வழிபட வேண்டிய தெய்வம்: நவநிதிகளுடன் குபேரன் மற்றும் லஷ்மிதேவி, சிவப்புநிறப்பட்டு
சாத்திய இரண்டு கலசங்களில் லஷ்மி குபேரனை வர்ணித்து செந்தாமரை செவ்வரளி மலர்களால்
அலங்கரித்து குரேப கோலமிட்டு சதுரவடிவ ஓம குண்டம் அமைக்க வேண்டும். வடக்கில்
பார்க்கும்படி கலசம் வைக்கலாம். வலம் புரிச்சங்கு அலங்கரித்து வைக்கவும்.
பொருத்தமான நாட்கள்: பூசநட்சத்திரத்துடன் கூடிய வியாழக்கிழமை, வெள்ளி,
பவுர்ணமி மற்றும் தீபாவளிப் பண்டிகை மறுதினம் சுபயோக சுபதினம் காலை வேளையில் 11
மணிக்குள். வியாழன் மாலை 5 முதல் 7 மணிக்குள் குபேர காலத்தில் சிலர் செய்கின்றனர்.
ஹோமப் பொருட்கள்: லட்டு, ஜாங்கிரி, 32 வகை யாகப்பொருட்கள், பசுநெய், பால்,
தயிர், தாமரை மலர், வில்வக்குச்சிகள், அரச சமித்து, தாமரை மலர், பாயாசம், பஞ்ச தள
வில்வ இலைகள், செம்பட்டு வஸ்திரம்.
நிவேதனங்கள்: சர்க்கரை பொங்கல், அவல் பாயாசம், கேசரி, அதிரசம், அவிஸ்,
தேன்குழல், பால் கொழுக்கட்டை.
பலன்கள்: செல்வச் சேர்க்கை, பெரிய மனிதர்கள் நட்பு, அரசு பதவிகளில் அனுகூலம்,
பொருளாதார வளர்ச்சி, நவநிதி தர்ஸனம்.
மூல மந்திரங்கள்: 1. ஓம் யஷேசாய வித்மஹே வைஸ்ரவணாய தீமஹி தந்நோ ஸ்ரீத,
ப்ரசோதயாத்.
2. ஓம் ஸ்ரீம் உனபதுமாம் தேவசக கீர்த்திஸ்ச மணினா ஸக. ப்ராதுர் பூதோஸ்மி
ராஷ்ட்ரேஸ்மின் கீர்த்திம் வ்ருத்தியம் ததாதுமேஸ்வாஹா.
3.ஓம் யக்ஷய குபேராய வைஸ்ரவணாய தனதான்யாதிபதயே தனதான்ய ஸம்ப்ருத்திம்மே
தேகிதாபய ஸ்வாஹா.
4.ஓம் ஸ்ரீம் ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் க்லீம் விநேஸ்வராய ஸ்வாஹா.
5.ஓம் ஸ்ரீம் குபேரம் மநுஜாகீரும் ஸகர்வம் கர்வ விக்ரஹம் ஸ்வர்ணச்சாயம்
கதாஹஸ்தம் உத்தராதிபதிம் ஸ்மரேத், ஸ்ரீம்க்லீம் குபேராய ஸ்வாஹா.
ஹோமம் முடிந்ததும் ஸ்ரீ அக்தம், லஷ்மி அஷ்டகம் பாராயணம் செய்தல் வேண்டும்.
அது ஸ்ரீ அக்தம் அல்ல.. ஸ்ரீ சுக்தம்..
ReplyDelete