Monday, August 25, 2014

துளசியை நடுவதற்கும் விதிமுறைகள் இருக்கின்றன.

துளசியை நடுவதற்கு ஏற்ற மாதம்!


அரச மரத்தை விருட்சங்களின் ராஜா என்பார்கள். விரத காலங்களில் அரச மரத்தை வலம் வருவது முக்கியமாகக் கருதப் படுகிறது. புனிதமான இந்தச் செயலை பெரும்பாலும் பெண்களே கடைப்பிடிப்பார்கள்.
அரச மரத்தை நடும் முறையில் கவனிக்கப்பட வேண்டிய விவரம் பவிஷய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
நடப்படும் சமயத்தில், மரத்திற்குப் பக்கத்தில் வேள்வி குண்டம் அமைக்க ஒரு மேடை ஏற்படுத்த வேண்டும். தாமரையை வரைந்து அர்க்கியப் பிரதானம் செய்ய வேண்டும். கலச ஸ்தாபனம் செய்து கந்தம், சுந்தனம், அறுகம்புல், அட்சதை சமர்பிக்க வேண்டும். முதல் கலசத்தில் கணேசர், இரண்டாவதில் பிரம்மா மற்றும் திக்தேவதைகள், நவகிரகங்கள் என்று பூஜை செய்ய வேண்டும்.
விருட்சத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று வைத்து பூஜிக்க வேண்டும். ஹோமம் செய்ய வேண்டும். மரத்திற்குத் தண்ணீர் பாய ஜலதாரை வைக்க வேண்டும். அரச மர ஸ்லோகத்தின் மூலத்தில் அதாவது வேர்ப்பகுதியில் பிரம்மாவும், மத்தியில் விஷ்ணுவும், மேலே சிவனும் சொல்லப்படுகிறது.
தாமரைக் குளம் போன்றவை கட்டுவதற்கு முன் வருண பகவானுக்கு பூஜை செய்ய வேண்டும் கணேசர், வருணன், சங்கரன், பிரம்மா, விஷ்ணுவுக்கு பூஜை செய்து பாயசம் நைவேத்யம் செய்ய வேண்டும்.
வில்வமரம் நடும்போது அதன் வர்ப்பாகத்துக்கு அருகே வைதீக காரியங்களுக்கான மேடை அமைக்க வேண்டும். அதில் மூன்று கலசம் வைத்த கணேசர், விஷ்ணு, சிவனை ஆவாஹாணம் பண்ணி பூஜிக்க வேண்டும்.
வில்வ விருட்சத்துக்கு த்ரயம்பகம் என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும். அதன் பின் ருத்ரன், விஷ்ணு, துர்க்கை, கணபதி, குபேரன் ஆகியோரை பூஜை செய்ய வேண்டும்.
வட விருட்சத்துக்கு (ஆல விருட்சம்) மூன்று முடிச்சு போட்ட சிவப்புக் கயிறைச் சுற்ற வேண்டும். வேரில் யட்சர்கள், நாகர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், மருத் கணங்களுக்கு பூஜை செய்ய வேண்டும்.
வேள்விகளுக்கான மண்டபம் கட்டும் பொழுது, அது புனிதமான இடமாக போவதால் தூய்மையான இடமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த மேடை கல்லாலோ, மரத்தாலோ, புல்தரையாகவோ அமைக்கப்பட வேண்டும். கலச பூஜை செய்து கணேசர், சோமன்(சந்திரன்), விஷ்ணுவை பூஜிக்க வேண்டும். சந்தனம், சிந்தூரம் (குங்குமம்) ஆகியவற்றால் பொட்டிட வேண்டும்.
திக்பாலகர்களை உரிய இடத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும். மேடையின் மத்தியில் மண்டபச் சித்திரம் வரைய வேண்டும். அதில் சூரியன், சோமன், விஷ்ணு ஆகியோருக்கு பூஜை செய்ய வேண்டும். கலசங்களில் இவர்களோடு நவகிரகஙங்களுக்காகவும் பூஜை செய்யப்பட வேண்டும்.
இதே போல் மகாபலிபீடம், தண்ணீர்ப் பந்தல் போன்றவற்றை அமைக்கவும் விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன. பூங்கொடிகள் அமைப்பதற்கு குறித்த நாளுக்கு முதல் நாளே வேள்வி மேடை அமைத்து அதில் கட ஸ்தாபனம் செய்ய வேண்டும். அன்றைய தினம் ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும்.
கலசங்களில் கணேசர், சூரியன், சோமன், அக்னி தேவன், நாராயணன் ஆகியோரை ஆவாகனம் செய்து பூஜை செய்ய வேண்டும். வேள்வியில் தேன் கலந்த பாயசம் ஆகுதி செய்ய வேண்டும். பூங்கொடிகள் அமைக்க வியாழக்கிழமை சிறந்த நாள். கோதுமை கலந்த நைவேத்யம் செய்ய வேண்டும். கொடியை மரத்துடன் இணைத்து, தர்ப்பைப்புல் கலந்த நீரால் நீராட்ட வேண்டும். அரிசி, கோதுமை, தட்சிணைகளை வேத விற்பன்னர்களுக்குத் தர வேண்டும்.
துளசியை நடுவதற்கும் விதிமுறைகள் இருக்கின்றன. ஆடி மாதம் விதிமுறைப்படி பூஜை செய்து துளசியை நடவேண்டும். அன்று சுத்தமான நாளாகவோ, ஏகாதசியாகவோ இருக்க வேண்டும். இரவில் கடஸ்தாபனம் செய்து விஷ்ணு, சோமன், சிவன், பிரம்மா மற்றும் இந்திராதி தேவர்களை பூஜை செய்ய வேண்டும்.
காயத்ரி மந்திரத்தையும் மற்றும் அந்தந்த தெய்வங்களுக்கான மந்திரங்களையும் சொல்லி பூஜை செய்ய வேண்டும். தண்ணீர், பால், முதலியவற்றால் பொழிய வேண்டும். சுகாசினிப் பெண்கள் மூலமாக மங்கள இசை, பாடல்கள் என்று சங்கீத சேவை செய்து உபசாரம் செய்ய வேண்டும். பகவான் நாராயணரை வேள்வி மூலமாகத் திருப்திப்படுத்த வேண்டும். 108 ஆகுதிகள் செய்ய வேண்டும்.
கலியுகத்தில் ஒருவன் எல்லா தேவதைகளையும் பிரதிஷ்டை செய்வது சாத்தியமே. அப்படி பிரதிஷ்டைகள் செய்ய விரும்பும் நாளில், வேதவிற்பன்னர்களுக்கு நெய்யால் செய்த பதார்த்தங்களைக் கொடுத்து மனம் குளிர வைக்க வேண்டும்.
தேவதைகளை துளசி, மாவிலை, அரளி, தாமரை, வன்னி ஆகியவை கொண்டு பூஜிக்கலாம். அதன்பின் மூர்த்திகளை பிராண பிரதிஷ்டை செய்து ஜீவ களையை வரவழைக்க வேண்டும்.
பகவதியின் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் பொழுது தாமரையுடன் கூடிய நீராலும், பஞ்ச கவ்யத்தாலும் ஸ்நானம் செய்விக்க வேண்டும். பகவதி, துர்க்கை இவர்களுக்கு கும்பத்தின் மீது அர்ச்சனை செய்ய வேண்டும். இதன்பின் பிராண பிரதிஷ்டை செய்ய வேண்டும். வில்வ இலைகள், வில்வ பழங்களை ஆகுதியில் இட வேண்டும்.
தட்சிணைகளில் சொர்ணம் கலந்திருப்பது அவசியம். அம்பிகைக்கு 3 நாட்களுக்கு சுகந்தமான திரவியங்கள், மூலிகைகள் கலவையினால் அபிஷேகம் செய்ய வேண்டும். பலவிதமான நைவேத்யங்கள் செய்ய வேண்டும். முக்கிய கலசத்திற்கு மூன்று நாட்களுக்கு அதிகாலையில் அர்ச்சனை செய்ய வேண்டும். மூன்றாம் நாள் கன்னிப் பெண்களால் தேவி பகவதிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். எட்டாம் நாள் இரவு விசேஷ பூஜை செய்து பாயச ஹோமம் செய்ய வேண்டும்.
சிவலிங்கத்தை ஆகம விதிகளின்படி பூஜை செய்ய வேண்டும். முதல் நாள் மூன்று அந்தணர்களுக்கு உணவிட வேண்டும். பிம்பங்களை பரஸ்தானம் செய்து சக்தியூட்ட வேண்டும். இரண்டாம் நாள் காலையில் ஆச்சார்யருக்கு ஆராதனை, உபசாரம் செய்து அவரின் ஆசியைப் பெற வேண்டும். பிறகு சிவனின் பரிவார தேவதைகளுக்கு பூஜை செய்ய வேண்டும்.
அம்பிகை, காமாட்சி, இந்த்ராட்சி, அபராஜிதா, சூரியன், பிரம்மா, கணேசர், தேவதைகள் மற்றும் திரிபுராதேவி, புவனேஸ்வரி ஆகியோரின் பிரதிமைகளை பிரதிஷ்டை செய்து உயிரூட்டி வீரியமளிக்க பிராணபிரதிஷ்டை செய்ய வேண்டும். இரவில் சிலைகளின் புனிதம் கெட்டுவிடாமல் இருக்க காவலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தேவி பிரதிஷ்டை செய்த பின் குமாரி பூஜை செய்ய வேண்டும்.
உற்பாதங்களும், அபசகுனங்களும் ஏற்படும்பொழுது என்ன செய்ய வேண்டும்?
உற்பாதங்கள் அதாவது இடைஞ்சல்கள் மூன்று வகைப்படும். தெய்வீகமாய் ஏற்படுபவை “திவ்ய’ எனப்படும். பூமியின் சுழற்சியால், இயற்கை பாதிப்பால் ஏற்படுபவை அந்தரிக்ஷம் எனப்படும், கிரகம், நட்சத்திரம் ஆகியவற்றால் எற்படும் பயம், நடக்கக்கூடாதது நடந்து விடுமோ என்ற சந்தேகம் இவையெல்லாம் திவ்யம். எரி நட்சத்திரப் பாதை திசைகளின் விபரீத சுழற்சியால் மண்டல்ஙகள் வானில் காணுதல், சூரிய சந்திரங்களின் ஒளியில் மாற்றங்கள், ஆகாயத்தில் கந்தர்வ நகரம் காணுதல், அதீத மழை, அல்லது மழை இன்மை இவைகள் எல்லாம் அந்தரிஷம். நீர் நிலைகள், மரங்கள், பூகம்பம், மியி அதிர்வு, எரிமலை ஆகியவை பௌமம். அதாவது பூமியின் உத்பாதம் என்று கூறப்படுகிறது.
திவ்ய, அந்தரிக்ஷ உற்பாதங்களின் விளைவுஒரு வார காலம் நீடிக்கும். இதற்கு பரிகாரமாக வேள்வி செய்யலாம். அப்படி செய்யாவிட்டால் உற்பாதங்களின் விளைவு நெடுங்காலம் நீடிக்கும். பூமியில் தோன்றும் ரத்த பெருக்கு, அகஸ்மாத்தாக ஏற்படும் மின்னல், சமுத்திரத்திற்கு அடியில் ஏற்படும் நெருப்பு (வடவாமுகாக்னி) திடீர் எழுச்சி, சர்ப்பங்கள் மேலேறி வருதல், இவைஎல்லாம் துர்நிமித்தங்கள் மேகத்திலிருந்து விழும் மழை கற்பாறைகள் மீது கீஙழ இறங்கி, ஒரு வாரத்திற்குள்ளாகவே பிராணிகளுக்கு நஷ்டத்தை கொடுக்கும்.
ஒரே ராசியில் சனி, செவ்வாய், ராகு, சூரியன் பாவகிரகங்களாக சஞ்சரித்தால் திடீரென அசம்பாவிதம் நடைபெறும். மக்கள் சமுதாயமே நலிவடையும். சூரியன் சில காலம் தொடர்ந்து தெரியாவிட்டால் அல்லது புகையுடன் தெரிந்தால் அலு“லது வானத்தில் தூமகேது, எரி நட்சத்திரம் தெரிந்து விழுந்தால் அல்ஙது நிலநடுக்கம்அடிக்கடி நிகழ்நாத்ல ராஜாவின் பிறந்த நாள் அன்று வானில் இந்திர தனுஷ் (வானில்) தென்பட்டால் இவை யாவும் துர்நிமித்தங்களாக கருதப்படும்.
பயங்கரமான பூகம்பங்கள், புயல் ஏற்பட்டால் மூன்று மாதத்திற்குள் இரண்டு கிரகணங்கள் ஏற்பட்டால், தவளை பயங்கரமாக சுத்தினால், மஞ்சளாக மழை செய்தால் ராஜயம் நாசமடையும் இதற்கெல்லாம் பரிகாரங்கள் உள்ளன.
அரசன் புறப்படும்பொழுது அண்டங்காக்கை போன்ற தீமையை குறிக்கும் பறவைகள் கொடியில் வந்து அமரக்கூடாது. அரசன் பறப்படும் பொழுது குதிரைகளின் காலடி தறக்கூடாது. அணிந்துள்ள ஆயுதங்கள் நழுவக்கூடாது. குடைகள் சாயக்கூடாது.
பறவை சகுனங்கள் நல்லவை – தீயவை காட்டுவதில் ஆறு விஷயங்கள் உள்ளன. நேரம், திசை, இடம் செய்யும் சத்தம், சத்த இயல்பு, சத்தம் செய்யும் பறவை என்று ஆறு வகைப்படும். ஒருவன் புறப்படும் பொழுது மான் வந்து வெளியே குதித்து விட்டு சென்றால் மரணம் வருவதை குறிப்பதாகும். கபிஞ்சலம் என்ற பறவையை பார்த்தால் துரதிஷ்டத்தை குறிக்கும்.
புறப்படும் பொழுது மயிலை கண்டால் நன்மை ஆனால் மயில் கிரிக் என்று கத்தினால் கெடுதல், தவறை கண்டபடி கத்தினால் தீமை, பசு இயற்கையான உணவை விட்டு அசுத்தங்களை தின்றால் கர்ப்பம் கலையும்.
வில்வ மரத்தில் ஆந்தையோ, கழுகோ உட்காருவது கெடுதல். அது துர்நிமித்தமாகும்.
ஒவ்வொரு கிரகத்துக்கும் துர்நிமித்தங்களை மாற்றியமைக்கவோ அல்லது தீவிரத்தை குறைக்கவோ ஆற்றல் உண்டு. அதற்காக வேள்வி ஆகுதிகள் செய்ய வேண்டும். அங்காரகனையும் (செவ்வாய்) புதனையும் மந்திரங்களை சொல்லி திருப்திப்படுத்த வேண்டும். சூரியன் சந்திரனையும் மந்திரத்தை சொல்லி திருப்திப்படுத்த வேண்டும். ஆகுதி செய்யவேண்டும். இதைப்போல மற்ற கிரகங்களையும் திருப்திப்படுத்த வேண்டும்

No comments:

Post a Comment