சிவபெருமானை அபிஷேகப் பிரியன் என்று அழைப்பர். சிவனுக்குரிய அபிஷேகப் பொருட்களில்
பஞ்சகவ்யமே சிறந்தது. பசுவின் தனிப்பொருட்களாலும், பஞ்சகவ்யம் என்னும் ஐந்து
பொருட்களாலும் சிவபெருமானை அபிஷேகம் செய்து, அர்ச்சித்து, ஆராதனை செய்தால்
சிவபெருமானின் பேரருள் அடியவர்க்குக்கிட்டும் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.
சிவனுக்கு மிக விருப்பமான அபிஷேகப் பொருள் பஞ்சகவ்யம். சிவராத்திரியன்று
நடைபெறுகின்ற நான்கு காலப்பூஜைகளில் முதல் காலத்திற்குரிய முதல் பூஜையில்
முக்கியமாக இடம்பெறும் அபிஷேகப் பொருள் பஞ்சகவ்யம் ஆகும். பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம்
செய்வதால் நாம் பெறும் பலன்கள் பின்வருமாறு:-
பசும்பால்- ஆரோக்கியம், ஆயுள் விருத்தி
பசுந்தயிர்- பாரம்பரிய விருத்தி
பசும்நெய்- மோட்சம்
கோசலம்- தீட்டு நீக்கம், பாவ நீக்கம்
கோமலம்- நோய் நீங்குதல், கிருமி ஒழிப்பு
பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்யும் போது மேற்கண்ட அனைத்து பலன்களும் ஒரு சேர
கிட்டும். ஆலயக் கருவறையினுள் இருளும், குளிர்ச்சியும் இருக்கும், எனவே சிலைகள்,
இடுக்குகள், பிளவுகள் முதலான இடங்களில் கிருமிகளும், பாசிகளும், பூச்சிகளும்
வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.
பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்யும் போது கிருமிகள் அனைத்தும் அறவே அழிகின்றன.
பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட சிலைகளில் அற்புத, அதிசய, தெய்வீக ஆற்றல்
அதிகரிக்கும் என்பது ஆன்மிக ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் மெய்ப்பிக்கப்பட்ட
உண்மையாகும்.
No comments:
Post a Comment