Saturday, October 19, 2013

தூய்மையாக இருக்கவேண்டும்??----

தூய்மையாக இருக்கவேண்டும்??---- மனம், ஊர், ஆறு இவை
~~~~~~~~~~~~~~
காடு கெடா ஆடவிடு
ஊரு கெடா நூலவிடு
ஆறு கெடா நாணல்விடு...
மூனும் கெடா முதலவிடு.

இதன் விளக்கம்:-

நம் மனம் ஒரு காடு அது கெடாமல் இருக்க வேண்டும் என்றால் இறை சிந்தனையை அதில் ஆட விடவேண்டும். ஊர் கெடாமல் இருக்க வேண்டும் என்றால் இதிகாசம், புராணங்கள் போன்ற நூல்களை விடவேண்டும். ஆறு கெடாமல் இருக்கவேண்டும் ஆற்றங்கரையில் படர்ந்து இருக்கும் கோரைபுல், நாணல் போன்றவற்றை எடுத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையேல் அவை ஆற்றையே துற்றுவிடும். வீடு, மனை, மாட்சி இவை மூன்று கெடாமல் இருக்கவேண்டும் என்றால் மேற்கூறிய மனம், ஊர், ஆறு இவை மூன்று தூய்மையாக இருக்கவேண்டும்

No comments:

Post a Comment