Saturday, July 19, 2014

மகாபாரதத்தில் ஒரு காட்சி

மகாபாரதத்தில் ஒரு காட்சி
பாண்டு மன்னன் இறந்துவிட்டார்,பாண்டவர்கள் ஐவரும் இயற்க்கைக்கு முரனானதொரு செயலில் இறங்கி விட்டனர்.
பாண்டு மன்னன் இறக்கும் தருணத்தில் தன் மகன்களிடம் கூறினார் ‘நான் இறந்த பின் என் உடலை புதைக்கவோ எரிக்கவோ வேண்டாம் ,மாறாக என் உடலை அறுத்து சாப்பிட்டு விடுங்கள்’ ஏன் என்றால், என் உடலை உண்பவர்களுக்கு மூன்று காலங்களும் நிதர்சனமாக உணரும் அறிவு கிடைக்கும்” .
என்ன இருந்தாலும் மனிதனாய் பிறந்தவர்கள் எதிர்கால நிகழ்வுகளை உணர்ந்து கொண்டால் கால சக்கரம் எவ்வாறு சுழழும் .
‘தருமா நில் என்ன காரியம் செய்ய துணிந்தாய்’ கிருஷ்ணா பரமாத்மாவின் குரல் கேட்டு திரும்பினார் யுதிஷ்டிரர், உலக தருமங்கள் உணர்ந்த நீ ஒரு பிரேதத்தை உண்ணலாமா? உன் தந்தையின் உடலை முறை படி அடக்கம் செய் என்று அறிவுரை கூறினார்..
கடவுள் கிருஷ்ணரின் அறிவுரை ஏற்பதா,அல்லது தந்தை சொல் நிறைவேற்றுவதா குழம்பினார் தருமர்,
கிருஷ்ணரின் வார்த்தையை நிறைவேற்ற, தந்தையை அடக்கம் செய்ய இடம் தேட சென்றார்கள் பாண்டவர்கள். சகதேவா நீ மட்டும் ஏன் உன் தந்தை உடல் அருகில் நிற்கின்றாய் ?
இல்லை கிருஷ்ணா நான் என் தந்தையின் உடலுக்கு காவல் நிற்கின்றேன்,சரி பார்த்துக்கொள் என கூறி கிருஷ்ணர் அகன்ற நேரத்தில் தன தந்தையின் உடலில் இருந்து சிறு துளி தசையை கிள்ளி வாயில் இட்டான் சகாதேவன்.
இதனை அந்த கணமே உணர்ந்த கிரிஷ்ணர் அப்பொழுதே சகாதேவனிடம் வந்தார், என்ன காரியம் செய்தாய் சகாதேவா என் சொல்லையும் தர்மத்தையும் மீறிவிட்டாய்,
இதற்க்காக நான் உனக்கு சாபம் அளிக்க போகின்றேன், என்ற கிருஷ்ணரை பார்த்த சகாதேவன் எங்கள் தந்தை எங்களிடம் கூறியபடி நான் அவரின் சிறு தசையை உண்டதால் மூன்று காலமும் அறியும் அறிவு எனக்கு பலிதமானது..
இதனை என் சகோதரர்களு பெறும்படி செய்வேன் என்றவனிடம் ,சகாதேவா காலத்தின் தலைவன் நான் ,காலத்தை நடத்தவும் உணரவும் எல்லோருக்கும் தகுதி இல்லை. உன் ஒருவனுக்கு கிடைத்த இந்த யோகமானது உன் சகோதரர்களுக்கு கிடைகா..அவர்கள் உன் தந்தையின் தசையை உண்ண நினைத்து நெருங்கும் முன் அவர் உடல் எறிந்துவிடும் என நான் சாபம் அளிக்கின்றேன் .
இதை கேட்ட சகாதேவன், நீர் தெய்வமாக இருந்தாலும் ஒரு தந்தையால் மகன்களுக்கு கொடுக்கப்பட்டவையை அவர்களுக்கு கிடைக்க விடாமல் தடுத்த காரணத்துக்காக நானும் உமக்கு சாபம் அளிக்கப்போகின்றேன்
நீரே இந்த உலகத்திற்கும் உலகத்தில் உள்ள அனைத்து ஜீவ ஜட பொருள்களுக்கும் ஆதி, ஆத்ம தந்தை
ஆகிலும் ,இந்த பிறவிக்கு உரிய எங்கள் காரண காரிய தந்தையும் நீயாகவே இருந்து என் உடன்பிறந்த ஐவருக்கும் இந்த உலகில் ஏற்ப்படும் அனைத்து இன்னல்களையும் ,ஒரு தந்தையின் இடத்தில் இருந்து தீர்த்துவைத்து பாண்டுவின் புத்திரர்கள் அனைவருக்கும் உனது திருவடியே இறுதி அடைக்கலமாக கொடுக்காவிட்டால் உமது தலை வெடிக்க கடவது என சாபமிட்டான்.
மூன்று காலம் உணர்ந்தாலும், முதல் சாபத்தில் ஐவர்க்கு மட்டும், என்றும் இரண்டாவது ஒன்றில் பாண்டுவின் புத்திரர்கள் என்ற பதத்தினால் கர்ணனும் வைகுந்த ப்ராப்தி அடைந்தார்.முக்காலமும் அறிந்ததால் சகாதேவன் பிரம்ம ஞானி ஆனான்.

No comments:

Post a Comment