மூன்று குணங்கள்
மனிதனுக்கு மனிதன் குணம் மாறுபடும். இவை அனைத்தும் சாத்வீகம், ரஜோ, தாமச குணங்கள் என்ற மூன்று வகைக்குள் அடங்கிவிடும். சாத்வீக குணம் மனிதனுக்கு ஞானஒளியையும், நன்மார்க்கத்தில் விருப்பத்தையும் அளிக்கிறது. ரஜோ குணம்- ஆசை, பற்று முதலிய குணங்களை அளித்து, கர்மங்களில் ஈடுபடத் தூண்டுகிறது. தாமசகுணம்- மயக்கம், சோம்பல், உறக்கம் முதலியவற்றை ஏற்படச் செய்கிறது. இம்மூன்று குணங்களும் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொன்று அதிகமாக இருக்கும், அவற்றிற்கேற்ப மனிதன் செயல்படுவான்.
மனிதன் சோம்பலாக இருப்பதைவிட ஏதாவது வேலையில் ஈடுபடுவது நல்லது. எனவே, சோம்பலைக் கொடுக்கும் தாமச குணத்தை அகற்றி, வேலையில் ஈடுபடும் ரஜோ குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதன்பின் அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்துகின்ற சத்துவ குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த மூன்று குணங்களின் தன்மைகளைச் சரியாகப் புரிந்துகொண்டுவிட்டால், ஒருவன் இந்தப் பிறவிப் பெருங்கடலை மகிழ்ச்சியாகத் தாண்டிவிட முடியும்.
No comments:
Post a Comment