** வீட்டின் மொட்டை மாடியில் புறாக்கூண்டு அமைப்பது நல்லதா?
.
எந்த பறவையையும் கூண்டில் அடைத்து வளர்ப்பது பாவச்செயல் தான். புறா இயல்பாகவே ஒற்றைக்காலில் நின்று ஆடிக் கொண்டு, ஒரு மாதிரி சப்தமிட்டுக் கொண்டேயிருக்கும். இது வீட்டுக்கு ஆகாது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
* எனது வீடு தெருக்குத்தில் (தெருக்களின் சந்திப்பில் உள்ள வீடு) உள்ளதாகச் சொல்கிறார்கள். அதைச் சரிசெய்ய ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள். இல்லாவிட்டால் விற்க முடிவு செய்துள்ளோம்.
வாங்குவதற்கு முன்னும் யோசிக்கவில்லை. உங்களிடம் வாங்கப் போகிறவர்களைப் பற்றியும் யோசிக்கவில்லை. சரி....போகட்டும்! இந்த வீடு வாங்கிய பிறகு உங்களின் மனநிலை, வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது என்பதை யோசித்து முடிவு செய்யுங்கள். மற்றவர் ஆயிரம் சொன்னாலும் அவற்றை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற அவசியமில்லை. வாசலில் ஒரு பிள்ளையார் சிலை வைத்து பூஜித்து வந்தால் தெருக்குத்து தோஷம் நீங்கிவிடும். உங்களின் வாழ்வு படிப்படியாக உயரும்.
* தீபத்தை வாயால் ஊதி அணைக்கக் கூடாது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், பிறந்தநாளில் குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏற்றி அணைப்பது ஏற்புடையதா?
பெரியவர்கள் இது போன்ற நல்ல விஷயங்களைச் சொல்லி வைத்த காலத்தில், பிறந்தநாளன்று மெழுகுவர்த்தி அணைத்தல், கேக் வெட்டுதல் போன்ற கலாசாரம் நம்மிடத்தில் வரவில்லை. வெள்ளையர்களின் வரவால் விளைந்த ஒரு சில சீர்கேடுகளில் இதுவும் ஒன்று. இது தவறு என்று நாம் சொல்வதைச் சொல்லிக் கொண்டிருப்போம்.
* உடலை விட்டு உயிர் எங்கே போகிறது?
உயிர்களுக்குப் பல பிறவிகள் உண்டு. ஒவ்வொரு பிறவியிலும் பாவ, புண்ணியத்திற்கு தகுந்தாற்போல புல், புழு முதலாக மனிதன் வரையில் உடல் நமக்கு கிடைக்கிறது. பாவச் சுமை குறைந்தால் தான் மனிதப்பிறவி கிடைக்கும். அரிதான மனிதப்பிறவி கிடைத்தும் புண்ணியத்தைத் தேடாமல் பாவச் சுமையை அதிகரித்தால் மீண்டும் பூமியில் பிறப்பு உண்டாகும். பாவம் முற்றிலும் நீங்கிவிட்டால் இறைவன் திருவடியில் பேரின்பவாழ்வு பெற்று மகிழலாம்.

No comments:
Post a Comment