தேவ பூஜைக்குரிய மலர்களின் குண நலன்கள்
1. ஜாதி மல்லிகை
சூடானது, சிறியது, காரமானது, கசப்பானது, வாந்தி யெடுக்கச் செய்வது, முகத்தைத் தூய்மைப்படுத்துவது.
இதனால் கப நோய் - வாத நோய் - முக ரோகம் - பல் நோய் - கண் நோய் இவை அனைத்தும் தீரும்.
இதன் மொட்டுகளினால் - ரணக் கட்டி - கண் நோய் - குஷ்டரோகமும் நன்கு சரியாகி விடும். இது நல்ல மணமுள்ளது. மனம் கவர்வது.
2. மல்லிகை
கசப்பானது - காரமானது.
இது ரணம் - குஷ்டம் - விஷம் - இரத்த விகாரம் - தலை நோய் - முக ரோகம் - தோல் சம்பந்தப்பட்ட நோய்களைத் தீர்க்க வல்லது.
3. அடுக்கு மல்லிகை
குளுமையானது - சிறியது - கசப்பானது. இது கப வாத பித்தம் ஆகிய மூன்று தோஷ்ங்களையும், காது - கண் - முக ரோகங்களையும் போக்கவல்லது.
4. ஊசி மல்லிகை
சுவையானது - குளுமையானது.
இது சர்க்கரை வியாதியையும் - இரத்தத்திலும் - மூத்ரத்திலும் சர்க்கரை கலந்த நோயையும் - பித்தத்தையும் - எரிச்சலையும் - தாகத்தையும் பலதரப்பட்ட தோல் வியாதியையும் குணப்படுத்தும்.
5. மாலதிப்பூ (இது ஒருவகை மல்லிகை)
இது கபம் - பித்தம் - தோல் வியாதி - குஷ்டம் ஆகியவற்றைத் தீர்க்கும். வாந்தி உண்டுபண்ணும். கட்டிகளுக்கும் - காது நோய்க்கும் இதமளிப்பது.
6. வெள்ளை ரோஜா
இது குளுமையானது - கசப்பானது - துவர்ப்பானது.
இது குஷ்டம் போக்குவது - முக நோயைத் தீர்ப்பது.
பித்தத்தையும் - எரிச்சலையும் அடக்குவது.
7. சிவப்பு ரோஜா
இது இரத்த விகாரத்தையும் - தேள் விஷத்தையும் - கப - வாத பித்தங்களையும் போக்குவது.
8. செம்பருத்திப் பூ
இது குழந்தைகளுக்கு இதமானது - எரிச்சலையும் - சர்க்கரை நோயையும் - காது ரோகத்தையும் - உதிரப் போக்கையும் தடுக்கும்.
9. துளஸி
இது குஷ்டம் - கல்லடைப்பு - இரத்த விகாரம் - கபம் - வாதம் இவற்றைப் போக்கும்.
10. தாமரை
இது கபம் - பித்தம் - எரிச்சல் - இரத்த தோஷம் - விஷம் இவற்றை அடக்கிடும்.
No comments:
Post a Comment