பிராமணனாக பிறந்ததால் மட்டும் ப்ராமணத்தன்மை பூர்ணமாக வந்து விடுவதில்லை....விதிக்கப்பட்டுள்ள 40 ஸம்ஸ்காரங்களுக்கும் உபநயனம்தான் ஆதார ஸம்ஸ்காரம் என்றால் மிகையாகாது.
(”வேதமும் பண்பாடும்” புஸ்தகத்திலிருந்து ஒரு பக்கம்...)

பூர்வ ஜன்மங்களின் புண்ணிய பலத்தினால் தான் பிராமணப் பிறவி கிடைத்துள்ளது. , இதை நாம் நன்கு உணர வேண்டும். சில ஸம்ஸ்காரங்களை ரிஷிகள் வகுத்துள்ளனர். அந்த ஸம்ஸ்காரங்கள் மூலம்தான் பிராமணன் பிராமணமாக்கப் படுகின்றான். அந்த ஸம்ஸ்காரங்கள் மொத்தம் 40. இந்த நாற்பதில் ஒன்றுதான் உபநயனம் என்கிற ஸம்ஸ்காரம்.
நோக்கம்:
உபநயனம் என்பது மிக முக்கியமான ஸம்ஸ்காரம். இதன் நோக்கமே குருவிடம் அழைத்துச் செல்லப்பட்டு, ஒப்படைத்துக் கொள்வது; குருவின் மூலம் தகுதி பெற்று குருவால் வேதத்தின் அருகே அழைத்துச் செல்லப்பட்டு அதன் மூலம் பிரம்மமாகிய பரம்பொருளை அடைவது என்று படிப்படியாக நாம் உயர நமக்கு உதவிப்புரிவதே உபநயன ஸம்ஸ்காரம் ஆகும்.

எந்த வயதில்?
ஏழாவது வயதில் உபநயனம் செய்விப்பது உத்தமம். பதினோறாவது வயதிற்குள் போடலாம். ஒரு வேளை தவறினால் 16 வயது தாண்டுவதற்கு முன் போடுவதும் சாஸ்திர சம்மதம் தான். ஆனால் 16 வயதிற்குள் உபநயனம் செய்யாவிட்டால் அவனுக்கு ப்ரம்ஹன்யம் போய்விடும். ஆதலால் பல வைதிக கர்மாக்கள் கைவிடப்பட்டுள்ள இக்காலத்தில் அனைத்திற்கும் ஆதாரமாக விளங்கும் பூணூலையாவது உரிய காலத்தில் சிரத்தையுடன் போட்டுவிப்பது பெற்றோர்களின் தலையாய கடமையாகும்.

நியமங்கள்:
உபநயனத்தை உத்தராயணத்தில் நல்ல முகூர்த்தத்தில் உரிய லக்னத்தில் யதோக்தமாக செய்துவிக்க வேண்டும். உபநயனத்தில் வந்தவர்களை உபசரிப்பது, போட்டோ, வீடியோ முதலிய ஏற்பாடுகள், விருந்தோம்பல் மற்றும் பல லௌகீகமான அம்சங்கள் அவசியம்தான். சந்தேகமில்லை. ஆனால் வைதிகத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் லௌகீகத்திற்கு ப்ராதான்யம் அளித்தால் அது தவறாகும். வைதிகத்தை மையமாக வைத்துதான் உபநயனம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

விதிக்கப்பட்டுள்ள 40 ஸம்ஸ்காரங்களுக்கும் உபநயனம்தான் ஆதார ஸம்ஸ்காரம் என்றால் மிகையாகாது. இதன் மூலம் தான் ஒருவன் வேதம் விதித்துள்ள மற்ற அனைத்து கர்மாக்களையும் செய்ய யோக்யதை பெறுகின்றான்.
இவ்வளவு மகத்துவம் வாய்ந்த உபநயனத்தை நாம் அலக்ஷியப் படுத்தாமல் இருப்பதுதானே நியாயம்?
ப்ரஹ்மோபதேசம் செய்து வைக்க வாய்ப்பு கிடைக்கப் பெற்ற அனைத்து பெற்றோர்களும் பாக்யசாலியாவார்கள். அப்பேற்பட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு உரிய வயதில் உபநயன கர்மாவை யதோக்தமாக நடத்தி வைத்து தங்களது கடமையை சரிவர செய்ய பகவான் அனுக்ரஹம் புரிவாராக!
No comments:
Post a Comment