1. தச உபசாரா (10 வகை)
1. அர்க்க்யம் (பூஜைக்குரிய ஜலம்) 2. பாத்யம் (கால் கழவ ஜலம்) 3. ஆசமனம் (உட்கொள்ளூம் நீர்) 4. ஸ்நானம் (குளியல்) 5. வஸ்த்ரம் (ஆடை) 6. கந்தம் (சந்தனம்) 7. புஷ்பம் (பூ) 8. தூபம் (சாம்பிராணி காட்டல்) 9. தீபம் (விளக்கு காட்டல்) 10. நைவேத்யம் (படையல்) என இவ்வாறு 10 வகை உபசார முறைகளை ஜ்ஞான மாலை.கூறும்
2. த்வாதச உபசாரா (12.வகை)
இனி சொல்லப்போகும் 16 வகை உபசாரகங்களிலே ஆஸனம் (இ௫க்கை) ஸ்வாகதம் (வரவேற்றல்) வஸ்த்ரம் (ஆடை) பூஷா (அணிகள்)இவற்றைத் தவிர்த்து மற்ற 12 உபசாரங்ககைளயும் செய்து கொள்ளவும் என்கிறது தந்த்ரம்.
3. ஷோடச உபசாரா (16.வகை)
1. பாத்யம் (கால் அலம்ப ஜலம்) 2. அர்க்க்யம் (பூகைஜக்குரிய ஜலம்) 3. ஆசமனம் (நீர் அ௫ந்தல்) 4. ஸ்நானம் (குளியல்) 5. வஸ்த்ரம் (ஆடை) 6. பூஷணம் (அணிகள்) 7. கந்தம் (சந்தனம்) 8. புஷ்பம் (மலர்) 9. தூபம் (சாம்ப்ராணி காட்டல்) 10. தீபம் (விளக்கு காட்டல்) 11. நைவேத்யம் (படையல்) 12. தாம்பூலம் (வெற்றிலை-பாக்கு தரல்) 13. நீராஜனம் (கற்பூர தீபம் எடத்தல்) 14. அஞ்ஜலி (கை ௬ப்பல்) 15. பரிக்ரமா (வலம் வரல்) 16. நமஸ்காரம் (வணங்கல்) என 16 வகைககைளப் பரமானந்த தந்த்ரம் ௬றுகிறது
வேறு வகை
4. ஆனால் "பரசுராம கல்ப ஸூத்ரமோ"
1. அணிகள் 2. கை௬ப்பல் 3. வலம் வரல் 4. வணங்கல் இத்தகைய உபசாரங்களுக்குப் பதிலாக 1. சத்ரம் (குடை) 2. சாமரம் (சாமரை வீசல்)
3. தர்ப்பணம் (கண்ணாடி காட்டல்) 4. ரக்ஷா (காப்பு) இவற்றை மேற்கூறிய வற்றோடு சேர்த்தால் 16 வகை உபசாரங்களாகும் என்று
கூறுகிறது.
வேறு வகை
5. "ஜ்ஞான மாலா"வோ
1. ஆஸனம் (இருக்கை), 2. ஸ்வாகதம் (வரவேற்றல்), 3. அர்க்க்யம்
(பூஜை ஜலம்), 4. பாத்யம் (கால் கழ்வ ஜலம்), 5. ஆசமனீயம் (நீர் அருந்தல்), 6. மதுபர்க்கம் (இனிப்பு வகை), 7. ஸ்நானம் (குளியல்),
8. வஸ்த்ரம் (ஆடை), 9. ஆபூஷணம் (அணிகலன்கள்), 10. ஸுகந்த்தி
(வாஸனைப் பொருள்), 11. புஷ்பம் (மலர்), 12. தூபம் (சாம்ப்ராணிப் புகை காட்டல்), 13. தீபம் (நெய் விளக்கு ஏற்றிக் காட்டல்), 14. நைவேத்யம் (படையல்), 15. மாலா (பூமாலை), 16. அனுலேபனம் (மேல் பூச்சு) என்ற 16 வகை உபசாரங்களைக் கூறும்.
வேறு வகை
6, நாகதேவன் என்பவரோ,
1. ஸ்வாகதம் (வரவேற்பு) 2. மதுபர்க்கம் (இனிப்புகள்) 3. ஆபூஷணம் (அணிகள்) 4. ஸுகந்தி (வாஸனைப் பொ௫ள்) 5. புஷ்பம் (பூ) 6. அனுலேபனம் (மேல் பூச்சு) இத்தகைய உபசாங்களை விட்டு மேலே ௬றப்பட்ட 16 வகை உபசாரங்களிலே 1. ஆவாஹனம் (உயிரூட்டல்) 2. உபவீதம்(பூணூல்) 3. கந்தம்(சந்தனம்) 4. நமஸ்காரம்(வணங்கல்) 5. ப்ரதக்ஷிணம் (வலம் வரல்) 6. உத்வாஸன்ம் (இ௫ப்பிடம் அனுப்பல்)ஆகிய இவற்றைச் சேர்க்கவும் என்கிறார்
வேறு வகை
7. விச்வாமித்ர ஸம்ஹிதையொ;
தேவதைகளுக்கு மிகவும் ப்ரியமான 16 வகைகள்
1. ஆஸனம் 2. ஸ்வாகதம். 3. பாத்யம், 4. அர்க்க்யம், 5. ஆசமனீயம், 6. மதுபர்க்கம், 7. ஸ்நானம், 8. வஸ்த்ரம், 9. அலங்காரம் (அணி செய்தல்), 10. கந்தம், 11. புஷ்பம், 12. தூபம், 13. தீபம், 14. நைவேத்யம், 15. தாம்பூலம், 16. நமஸ்காரம் என வகுக்கிறது.
வேறு வகை
#8. "க்ரம ப்ரதீபமோ"
1. ஆவாஹனம் 2. ஆஸனம் 3. பாத்யம் 4. அர்க்யம் 5. ஆசமனீயம் 6. ஸ்நானம் 7. வஸ்த்ரம் 8. இபவீதம் 9. கந்தம் 10. மாலா 11. தூபம் 12. தீபம் 13. நைவேத்யம் 14. தாம்பூலம் 15. ப்ரதக்ஷிணம் 16. புஷ்பாஞ்ஜலி (பூ வணக்கம்) எனக் காட்டிகிறது.
9. அஷ்ட த்ரிம்சத் உபசாரா (38 வகை)
1. ஆஸனம் 2. ஆவாஹனம் 3. உபஸ்த்திதி (நிலைநிறுத்தல்) 4. ஸாந்நித்யம் (எதிர்த் தோன்றல்) 5. ஆபிமுக்யம் (எதிராக வரல்)
6. ஸ்த்திரீக்ருதி (உறுதி செய்தல்) 7. ப்ரஸாதனம் (தேற்றம்), 8. அர்க்க்யம், 9. பாத்யம், 10. புநராசமனம் (மறுபடி நீர௫ந்தல்) 11. மதுபர்க்கம் (இனிப்புகள்) 12. உபஸ்த்ரம் (தொடல்) 13. ஸ்நானம் 14. நீராஜனம் 15. வஸ்த்ரம் 16. ஆசமனம் 17. உபவீதம் (பூணூல்) 18. புநராசமசம் 19. பூஷ்ணம் 20. தர்ப்பணாவலோகனம்(கண்ணாடி பார்த்தல்) 21. கந்தம் 22. புஷ்பம் 23. தூபம் 24. தீபம் 25. நைவேத்யம் 26. பானீயம் (நீர் அருந்தல்) 27. ஆசமனம் 28. ஹஸ்தாவாஸம் (கை கழவல்) 29. தாம்பூலம் 30. அனுலேபம் (பூச்சு) 31. புஷ்பாஜ்ஜலி 32. கீதம் (பாட்டு) 33. வாத்யம் (மேளதாளம் வாசித்தல்) 34. ந்ருத்யம் (அபிந்யித்தல்) 35. ஸதுதி (துதித்தல்) 36.ப்ரதக்ஷிணம் 37. புஷ்பாஞ்ஜ்லி 38. நமஸ்காரம் (வணங்கல்).
10. சது ஷஷ்டி உபசாரா (64 வகைகள்)
சக்தி பூஜைக்கு மட்டூம் உரித்தானவை, 64 வகையான உபசாராங்கள்
என ஸித்தயாமளம் ௬றுவதைக் காணலாம் 1. ஆஸனாரோபணம் (இருக்கையில் அமர்தல்) 2. ஸுகந்தி தைலாப் ப்யங்கனம் (வாஸனைத் தைலக் குளியல்)
3. மஜ்ஜனசாலா ப்ரவேசனம் (குளியலறையில் செல்லல்) 4. மஜ்ஜன மணிபீட உபவேசனம் (குளியலறையிலுள்ள மணி பீடத்தில் அமர்தல்)
5. திவ்ய ஸ்நானீயகம் (தெய்வீகக் குளியல்)
6. உத்வர்த்தன ஸ்நானம் (பூச்சுப் பூசிக் குளித்தல்)
7. உஷ்ணோதக ஸ்நான்ம் (வெந்நீர்க் குளியல்)
8. கனக கலச ஸ்த்தித ஸகல தீர்த்தாபிஷேகம் (தங்கக் குடத்திலுள்ள எல்லாப் புண்ய தீர்த்தம் சேர்ந்த ஸ்நானம்)
9. தெளத வஸ்த்ர மார்ஜ்ஜனம் (உலர்ந்த ஆடை கொண்டு துடைத்தல்)
10. அருண துகூல பரிதானம் (செம்பட்டாடை உடுத்தல்)
11. அருண துகூல உத்தரீயம் (செம்பட்டு மேலாடை சாற்றல்)
12. அலேபனா மண்டப ப்ரவேசனம் (அலங்காரப் பூச்சு மண்டபம் அடைதல்)
13. ஆலேபன மணி பீட உபவேசனம் (அலங்காரத்திற்குரிய மணி பீடத்தில்
அமர்தல்
14. சந்தனம்-அகரு-குங்குமம் (குங்குமப் பூ) -கற்பூரம் (பச்சைக் கற்பூரம்)-
கஸ்தூரீ-கோரோசனை-திவ்ய கந்தாதி ஸர்வ அனுபேனம் (இத்தகைய
வாஸனைப் பொருள்களைப் பூசிடல்)
15. கேசமாரப்ப்ய காலா கரு தூப-மல்லிகா-ஜாதி-சம்பகம்-அசோகம்-
சதபத்ரம்-பூகம்-குட்மலீ புந்நாகம்-யூதி ஸர்வ ருது குஸு மமாலா
பூஷணம் (கூந்தலுக்குத் தூபம் காட்டி மல்லிகை-ஜாதிப்-புஷ்பம்-சம்பகம்
அசோகம் முதலிய மலர்களைச் சூட்டி அலங்காரம் செய்தல்)
16. பூஷண மண்டப ப்ரவேசனம் (அலங்கார மண்டபம் நுழைதல்)
17. பூஷண மணி பீட உபவேசனம் (அணி செய்யக் கூடிய மணி பீடத்தில்
அமர்த்தல்)
18. நவமணி முகுடம்(நவரத்ன க்ரீடம் சார்த்தல்)
19. சந்த்ர சகலம் (பிறைச் சந்திரனைச் சூட்டல்)
20. ஸீமந்த ஸிந்தூரம் (வகிட்டில் செந்தூரப் பொடி தடவல்)
21. காலாஞ்ஜனம் (கறுமையிடல்)
22. நாஸாபரணம் (மூக்குத்தி பூட்டல்)
23. அதர யாவகம் (உதட்டுச் சாயம் பூசல்)
24. க்ரதன பூஷணம் (மணிகோத்த அணி)
25. கனக சித்ர பதக்கம் (தங்கப் பதக்கம்)
26. திலகரத்னம் (ரத்ன திலகம் சேர்த்தல்)
27. மஹா பதக்கம் (பெரிய பதக்கம்)
28. முக்தாவளி (முத்து மாலை அணிவித்தல்)
29. ஏகாவலி (ஒற்றை வடச் சங்கிலி போடல்)
30. தேவச் சந்தகம் (ஒர் அணி)
31. கேயூரயுகளம் (தோள் அணிபூட்டல்)
32. வளயாவளி (வளையல்கள் அணிவித்தல்)
33. ஹாராவளி (மாலை வரிசைகள் போடல்)
34. கர்ப்ப்பகாவளி (இடுப்புச் சங்கிலி பூட்டல்)
35. காஞ்சீதாம (ஒட்டியாணம் போடல்)
36. கடி ஸூத்ரம் (அரைஞாண் பூட்டல்)
37. சோபனாக்யாபரணம் (சோபன அணி)
38. பாதவாடகம் (கால்காப்பு போடல்)
39. ரத்னநூபுரம் (ரத்னச் சலங்கை அணிவித்தல்)
40. பாதாங்குலீயகம் (மெட்டி பூட்டல்)
41. ஏககரேபாச: (ஒரு கையில் பாசக் கயிறு)
42. அந்யகரே அங்குசம் (மற்றொரு கையில் அங்குசம்)
43. இதர கரே புண்ட்ரேக்ஷுசாப: (இன்னொரு கையில் கரும்பு வில்)
44. அபரகரே புஷ்ப பாணா: (மற்றொரு கையில் மலரம்பு)
45. ஸ்ரீமன் மாணிக்ய பாதுகே (பெருமைமிகும் மாணிக்கத் தாலான கால் ஜோடுகள் பூட்டல்)
46. ஸ்வஸமான வேசாஸ்த்ராவரண தேவதாபி:ஸஹஸிம் ஸாஸனா ரோஹணம் (தனக்கு நிகரான சுற்றுப்புறத் தேவதைகளுடன் கூட ஸிங்காதனத்தில் வீற்றிருத்தல்)
47. காமேச்வரபர்யங்க ஆரோஹணம் (காமேசனின் கட்டிலில் அமர்தல்)
48. அம்ருதாசனசஷகம் (அமுதம் பருகும் பாத்ரம் வைத்திருத்தல்)
49.ஆசமனீயகம் (நீர் உட்கொள்ளல்)
50. கற்பூர வீடிகா (பச்சைக் கற்பூர வெற்றிலை பாக்கு)
51. ஆனந்த உல்லாஸ விலாஸஹ்ராஸ: (ஆனந்தகரமான உல்லாஸப் புன்னகை பூத்தல்)
52. மங்கள ஆரார்த்திகம் (மங்கள ஆரத்தி எடுத்தல்)
53. ச்வேதச் சத்ரம் (வெண் கொற்றக் குடை பிடித்தல்)
54. சாமரயுகளம் (இரட்டைச் சாமரம் வீசல்)
55. தர்ப்பண: (கண்ணாடி காட்டிப் பார்த்தல்)
56. தாளவ்ருந்தம் (பனை விசிறி வீசல்)
57. கந்த: (சந்தனம் பூசல்)
58. புஷ்ப: (பூ சார்த்தல்)
59. தூபம் (சாம்ப்ராணி காட்டல்)
60. தீப: (நெய் விளக்கு ஏற்றிக் காட்டல்)
61. நைவேத்யம் (படையலை அமுது செய்வித்தல்)
62. புநராசமனீயம் (மறுபடி நீரருந்துதல்)
63. தாம்பூலம் (வெற்றிலை பாக்கு காட்டல்)
64. வந்தனம் (வணக்கம் செலுத்துதல்)
- இவ்வாறு சக்தி பூஜைக்குரித்தான 64 உபசார பூஜை முறைகளைப் பற்றி ஸித்தயாமள தந்த்ரம் இதுவரை கூறியதைப் பார்த்தோம்.
11 உபசார பூஜை
மேலே இதுவரை எடுத்துக் கூறிய 64 வகை உபசாரங்களோடு மேலும் 8 வகை உபசாரங்களைக் கூட்டிச் செயல்படுவதும் உண்டு. அப்போது
இந்த உபசாரங்கள் 72 ஆகப் பரிணமிக்கிறது. அதாவது:-
1. சிவபாத ப்ரஸூநம் தாரணகரணம் (சிவ பாத மலர்த்தூளிகளைத் த்ரித்தல்)
2. ஆத்ம ரோபணம்.
3. பரிவார விஸ்ருஷ்டி.
4. குருபக்தார்ச்சனம் (குரு பக்தி உள்ளவர்களை வழிபடல்)
5. சைவ புஸ்தக பூஜா (சைவ நூல் வழிபாடு)
6. சிவாக்னி யஜனம் (சிவாக்னியில் யாகம் செய்தல்)
7. சிவபாதோ தக க்ரஹணம் (சிவ பாததீர்த்தத்தை ஏற்றல்)
8. அக்னி ஸஹித ப்ராணாக்னி ஹோத்ரம் (அக்னியோடு ப்ராண அக்னி ஹோத்ரம் செய்தல்)
என இவ்வெட்டையும் பாஸ்கரராயர் சேர்க்கச் சொல்கிறார்.
இதையே பரசுராம கல்ப் ஸூத்ரமும் பதர்கிறது.
இவ்வாறாக உபசார பூஜை முறைகள் 1-2-3-4-5-7-10-12-16-38-64-72 எனக் கணக்கிடப் பட்டிருக்கிறது. இவற்றைத் தவிர மேலும், சில உபசாரத் தொடர்கள் வெவ்வேறு வகையில் சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம்.
மேலும் இத்தகைய தலை சிறந்த உபசார வகைகளைக் கொண்டு ஒரு பூஜாரி - ஸாதகர் - குருக்கள் - அர்ச்சகர்கள் பூஜை முறைகளைச் செய்தால் அவர்களுக்குப் புண்ய பலன் கட்டாயம் கிடைக்கும் என்கிறது "காளிகா புராணம்".
குறிப்பாக இந்த உபசார பூஜைக்கு உரிய மலர் கிடைக்காவிட்டால் தழையையாவது வைத்துப் பூஜிக்கவும். தழையும் கிடைக்காது போனால் ஆங்காங்கு கிடைக்கும் புல் - புதர் - மூலிகை இவற்றை வைத்துக் கொண்டு பூஜையை நிறைவேற்றலாம். மூலிகை முதலியனவும் கிடைக்காது போனால் பக்தியால் மட்டும் பூஜித்து வழிபடவும். எந்த ஒரு பூவினால் புண்யம் கிடைக்கிறதோ; அத்த்கைய நிலையைக் காட்டிலும் பத்து மடங்கு தங்க மலர் சார்த்தின பலன் கிடைக்கும் என்கிறது "பவிஷ்ய புராணம்". மேலும் கந்தம் - புஷ்பம் - பத்ரம் (இலை) - அக்ஷதை - ஜலம் இவை ஸுலபமாகக் கிடைக்கவில்லையானால்; பரவாயில்லை - கவலைப்பட வேண்டாம். மானஸீகமாக உபசாரம் செய்தாலே பூஜை தடைப்படாது என்கிறது "பிச்சிலா தந்த்ரம்". இவற்றைச் செய்ய முடியாது போனாலும், இவற்றின் பிரதிநிதியாக உள்ள ஐவகை உபசாரங்களையாவது அவசியம் விடாமல் செய்ய வேண்டும். இல்லையேல் எவ்விதப் பயனும் இல்லை என "யோகினீ தந்த்ரமானது".
*"கந்தா தி பஞ்சகாபாவே
பூஜா வ்யர்த்தைவ ஸர்வதா".*
இந்த அடிகளை மறக்கக்வடாது.
No comments:
Post a Comment