கம்பராமாயணம் அரங்கேற்றம் செய்யப்படும்போது கம்பர் எழுதிய ’துமி’என்ற வார்த்தையை ஒட்டக்கூத்தர் ''துமி'' என்று தமிழில் வார்த்தையே கிடையாது என்று விமர்சித்தாராம் !
மன்னர் கம்பரிடம் இது பற்றி கேட்க ...
“ மன்னா! மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ள சொல் தான் துமி.” என்று கம்பர் பதில் சொன்னாராம் !ஆனால் ஒட்டக்கூத்தரோ , தமிழில் துமி என்கிற வார்த்தை கிடையவே கிடையாது என்று வாதிட .... கம்பரின் காவிய அரங்கேற்றம் நிறுத்தப்பட்டு விட்டது!...
மறு நாள் அரசர் நகருலா செல்லும்போது கூடவே கம்பரும் ஒட்டக்கூத்தரும் செல்ல .....அப்போது ..
ஒரு வீட்டில் இருந்து ஒரு வினோத சத்தம்!
. “ இது என்ன சத்தம்” என்று ராஜா கேட்க....கம்பர் உடனே “ மத்தினால் தயிர் கடையும் சத்தம் மன்னா” என்று சொன்னாராம் ...ராஜாவை இந்த சத்தம் பரவசப்படுத்த .....“ இந்த சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல இருக்கிறதே! கொஞ்சம் நேரம் நின்று கேட்போமே” என்று சொன்னாராம் !
சற்று நேரத்தில் அந்த வீட்டினுள்ளிருந்து ஒரு பெண்ணின் குரல் !
'' குழந்தைகளா ....கொஞ்சம் தள்ளி நில்லுங்க. துமி தெறிக்கும்!''...
இந்த வார்த்தைகள் கேட்டு கம்பர் துள்ளி குதித்தார் ! பரவசம் பொங்க ....
'' ராஜா : இதோ துமி என்று வார்த்தை இருக்கிறதே! ...அதாவது , தயிர்த்துளி குழந்தைகள் உடம்பு மீது தெறித்து விடும் என்று அந்த பெண்மணி எச்சரிக்கிறாள் என்பதை கம்பர் விளக்க.......
ஒட்டக்கூத்தரின் முகத்தில் ஈயாட வில்லை !
மறு நாள் கம்பராமாயணம் மீண்டும் அரங்கேற்றம்.!!
கம்பர் நெகிழ்ந்து ராமாயணத்தை ஆரம்பிக்கும் முன் கண்ணில் நீர் மல்க தயிர் கடைந்த பெண்ணை நினைந்து “ சாட்சாத் கலைவாணியே வந்து என் பாடலுக்கு சாட்சி சொன்னாள்” என்று முகவுரை பாடலை பாடி, பின் அரங்கேற்றத்தை தொடர்ந்தாராம் !!

No comments:
Post a Comment