Saturday, March 3, 2012

ஆன்மீக குறிப்புகள்


குறிப்புகள்
1. பிரணாப் பிரதிஷ்டை என்றால் என்ன?
எங்கும் வியாபித்து இருக்கும் சக்தியை ; ஒரு மூர்த்தியின் உருவத்திலோ - சக்கரத்திலோ - கலசத்திலோ நியமிப்பது - ப்ராணப் பிரதிஷ்டை யாகிறது; அப்படி எந்தப் பொருளில் பிராணப் பிரதிஷ்டை செய்யப்படுகிறதோ; அப்போது - அந்தப் பொருளின் பெயர் நீங்கி பிரதிஷ்டை செய்யப்படும் தேவதையாக மாறுகிறது. அப்படிப்பட்ட தேவதையை; தன் பூஜையின் பொருட்டு எழுந்தருள வேண்டும்; நிலைக்க வேண்டும்; அருகில் இருக்க வேண்டும்; ஒன்று கலந்து இருக்க வேண்டும். ஆவாஹி தோபவா போன்ற மந்திரங்களால் வேண்டப்படுகின்றது. காற்று எங்கும் நிறைந்து இருந்தாலும்; ஒரு சாதனத்தைக் கொண்டு தான் - ஒரு பொருளில் நிரப்பவேண்டி இருக்கிறது. அது போலத்தான் சக்தி எங்கும் நிறைந்து வியாபித்து இருந்தாலும்; மனம் என்ற சாதனத்தின் மூலம் மந்திரம் என்ற கருவியால்; பூஜை என்ற செய்கையால் நிரப்புவதே பிராணப் பிரதிஷ்டை என்று கூறப்படுகிறது.
- ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள்.
2. மாத்ருகா ந்யாஸம் - என்றால் என்ன?
அகர்ராந்தி - க்ஷகாரந்த ந்யாஸம் செய்வது; மாத்ருகாநியாஸம் எனப்படுகிறது. ஏழாவது ஆவரணத்தில் - இவர்களைப் பூஜிக்க வேண்டும். அதுபோல இவர்கள் மாத்ருகா ஸ்வரூபிணி என்று பெயர் பெறுவர்.
3. திதியும் - தேவிகளும் :
பிரதமை முதல் பவுர்ணமி வரையிலுள்ள - திதிகள் - பதினைந்தற்கும் - பதினைந்து தேவிகள் உள்ளனர். அவர்கள் நித்யா தேவிகள் என்று அழைக்கப்படுவர். திதியும் - தேவிகளின் பெயர்களும் (அதிதேவதைகள்)
1. பிரதமை - காமேஸ்வரி
2. துவதியை - பகமாலினி
3. திரிதியை - நித்யக்லின்னை
4. சதுர்த்தி - டேருண்டா
5. பஞ்சமி - வந்நிவாசினி
6. ஷஷ்டி - மஹாவஜ்ரேஸ்வரி
7. ஸப்தமி - சிவதூதி
8. அஷ்டமி - த்வரிதா
9. நவமி - குலசுந்தரி
10. தசமி - நித்யா
11. ஏகாதசி - நீலபதாகா
12. துவாதசி - விஜயா
13. திரயோதசி - ஸர்வமங்களா
14. சதுர்த்தசி - ஜ்வாலாமாலினி
15. பவுர்ணமி - சித்ரா
- ஸ்ரீ சக்கரம் ஸ்ரீ நகரம் ஸ்ரீ வித்யா
4. ருதுக்களும் - மாதங்களும் (அதிபர்களும்) :
பன்னிரண்டு மாதங்களும்; இரண்டிரண்டு மாதாங்களாக; ஆறு ருதுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ருதுக்களின் அதிபதிகளாக; அந்தந்த ருது நாதர்கள் விளங்குகிறார்கள். ஆறு ருதுக்களின் தலைவராக, த்பநீ - தபஸ்யஸ்ரீ என்ற தேவிகளுடன் - சசிரருதுநாதன் விளங்குகின்றார்.
1. சித்திரை - வைகாசி = வசந்தருது
2. ஆனி - ஆடி = கிரீஷ்மருது
3. ஆவணி - புரட்டாசி = வர்ஷருது
4. ஐப்பசி - கார்த்திகை = சரத்ருது
5. மார்கழி - தை = ஹேமந்தருது
6. மாசி - பங்குனி = சசிரருது
5. மாதங்களும் - அதிதேவதைகளும் :
1. சித்திரை - அம்சு
2. வைகாசி - நாதா
3. ஆனி - இந்திரன்
4. ஆடி - அரியமா
5. ஆவணி - விவசுவான்
6. புரட்டாசி - பகன்
7. ஐப்பசி - பர்ஜன்னியன்
8. கார்த்திகை - துஷ்டா
9. மார்கழி - மித்தரன்
10. தை - விஷ்ணு
11. மாசி - வருணன்
12. பங்குனி - பூஷா
6. ஸ்ரீ நகரம் :
ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி - வாசம் செய்யுமிடம் ஸ்ரீநகரம் எனப்படும். அது 25 கோட்டைகளை உடையது. அதன் பெயர்களாவன.
1. இரும்புக் கோட்டை
2. வெண்கலக் கோட்டை
3. தாமிரக் கோட்டை
4. ஈயக் கோட்டை
5. பித்தளைக் கோட்டை
6. பஞ்சலோகக் கோட்டை
7. வெள்ளிக் கோட்டை
8. தங்கக் கோட்டை
9. புஷ்பராகக் கோட்டை
10. பத்மராகக் கோட்டை
11. கோமேதகக் கோட்டை
12. வஜ்ரக் கோட்டை
13. வைடூரியக் கோட்டை
14. இந்திரநீலக்கோட்டை
15. முத்துக் கோட்டை
16. மரகதக் கோட்டை
17. பவழக் கோட்டை
18. நவரத்தினக் கோட்டை
19. நானாரத்தினக் கோட்டை
20. மனோமயக் கோட்டை
21. புத்திமயக் கோட்டை
22. அகங்காரக் கோட்டை
23. சூரியப் பிரகாரம்
24. சந்திரப் பிரகாரம்
25. சிருங்காரப் பிரகாரம்
- இதற்கு உள்ளேயே - ஸ்ரீ சக்கர ஆவரணங்கள் அமைந்துள்ளன.
7. பீஜ சக்தி :
மூல மந்திரங்களுக்கு உரிய பீஜங்கள் சக்தி வடிவானவை அத்தேவியின் பெயர் - நிபுணை - என்பதாகும்.
- தேவி பாகவதம்
8. அம்பாள் பெருமை :
அம்பாளுக்கு பலரூப பேதங்கள் இருப்பதில் சௌந்தர்யலஹரி என்ற ஸ்தோத்ரம் சுந்தரி என்பவளைப் பற்றியது. அவள் தசமஹா வித்யா என்ற பத்தில்; சுந்தரி - வித்யாவுக்கு தேவதையாக இருப்பவள். ஸ்ரீ வித்யா என்பது அதைத்தான். திரிபுரசுந்தரி என்பதும் அவளைத்தான். மூன்று லோகத்திலேயும் சிறந்த அழகி திரிபுரசுந்தரி. ஸ்தூல-சூக்கும்-தூரணம் என்ற முப்புரங்களுக்குள்ளே ஞானமாகவும்-காருண்யமாகவும் இருக்கும் ப்ரஹ்ம தத்துவம்தான் இப்படி அழகு ஸ்வரூபமான தாயாக ஆகி திரிபுரசுந்தரி என்ற பெயரில் விளங்குவது. லலிதாம்பாள் என்று சொல்வதும் அவளைத்தான்.
சந்த்ரமௌலீச்வர லிங்கத்தின் சக்தியாக ஸ்ரீ சக்ர ரூபத்தில் பூஜை பண்ணுவது திரிபுரசுந்தரிக்குத்தான். ஏனென்றால் அவர் மாதிரியே - அவளுக்கும் பூர்ண சந்த்ரஸம்பந்தம் நிறைய உண்டு. அவருடைய சிரசில் பூரண சந்த்ரன் இருக்கிதென்றால் - இவள் வாஸம் பண்ணுவதே பூர்ண சந்த்ர மத்தியில் தான். சந்த்ர மண்டல மத்யகா என்று ஸஹஸ்ரநூமத்தில் சொல்லியிருக்கிறது. அவளுக்கு விசேசமான திதியும் பூர்ணிமை; ஸாதனாந்தத்தில் (சாதண மடிவில்) அவளே நம்முடைய சிரஸ் உச்சியில் பூர்ணசந்த்ரனாக அம்ருதத்தைக் கொட்டுவாள். திவ்ய தம்பதிகள் ஜில்ஜிலுவென்று அழகாக அம்ருத கிரணங்களைக் கொட்டிக் கொண்டிருக்கும் சந்த்ர சம்பந்தத்துடன் லோகத்தின் தாபத்தையெல்லாம் போக்கி ஆனந்தம் கொடுப்பதற்காகச் சந்த்ரமௌளியாகவும்; திரிபுரசுந்தரியாகவும் இருக்கிறார்கள். அவள் சிரசிலும் சந்தரகலை உண்டு. சாரு சந்த்ர கலாதரா என்று சகஸ்நாமத்தில் வருகிறது. மஹாதிரிபுரசுந்தரி - சந்த்ர மண்டல மத்யகா சாரு சந்த்ர கலாதரா என்ற நாமாக்கள் கிட்ட கிட்டவே வந்து விடுகின்றன.

No comments:

Post a Comment