான பிரதி நோ ஜுஷஸ்வ
அமீவஹா வாஸ்தோஷ்பதே விஸ்வா ரூபாண்யா விசன் ஸகாஸுஸேவ ஏதின:
சிவகு(gu)ம் சிவம் சுபகும் சுபம்.

No comments:
Post a Comment