விடோபா
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கொண்டல்ராவ், புஸிபாய் தம்பதியருக்கு பிறந்தவர் விடோபா. இவரது நான்கு வயதில் தாயார் இறந்தார். குழந்தையை வளர்க்கவேண்டும் என்பதற்காக கொண்டல்ராவ் இரண்டாம் திருமணம் செய்தார். "லிங்கார்' எனப்படும் தையல்கலையில் ஈடுபட்ட ராவ் பஜனைமடம் ஒன்றை நடத்தி வந்தார். அங்கு தினமும் பாடுவது வழக்கம்.
விடோபா யாரிடமும் பேசுவதில்லை. மடத்தின் ஒரு மூலையில் அமர்ந்திருப்பான். சில சமயங்களில் மோன நிலையில் ஆழ்ந்து விடுவதும் உண்டு. எப்போதாவது கைகளால் தாளம் போட்டுக் கொண்டு, ""விடோபா விடோபா ஜயஜய விடோபா' என்று பாடுவார். பத்து வயது வரை பள்ளிக்குச் செல்லவில்லை ஆனாலும், படிப்பு வேண்டுமே என்பதற்காக மகனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார் ராவ். ஆனால், பயனில்லை.
பள்ளியிலும் ஒரே அமைதி தான்.
சக மாணவர்களிடமோ, ஆசிரியர்களிடமோ "மவுனமொழி' பேசினார் விடோபா. பெற்றோரும், ஆசிரியரும் கண்டித்தும் பலனில்லை. இருப்பினும், பள்ளி வாழ்க்கை நான்கு ஆண்டுகள் தொடர்ந்தது. 14 வயது இளைஞனாக இருந்த விடோபா பசி, தாகத்தையும் பொருட்படுத்தியதில்லை. பைத்தியக்காரனைப் போல வீதியில் இங்கும் அங்கும் அலைந்த மகனைக் கண்ட
தந்தைக்கு வருத்தம் ஏற்பட்டது. அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராக வீணானது. தலைவிரிகோலமாகத் திரிந்த விடோபாவைக் கண்ட சிறிய தாயார் ஒருநாள், எண்ணெய் தேய்த்துக் குளிக்க கட்டாயப் படுத்தினாள்.
அந்த நேரத்தில் தலையை அசைத்து, கைகளால் தாளமும் போட்டபடி, ""விடோபா விடோபா ஜயஜய விடோபா'' என்று பாட ஆரம்பித்தான். ஆத்திரம் பொங்கியவளாய் அவன் கன்னத்தில் ஒரு "பளார்' என்று விட்டாள்.
""வீட்டை விட்டு எங்காச்சும் போய் தொலையேன்! ஏன் என் உயிரை வாங்குற!'' என்று கூச்சல் போட்டாள்.
இது தான் சரியான தருணம் என்று முடிவெடுத்த விடோபா, கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினார். மதிய உணவிற்கு வீட்டுக்கு வந்த கொண்டல்ராவ், விடோபாவைத் தேடினார். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. விடோபா, வாலாஜா வழியாக வேலூர் வந்து சிலநாட்கள் தங்கினார். பின் போளூர் அருகில் உள்ள திருச்சூர் கிராமத்தை அடைந்தான். அந்த கிராமத்து இளைஞர்கள், விடோபாவின் உருவம் கண்டு பரிகாசம் செய்தனர். ஆனால், அவர்களிடமும் விடோபா பேசவில்லை.
ஊருக்குப் புதிதாக வந்துள்ள இளைஞரை எப்படியாவது பேச வைக்க சிலர் முயற்சித்தனர். அவருடைய இரு கன்னங்களையும் குறடு கொண்டு பலமாக அழுத்தினர். வலி தாங்க முடியாத அவர், ""ஹரே விடோபா!'' என்று கதறினார். கன்னத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. அதைக் கண்ட இளைஞர்பட்டாளம் பயந்து போய் அவரை விட்டு ஓடியது. அந்த காயத்தால் உண்டான வடு அவரை விட்டு மறையவே இல்லை.
அப்பாவியான விடோபாவை துன்புறுத்தியதன் பலனை இரண்டே வாரத்தில் அந்த கிராம மக்கள் அனுபவிக்க ஆரம்பித்து விட்டனர். கொடிய காலரா பரவியது. இருபது பேர் இறந்து விட்டனர். குறிப்பாக, விடோபாவை இம்சித்த இளைஞர் ஒருவர் கூட உயிர் தப்பவில்லை.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் விடோபா திருச்சூரை விட்டு போளூர் வந்தடைந்தார். அங்கே ஆடையின்றி அவதூதராக தெருக்களில் அலைந்து திரிந்தார். யாராவது உணவு அளித்தால் உண்பதைத் தவிர, யாரிடமும் கை நீட்டியதில்லை.
போளூரில் சிரஸ்தாராக பணியாற்றியவரின் மனைவி ஒருநாள் விடோபாவைக் கண்டு இரக்கப்பட்டாள்.
தினமும் சாப்பாடு போடுவது என்று தீர்மானித்தாள். அதன்படி உணவு அளித்தாள். அவதூத ஞானியாக விடோபா வாசலில் வந்து நின்று கை தட்டி அழைப்பார். அந்த அதிகாரியின் மனைவியும் உணவு கொடுத்து மகிழ்வாள். இப்படியே நாள் சென்று கொண்டிருந்தது. இந்த விஷயம் அதிகாரிக்குத் தெரியாது. ஒருநாள் அவர் வீட்டில் இருந்த சமயம், விடோபா வாசலில்வந்து நின்று கைதட்டினார்.
"யாரோ பைத்தியம்' என நினைத்த அதிகாரி, ஒரு பிரம்பை எடுத்து வந்து விரட்டினார். விடோபாவும் அந்த இடத்தை விட்டு ஓடி விட்டார்.
இதை அறியாத அதிகாரியின் மனைவி, ""இன்று சுவாமி உணவு வாங்க வரவில்லையே,'' என்று வருந்தினாள்.
அலுவலகம் சென்ற அதிகாரி, பேனாவைத் திறந்து எழுத முயன்றார். கைகள் செயலற்றது போல இருந்தன. சுவாமியை அடிக்க ஓங்கிய கைகளில் வலியும் உண்டானது. நேரம் ஆக ஆக வலி அதிகரித்துக் கொண்டே போனது. அதிகாரியை அலுவலக பணியாட்கள் வண்டியில் ஏற்றி வீட்டுக்கு அழைத்து வந்தனர். கணவரின் நிலை கண்ட மனைவி அதிர்ந்து போனாள்.
அப்போது தான் அவர் மனைவியிடம், "" சாமியார் போல ஒருவர் வாசலில் நின்று கை தட்டினார். பைத்தியம் என நினைத்து பிரம்பால் அடிக்க முயன்றேன். அதிலிருந்தே என் கை இப்படி ஆகிவிட்டது,'' என்றார் பயத்துடன்.
மனைவியோ இதைக் கேட்டு பதறினாள்.
விடோபாவைத் தேடிச் சென்றாள். ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த விடோபாவைக் கண்டாள். அவரிடம் தன் கணவரை மன்னிக்கும்படி கதறி அழுதாள். விடோபா, "ஜா' என்று குரல் கொடுத்தார். அந்தக் கணமே அதிகாரியின் வலி மறைந்தது. அன்று முதல் அந்த தம்பதியினர் விடோபா சுவாமியின் பக்தர்களாக மாறினர். இந்த நிகழ்ச்சிக்குப்பின் அவரது புகழ் மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியது.
ஒருசமயம் அடைமழை விடாமல் பெய்தது. கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்தது. கரையோரம் அமர்ந்திருந்த விடோபா வையும் வெள்ளம் அடித்துச் சென்றது. பக்தர்கள் கவலையுடன் அவரைத் தேடத் தொடங்கினர். வெள்ளம் வடிந்ததும், ஒரு ஆழமான குழியில் அவர் கிடப்பதைக் கண்டனர். கழுத்துவரை மண்ணால் புதையுண்டபடி தலை மட்டும் வெளியில்
நீட்டியிருந்தது. வேகமாக மண்ணைத் தோண்டி அவரை மீட்டனர். அவர் கண்களைத் திறந்த பிறகுதான் பக்தர்களுக்கு மூச்சு வந்தது.
சென்னையில் வசித்த சுப்பராய முதலியார் தீராத வயிற்றுவலியால் துடித்தார். செய்யாத வைத்தியம் இல்லை. தன் நிலையை எண்ணிய வருந்திய அவரின் கனவில் விடோபா தோன்றி, ""போளூருக்கு வா. நோய் குணமாகிவிடும்,'' என்று ஆணையிட்டார். அதன்படி அவரும் போளூர் வந்து சுவாமியைத் தரிசித்தார். சுவாமியும் இடது காலை நோயாளியின் வயிற்றில் வைத்தார். வயிற்றுவலி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது.
மேகநோயால் அவதிப்பட்ட பெண் ஒருத்தி விடோபாவுக்கு இருவேளை உணவளித்து வந்தாள். அந்த உணவை சாப்பிடாமலே இருந்து வந்தார். திடீரென்று ஒருநாள் அந்த உணவை எடுத்துக் கொண்டார். தொடர்ந்து அவர் சாப்பிட்டு வர, அவளது நோய் குறையத் தொடங்கியது.
இப்படி அற்புதம் பல நிகழ்த்திய விடோபா மறைந்த போது, திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டிருந்த சேஷாத்ரி
சுவாமிகள் ஆகாயத்தைப் பார்த்தவராய், ""இதோ விடோபா போகிறான்! இதோ விடோபா போகிறான்!'' என்று உரக்கக் கூவினார்.
உலகம் உள்ள வரை விடோபாவின் புகழ் நிலைத்துநிற்கும்.

No comments:
Post a Comment