Friday, July 18, 2014

யாக மண்டபத்தின் அமைப்பு.

யாக மண்டபத்தின் அமைப்பு.

     

                      சாதார்ண யாகசாலை நான்கு புறமும் வாசல்கள் கொண்டதாகவும் 16 தூண்கள் தாங்கப்பட்டதாகவும் இருக்கும்.நடுவில் ஒரு சதுர வேதிகை (மேடை) இருக்கும்.16 தூண்களில் 4 தூண்கள் மேடையின் நான்கு மூலைகளிலும் ,4தூண்கள் யாக மண்டபத்தில் வெளி மூலைகளிலும் அமைய ஏனைய எட்டும் நான்கு வாசல்களில் இரு பக்கங்களும் இருக்கும்.சாதார்ணமாக மகோற்சவ யாகத்தில் மேற்கு புறம் மட்டும் வாசல் இருக்கும்.
எஆனைய மூன்று பக்கங்களிலும் வாசலின் அடையாலமாக துவாரங்கல் இருக்கும்.
யாகமண்டபத்தில் கும்பங்கள் வைக்கப்படும் இடங்கள் ஓமகுண்டம் வைக்கப்படும் இடம் பூஜை மேற்கொள்ள நடமாடும் இடம் என வகுக்கப்பட்டுள்ளன.வாயு மூலையில் சந்திர கும்பமும் அதை சுற்றி பாலிகை களும் வைக்கப்படும்.ஈசான மூலையில் யாகேச்வரன் யாகேஸ்வரி இருக்கையும் நிருதி மூலையில் புண்ணியாக வாசன மேடையும் அமையும்.
கும்பங்களை பூஜிப்பது தூண்கள்,மண்டபங்கள், தோரணங்கள்,திரைச்சீலை,மேல்விதானம் முதலிய சகல உருப்புக்களுக்கும் கற்பிதம் செய்து விரிவாக பூஜிப்பதும் மண்டபபூஜை எனப்படும்.

No comments:

Post a Comment