ஒரு ராஜாவைப் பார்க்க, மகான் ஒருவர் வந்தார். அவரிடம், ராஜா தன் அருமை பெருமையை எல்லாம் கொட்டித் தீர்த்தான்.
ஒரு வைரக்கல்லை காட்டி, ""சாமி! இது மாதிரி கல் எந்த நாட்டிலேயும் இல்லே! இதற்கு கோடி கோடி பணம் விலை. என் மார்பிலுள்ள தங்கச்சங்கிலியில் இதை பதிக்கப் போகிறேன். அப்புறம் நான் தான் உலகத்திலேயே செல்வந்தன்,'' என்றான்.
மகான் சிரித்தார்.
""அதிருக்கட்டும், இந்த கல்லை உன் மார்பில் பதிப்பதால் என்னாகப் போகிறது?'' என்றார்.
""இது என் பெருமையை பறைசாற்றும். இதை அணிந்துள்ள என்னைப் பாதுகாக்க நூறு வீரர்களை நியமித்திருக்கிறேன்,'' என்றான் இன்னும் பெருமையுடன். ""இதை விட உயர்ந்த கல் இதே ஊரில் இருக்கிறது. பார்க்க வருகிறாயா?'' என்றதும், ஆசை உந்தித்தள்ள ராஜா கிளம்பினான்.
ஒரு குடிசைக்கு ராஜாவை அழைத்துச் சென்ற மகான், ""உள்ளே பார்! அந்தப் பெண் இந்தக் கல்லால் மாவாட்டி விற்றுப் பிழைக்கிறாள். அவள் குடும்பத்தையே அந்தப் பணம் பாதுகாக்கிறது. நீ வெறுமனே ஒரு கல்லைக் கழுத்தில் அணிவதால் உனக்கோ, பிறருக்கோ என்ன பலன்?'' என்றார்.
ராஜாவுக்கு சுரீரென்றது. கல்லை விற்றுக் கிடைத்த தொகையை கஜானாவில் சேர்த்து மக்களுக்கு செலவிட்டான்.
No comments:
Post a Comment