தேவ -தேவியர்க்குக் கீழே குறிக்கப்படும் மலர்களைச் சிறிதும் பயன்படுத்தக் கூடாது அதாவது
1,நாகப்பூ,2,குருக்கத்தி,3,மாதவிஎன்ற வாஸந்திப்பூ(clustered Hiptage-eng)
4,தாழைப்பூ,5,விளாம்பூ,6,மகிழம்பூ,7,வாகைப்பூ ,8,வேம்பூ ஆகிய இப்பூக்கள்
தேவதைகளின் பூஜைக்குப் பயன்படுத்தக் கூடாதவை
வேறு வகை
கட்டை விரலால் பூக்களைப் பயன்படுத்தக் கூடாது கீழ்ப்புறமாகப் பூத்துள்ள மலர்களினால் பூஜிக்கக் கூடாது மொட்டானதும்-பாதி மலர்ந்ததுமான பூக்களை உபயோகிக்கக் கூடாது தர்ப்பையின் நுனியால்
இலம் எடுத்து விடக் கூடாது உலர்ந்த்தும்-நிலத்தில் விழுந்தது மான மலர்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் குறிப்பிடுகிறது ஆடையிலோ
கையிலோ-ஆமணக்கு இலையிலோ வைத்து பூவை உபயோகிக்கக் கூடாது பலனளிக்காது போகும்
மலர்களின் தன்மை -பெருமை
1,தாமரை மலர் ஜந்து இரவு வரை கெடாமல் இருக்கும் ,2,வில்வ இலை பத்து இரவு வரை அழுகாதிருக்கும் ,3,துளஸீ இதழ் பன்னிரண்டு நாள்வரை
அழுகாதிருக்கும் எல்லவற்றுள்ளும் நீலத் தாமரையே மிக மிகச் சிறந்ததாகும் ‘ஸற்வேஷா மேவ புஷ்பாணாம் ப்ரவரம் நீல உத்பலம்‘
என்று‘ யோகினீ தந்த்ரம் கூறுகிறது “தேவீ புராணமோ“1,சம்பகம்,2,வள்ளி
3,மாம்பூ.4,தாமரை,5,அலரி என இவையும் சிறந்தவை என்கிறது மிகுந்த
பக்தி ச்ரத்தையோடு கமல மலரைக் கொண்டு சண்டிகையைப் பூஜித்தால்
ஜ்யோதிஷ்டோமம் என்னும் சிறந்த யாகத்தைச் செய்த பலன் கை கூடும்
மனிதன் ஸூர்ய உலகிற்கும் போகும்த் திறமை படைத்தவன் ஆகிறான்
வேறு வகை
1ஜடாமாம்ஸீ2,குக்குலு,3,வெள்ளைச் சந்தனம்,4,காரகில்,5,கற்பூரம்6,சிலாஜித்
7,தேன்,8,கு ங்குமப்பூ ஆகிய இந்த(௮)பொருள்களைப் பொடித்துத் தூளாக்கிப்
பசு நெய்யில் வறுத்துப் புகை போடுவது தெய்வ பூஜைக்கு மிகச் சிறப்புடையதாகும் என்று ‘ஸ்ரீ சங்கரர்‘தமது மானஸ பூஜா ஸ்தோத்ரத்தில்
கூறுகிறார்
No comments:
Post a Comment