Thursday, November 20, 2014

மகாபலி

மகாபலிக்கு தான் என்ற கர்வம் தலைக்கேறியது
இறைவனின் திருநாமங்களை சதா சர்வகாலமும் நினைத்துத் தொண்டு செய்து உயர்ந்த பிரகலாதனின் புண்ணிய சரித்திரத்தினை கண்டோம். அதன் கடைசியில் நரசிம்மமாய் வந்த மஹாவிஷ்ணு இரண்யனைக் கொன்று பிரகலாதனைக் காத்து பிரகலாதனுக்கு "இனி நான் உன் குலத்தில் உதித்தோரை கொல்லேன்" என்ற வரத்தினை தருகிறார்..!
அதன் பின்னர் பிரகலாதன் மஹாவிஷ்ணுவின் ஆசியோடும் ஆணையோடும் முடி சூட்டிக்கொண்டு நல்லாட்சி செய்தான்.
அவனுக்குப்பின் வந்த பிரகலாதனின் பேரனான மகாபலி தன்னுடைய வேள்வி யாகத்தின் பயனால் பெரும் வலிமையை பெற்று அசுர சேனையுடன் தேவலோகத்தையும் அபகரித்தான். மகாபலிக்கு தான் என்ற கர்வம் தலைக்கேறியது.
இந்திரன் முதலான தேவர்கள் சென்று மஹாவிஷ்ணுவிடம் முறையிட அவரும் மகாபலியின் ஆணவத்தை அடக்கவும், அவனின் வள்ளல் தன்மையை உலகிற்கு எடுத்துக்காட்டவும் கச்யபர் அதிதியின் வயிற்றிலே புத்திரனாக வந்து பிறந்து வாமன அவதாரம் செய்தார்.
அவர் நினைத்திருந்தால் மகாபலியை தான் நினைத்த மாத்திரத்திலேயே ஒரு வழி செய்திருக்க முடியும் ஆனால் தான் அன்று பிரகலாதனுக்கு கொடுத்த வாக்குறுதிக்காக இந்த லோகங்களுக்கே அதிபதியான ஸ்ரீதரன் இன்று வாமனனாய் மகாபலியிடம் சென்று மூவடி நிலத்தினை பிக்க்ஷை-யாக கேட்டு பின்னர் அவனை கொல்லாமல் பாதாள லோகத்திற்கு அனுப்பி வைத்து பின்னர் நற்கதி அளித்தார் என்பது நாமறிந்த வரலாறு.
ஆகவே இதிலிருந்து ஒரு சிறந்த பக்தனுக்கான இலக்கணத்தை பிரகலாதனிடம் இருந்தும், 
தன்னுடைய உண்மையான பக்தர்களுக்காக பகவானான ஸ்ரீதரன் எப்படியெல்லாம் அல்லல்களையும் ஏற்றுக்கொண்டு விடுகிறான் என்பதனையும் அறிகிறோம்

No comments:

Post a Comment