மனசு கவடு விட்டுக் கொண்டு நானாவித ருசி பேதங்களில் செல்கிறது. அதன் போக்கிலேயே
விட்டுப் பிடித்துக் கொஞ்சம் கொஞ்சமாக வழிக்குக் கொண்டு வந்து ஒன்றிலேயே
நிற்பதற்குப் பக்குவப்படுத்தத் தான் மதம் ஏற்பட்டிருக்கிறதே ஒழிய, எடுத்த
எடுப்பிலேயே மனசை ஒன்றிலேயே அமுக்கி விடுவதற்கில்லை.
இப்படி வற்புறுத்திப் பண்ணினால் மனசின் இயற்கைப்படி அது ஈடு கொடுக்க முடியாமல் திணறி, திமிறிக் கஷ்டப்பட்டுக் கொண்டு முடிவில் ஜடம் மாதிரியோ, இல்லாவிட்டால் எதிர்த்திசையில் வெறித்தனமாகவோ தான் போகும். லவுகீக ருசிகளிலேயே சந்தோஷிக்கிற மனசிற்கு நானாவிதமான தெய்வீக ருசிகளைக் காட்டி, சந்தோஷப்படுத்தி, மனஅழுக்கைப் போக்கி தெளிவுபடுத்துவது தான் மதம் செய்கிற காரியம்.
குழந்தைகளுக்கு ஒரே வர்ணத்திலுள்ள ஒரு பொருளைக் காட்டிலும், கலர் கலராகக் காட்டினால் ஒரே உத்ஸாஹம்(உற்சாகம்) குஷி பிறந்து சிரித்துக் கூத்தாடும். நாமும் அந்தக் குழந்தை மாதிரி தான். ஒரே மூர்த்தி(தெய்வம்) தான் என்னும் போது ஏற்படக்கூடிய சலிப்பு இல்லாமல், "போர்' அடிக்காமல் ஏதோ தெரிந்த மட்டும் வழிபாடு பண்ணி ஏதோ நமக்குக் கிடைக்கிற மட்டும் கொஞ்சம் பக்தி ருசியை அனுபவிப்போம். ஏக ரஸம்(ஒரு தெய்வ வழிபாடு) எல்லாம் அப்புறம் தான்! இப்போது அவியல் போல பல தெய்வ வழிபாடு தான்.

No comments:
Post a Comment