Monday, June 27, 2011

ஆன்மிக கதைகள் 4 என் உயிரினும் மேலான.


ஆன்மிக கதைகள்
என் உயிரினும் மேலான...


அரசன் ஒருவனுக்கு கலைப்பொருட்கள் மீது தீராத ஆசை. எங்கே எதைப் பார்த்தாலும், வாங்கி வைத்து விடுவான். ஒரு சமயம் கலையம்சம் மிக்க பளிங்குச்சிலைகள் சிலவற்றை அவன் வாங்கினான். அவற்றைப் பார்த்து பார்த்து ரசித்தான். தன் மனைவியை விட அவற்றை அதிகம் நேசித்தான். காலையில் எழுந்ததும், மனைவியின் முகத்தைப் பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்த அவன், சிலைகள் மேல் வைத்த பாசத்தால் அவற்றைப் பார்க்கத் துவங்கிவிட்டான். அவற்றில் சிறு தூசு படியக் கூட அவனது மனம் இடம் கொடுக்கவில்லை. எனவே, சிலைகளைத் துடைக்க ஒரு தனி பணியாளை நியமித்து விட்டான். ஒருநாள், அந்த பணியாள் சிலையைத் துடைக்கும் போது, எப்படியோ சரிந்து கீழே விழுந்து கை உடைந்துவிட்டது. தகவலறிந்த மன்னன், அந்தப் பணியாளøனை சாட்டையால் நையப் புடைத்து விட்டான். இருப்பினும், அவனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. அவனுக்கு மரணதண்டனை விதித்து விட்டான்.
அந்தப் பணியாளனை மறுநாள் காலையில் தூக்கிலிட முடிவு செய்யப்பட்டு, சிறைறயில் அடைக்கப்பட்டான். அவன் தன் நிலையை எண்ணி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான். அன்று மாலையில் ஒரு துறவி வந்தார். அரசன் அவரிடம், தான் மையல் கொண்டிருந்த சிலை உடைந்து போனது பற்றி வருத்தத்துடன் சொன்னான்.
""அதற்கென்ன, நான் இதைச் சரியாக்கி முன்போலவே சிலையை உருவாக்குகிறேன்,'' என்ற முனிவரிடம் மன்னன் மகிழ்ச்சியுடன் தலையாட்டினான். முனிவர் உடைந்த சிலையைப் பார்த்தார். திடீரென அதைக் கீழே தள்ளினார். அருகில் இருந்த மற்ற சிலைகளையும் தள்ளி நொறுக்கினார். மன்னனின் ஆத்திரத்திற்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. ""துறவியே! <உமக்கென்ன பித்துப்பிடித்து விட்டதா?'' என்றான்.
""அப்பனே! பித்து உனக்குத்தான். அழியும் பொருட்கள் மீது ஆசையெனும் பித்து கொண்டுள்ளாய். அதனால் ஒரு உயிரையே பறிக்கத்துணிந்தாய். என்னையும் கொன்றுவிடு. இனியாவது, பல உயிர்கள் பலியாவது தடுக்கப்படும்,'' என்றார். மன்னன் தன் தவறை உணர்ந்தான். உயிரினும் மேலானது எதுவுமில்லை என்பதைப் புரிந்து கொண்டான். பணியாளனை விடுதலை செய்தான்.

No comments:

Post a Comment