Thursday, June 13, 2013

ஒருநாளைக்கு 86400 விநாடி பயனுள்ள வகையில் செலவழியுங்கள்

உங்கள் கடைசி வாழ்நாள் வரை, தினமும் உங்கள் பாங்க் கணக்கில் 86400 டிபாசிட் செய்யப்படும். ஆனால், அதை அன்றே செலவழித்து விட வேண்டும் என்பது தான் நிபந்தனை. தயாரா?'' என்று கேட்டால், என்ன சொல்வீர்கள்? ""போடுங்க புண்ணியவானே போடுங்க! நீங்க நல்லாயிருக்கணும், தினமும் பைவ் ஸ்டார் ஓட்டலுக்குப் போவேன்,
கண்டதையெல்லாம் வாங்கிப் போடுவேன்!'' என்பீர்கள். ஆனால், நீங்க நினைக்கிற மாதிரி இது பணம் கிடையாது.
ஒருநாளைக்கு எத்தனை விநாடி....86400 விநாடி. இதை தினமும் கடவுள் நம் கணக்கில் டெபாசிட் செய்து விடுகிறார். இதில் ஒரு விநாடியைக் கூட வீணடிக்காமல் நல்லமுறையில் செலவழிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். காலை 6 மணிக்குள் எழுந்திருத்தல், கடவுளை வணங்கி விட்டு அன்றாடப்பணிகளை மளமளவெனக் கவனித்தல், செய்யும் தொழிலை சிரத்தையாக செய்தல், மாலையில் கோயிலுக்கு செல்லுதல், பிள்ளைகளுக்கு நல்ல கதைகளைச் சொல்லுதல், பாடம் கற்றுக் கொடுத்தல், முன்பின் தெரியாதவர்களுக்கு கூட உதவி செய்தல்... இன்னும் எத்தனை எத்தனையோ நற்செயல்களைச் செய்யலாம்.
இப்படி நாம் செய்யும் நல்ல செயல்களுக்கு ஏற்ப, நம் கணக்கில் புண்ணியம் டெபாசிட் ஆகிக் கொண்டே இருக்கும். எவ்வளவு புண்ணியம் சேர்ந்திருக்கிறதோ, அதற்கேற்ப கடவுளின் வீட்டிலும், மனதிலும் இடம் ஒதுக்கப்படும்.
86400 ஐ இனியேனும், பயனுள்ள வகையில் செலவழியுங்கள். ஏனெனில், இந்தக்காலம் இறைவனால் மிச்சம் வைக்கப்படுவதில்லை. அன்றைய தினம் அன்றே கழிந்து போகும். இதை குறைக்கவும் முடியாது, கூட்டவும் முடியாது. காலம் என்னும் தோழனுடன் கைகோர்க்க தயாராகுங்கள்.

No comments:

Post a Comment