பிரும் மஹத்தி தோஷமும்,
இராம பிரான் தன்னுடைய மனைவி மற்றும் சகோதரர் லஷ்மணருடன் காட்டில் இருந்த பொழுது அவருடைய தந்தை மரணம் அடைநதார். ஆகவே தன்னுடைய தந்தைக்கு இறுதிக் கடன்களை இராமபிரானால் சரிவர செய்ய முடிய வில்லை.அதன் பின் நடந்த நிகழ்சிகளில் சீதையை அபகரித்துக் கொண்டு சென்ற இராவணனை வதம் செய்து விட்டு திரும்பியவர்; இராமேஸ்வரத்தில் சென்று தன்னுடைய தோஷங்கள் அனைத்தையும் களைய சிவபெருமானை பூஜித்தார். ஆனாலும் அவருடைய மனக் குழப்பம் தீராமல் மனதில் மகிழ்சி இன்றி இருந்தார். பிரும் மஹத்தி தோஷமும், தந்தைக்கு செய்ய வேண்டிய காரியங்களை நிறைவாக செய்யாததினால் என்ன செய்வது என யோசித்துக் கொண்டு இருந்தவர் வசிஷ்ட முனிவரிடம் சென்று ஆலோசனைக் கேட்டார்.
வசிஷ்டரும் மாய வரத்தின் அருகில் உள்ள இன்றைய தர்பண பூமி உள்ள தலத்தின் பெருமைப் பற்றிக் கூறி அங்கு குடி கொண்டு உள்ள முக்தீஸ்வாரனான சிவ பெருமான் தலத்தில் பித்ரு காரியங்களை செய்தால் அவருடைய அனைத்து தோஷங்களும் விலகி விடும் எனக் கூறினார். மேலும் சீதையைக் காப்பாற்ற நடந்த போரில் மரணம் அடைந்த ஜடாயுவை தன்னுடைய மனதில் தந்தைக்கு அடுத்த ஸ்தானத்தில் இராமபிரான் வைத்திருந்ததினால் அவருக்கு செய்ய வேண்டிய பித்ரு கடனும் பாக்கி இருந்ததினால் அவருக்கும் அந்த இடத்தில் தர்பணம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினாராம். இராமபிரானும் உடனே அங்கு சென்று அரி - சிவாதலத்தில் குளித்தப்பின் அங்கு பித்ரு கர்மாக்களை செய்ததும் அவர் இட்ட பிண்டத்தை அவருடைய தந்தையான தசரதரே நேரில் தோன்றி ‘ இராமா, உன் இந்த நிறைவான பித்ரு காரியத்தால் மனம் மகிழ்ந்துள்ள நான் நீ கொடுத்த பிண்டத்தை ஏற்றுக் கொண்டு விட்டேன் . இனி அமைதியாக நான் மேலுலகம் சென்று விடுவேன் ’ எனக் கூறி மறைந்து போனாராம். அதன் பின் மரணம் அடைந்த ஜடாயுவிற்கும் லஷ்மணருடன் சேர்ந்து பித்ரு காரியங்களை செய்து முடித்தார். அதனால் தான் பிண்ட லிங்கங்களுக்கு எதிரில் வலது காலை மடித்த நிலையில் உள்ள இராமபிரானின் சிலையும் அந்த ஆலயத்தில் உள்ளது.
பித்ரு காரியங்கனை செய்து முடிந்ததும் மீண்டும் குளித்து விட்டு; லிங்க வடிவில் இருந்த முக்தீஸ்வரர் என்ற சிவபெருமானுக்கு பூஜைகள் செய்து வழிபட்ட பின் வசிஷ்டர் கூறி இருந்தது போல் சற்று தொலைவில் இருந்த ஸரஸ்வதி ஆலயத்தில் அந்தர் மியாமியாக இருந்த பிரும்மாவையும் சென்று வணங்கி பிரும்மாவும் மனம் மகிழ்ந்து அவர் கணக்கில் இருந்த அனைத்து தோஷங்களையும் கணக்கில் இருந்து விலக்கி விட்டு தோஷ நிவாரணம் தர அனைத்து தோஷங்களும் இராமபிரானை விட்டு விலகின

No comments:
Post a Comment