Saturday, October 19, 2013

நீரில்லா நெற்றி பாழ்” - ஒளையார்



 ''திரு நீறிட்டார் தாழ்ந்தார். இடாதார் வாழ்ந்தார்.''

கேட்டவர் திகைத்தார்....

குரு விளக்கம் சொன்னார்,

திருநீறு நெற்றியில் இட்டு, யார் தாழ்ந்தார்?
திருநீறு நெற்றியில் இடாது, யார் வாழ்ந்தார்?

''திருநீறு இட்டு யார் தாழ்ந்தார்? இடாது யார் வாழ்ந்தார்?''

மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.
- திருஞானசம்பந்தர்

"நீரில்லா நெற்றி பாழ்” - ஒளையார்

இட்டார் தாழ்ந்தார், இடாதார் வாழ்ந்தார்!
திருமுருக கிருபானந்தவாரிசுவாமிகள் அவர்தான ஒருசமயம் நாகையில் சைவசமயத்தையும் நாயன்மார்கள் மகிமையைப்பற்றியும் பேசிய சொற்பொழிவினிடையே

திரு நீறு நெற்றியில் இட்டார் தாழ்ந்தார்
திருநீறு நெற்றியில் இடாதார் வாழ்ந்தார் என்று சொல்லிமுடித்தார்.

கூட்டம் அப்படியே ஸ்தம்பித்துவிட்டதாம்.

என்ன இவர் இப்படிமுன்னுக்குப்பின்னாகப்பேசுகிறாரே இவ்வளவு நேரம் சிவபெருமான் பெருமையை திருநீறு மகிமையைக்கூறியவரின் வாயால் இப்படி எதற்கு அபத்தமாய் வருகிறது?

முணுமுணுத்தனர் பலர்

திருவாரியாரும் சிறிதுநேரம் கூட்டத்தினரை நோக்கி அமைதியாகவே வீற்றிருந்தார்
பிறகு,

திருநீறு நெற்றியில் இட்டு, யார் தாழ்ந்தார்?
திருநீறு நெற்றியில் இடாது, யார் வாழ்ந்தார்?

பதில் இல்லை என்பதுதான்!’

என்று முடித்த

வாரியாரின் சிரிப்பு ஒலியோடு கூட்டத்தினரின் கைத்தட்டல் ஒலியும் சேர்ந்துகொள்ள அரங்கம் அதிர்ந்தது!

No comments:

Post a Comment