இந்திரன் இருக்குமிடம் இந்திர லோகம் என்றும், பித்ருக்கள் இருக்குமிடம்
பித்ருக்கள் லோகம் என்றும், விஷ்ணு பகவான் இருக்குமிடம் வைகுந்தம் என்றும்
அழைக்கப்படுகிறது. அதுபோல் கிருஷ்ண பகவான் இருக்கு மிடம் கோ லோகம் என்று
கூறப்பட்டுள்ளது.
பசுவை தானம் கொடுப்பவர், பசுவின் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு ஆண்டாக இறந்த
பிறகு பல ஆயிரம் வருடங்கள் கோ லோகத்தில் கிருஷ்ண பகவானுடன் சேர்ந்திருப்பார் என்று
கூறப்ப டுகிறது. பசு தானத்தால் ஒருவர் தனது முன் ஏழு, பின் ஏழு தலை முறையினர்
மோட்சத்திற்கு போக வழி செய்கிறார். தான் அறியாமல் செய்த பாவங்களும் விலகுகிறது.
கோ தானத்தின் வகைகள்........
கோ தானம் என்பது ஒரு குறிப்பிட்ட காரியம் வெற்றிகரமாக முடிய சங்கல்பம் செய்து
செய்யலாம். யாகம் ஆரம்பிக்கும் பொழுதும், சுப காரியங்கள் வெற்றிகரமாக நடக்கவும்,
தனது வம்சம் சிறப்புற விளங்கவும் கோ தானம் செய்யலாம். ஒருவர் தான் இறக்கப் போகிறோம்
என்று தெரிந்தவுடன் தனக்காக தானே கோ தானம் செய்யலாம்.
ஒரு மனிதன் உயிர் பிரியும் பொழுது அவருக்காக `உக்ராந்தி கோ தானம்' என்று
செய்வதுண்டு. ஒருவர் இறந்த 12ம் நாள் வைதரணி என்ற கடுமையான நாற்றம் உள்ள நதியைக்
கடக்கவும் கோ தானம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு `வைதரணி கோ தானம்' என்று
பெயர். வைதரணி கோ தானம் செய்வதால் பசுவின் வாலைப்பிடித்துக் கொண்டு இறந்தவர் நற்கதி
அடைவதாக சொல்லப்பட்டுள்ளது.
வருடப்பிறப்பிலும், புண்ணிய காலங்களிலும் கோ தானம் செய்வது மிக
விசேஷமானதாகும். சித்திரை மாதத்தில் வளர்பிறை அல்லது தேய்பிறையில் வரும்
சதுர்த்தியன்று விரதமிருந்து, தேவாரம், திருவாசகம் ஓதி, சிவபுராணம் படிக்கக்
கேட்டு, பசுவை தானம் செய்ய வேண்டும். சிவபெருமான் அருளால் தானம் செய்பவர் உயர்ந்த
கதி அடைகிறார் என்று கூறப்பட்டுள்ளது. இவ்விதம் தானம் செய்பவர் கைலாசத்தில் சிவ
கணங்களுடன் சிவதரிசனம் செய்யும் பலனை அடைவார்.
ஒருவர் இறக்கும் தருவாயில் கோ தானம் செய்வதால் எம பயம் விலகுகிறது. பசுவை
தானம் செய்ய இயலாதவர்கள் ஆலயங்களில் உள்ள பசுவை அதன் உயிர் உள்ளவரை, அதற்கு தேவையான
உணவை கொடுத்து பராமரிப்பது பசு தானம் செய்வதை விட உயர்ந்த பலனைக் கொடுக்கும். பசுவை
தானம் செய்வதாக இருந்தால் ஆரோக்கியமான பசுவை தானம் செய்ய வேண்டும்.
பராமரிப்பதாக இருந்தால் ஆரோக்கியம் இல்லாத நோய் உள்ள பசுவானாலும்
பராமரிக்கலாம். பால் வற்றிய பசுவை பராமரிக்க பொருள் உதவி செய்பவர்கள் ஆயிரம்
அசுவமேத யாகம் செய்த பலனை அடைவார்கள்.
ஆலயங்களுக்கு பசு தானம் செய்தல்.......
ஆலயங்களில் பசு தானம் செய்தால் கட்டாயம் அந்தப் பசுவை பராமரிக்க தேவையான
நிதியையும் சேர்த்துக் கொடுப்பதே நன்மைதரும். பெரும் பாலான ஆலயங்களுக்கு பசு தானம்
தருபவர்கள் வயதான அல்லது பால் கறவை இல்லாத அல்லது கன்று இல்லாத பசுக்களை தானமாக
கொடுத்து விடுகிறார்கள். பசு தானம் செய்ய எண்ணினால் நல்ல கன்றுடன் கூடிய
ஆரோக்கியமான பசுவையும், அதற்குத் தேவையான பொருளோ, பணமோ சேர்த்தே கொடுப்பது தான்
நல்லது.
No comments:
Post a Comment