பகீரதப்பிரயத்தனம் சாதிக்கமுடியாத ஒன்றைச் சாதிக்கும்போது அதை "பெரிய பகீரதப் பிரயத்தனம்" என்று சுட்டுகிறோம். இதன் பின்னணியாவது: பகூரதன் அயோத்தி அதிபதி (மன்னன்) தம் முன்னோர்களான சகரபுத்திரர்களை உய்தி பெற்ச்செய்யாஅகாய கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தார் கங்கையை பூமிக்குக் கொண்டு வர, இவருக்கு முன்பு, அம்சுமான், திலீபன் என்ற அயோத்தி மன்னர்களும், முயற்சி செய்து தோற்றனர். பகீரதன் மிகக்கடுமையாக முயற்சித்து, பிரம் மனைத் துதித்து பதினாயிரம் ஆண்டுகளும், சிவபெருமானைத் துதித்து ஜயாயிரம் ஆண்டுகளும், மீண்டூம் சிவனைத் துதித்து இரண்டரை ஆயிரம் ஆண்டுகளும், கங்கையைத் துதித்து இரண்டரை ஆயிரம் வருடங்களும் ஆக முப்பதாயிரம் வருடங்கள் தவம் இருந்து கங்கையை பூமிக்கு வரச்செய்தார். இதனால் மிக்கமுயற்சியுடன் ஒரு காரியத்தை ந்றைவேற்றினால். அதை"பகீரதப் பிரயத்தனம்" என்று குறிப்பிடும் வழக்குத் தோன்றியது.
No comments:
Post a Comment