வேதங்களும், இதிஹாஸ புராணங்களும் பராசர கௌதமாதி ஸ்ம்ருதிகளும் ஒவ்வொரு வர்ணத்தாரும் என்னென்ன விதிகளை கடைப்பிடிக்க வேன்டும் என்று விளக்குகின்றன.
ஒரு பிராம்மணன் பிரம்மசாரியாக இருக்கும்போது தினம் இருவேளை ஸமிதாதானம் திரிகால ஸ்ந்த்யாவந்தனம் செய்ய வேண்டும். குருகுல வாஸம் செய்து தன் வேதத்தையும், சாத்திரங்களையும் முழுமையாக கற்க வேண்டும். இதற்கு பல ஆண்டுகள் ஆகும். திருமணம் ஆனபின் கிருகஸ்த்தனாக இருக்கும்போது நித்திய கர்மாக்களுடன் ஔபாஸனம், அக்னி ஹோத்ரம், வைச்வ தேவம் முதலானவை செய்யவேண்டும். இத்துடன் மேலும் பல கடமைகளும் கூறப்பட்டுள்ளன.
பல நூற்றாண்டுகளுக்கு முன் மக்கள் வர்ணாச்ரம தர்மத்தை கடைப்பிடித்து தங்கள் நித்ய கர்மானுஷ்டானங்களை செவ்வனே செய்து வந்தனர். நாட்டை ஆண்ட மன்னன் பிராம்மணர்களுடைய யோகக்ஷேமத்திற்கு பொறுப்பேற்றான். கிருஹஸ்தர் பிரம்மசாரி களையும் மற்றும் ஸன்யாசி களையும் பராமரித்தனர். காலப் போக்கில் நம் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் பாலாமடை கிராமத்தில் என் பிதாமகர் தலைமுறையில் வந்தவர்கள் வாழ்க்கையை பற்றி என் தந்தையிடம் நான் கேட்டறிந்தேன். அந்த பெரியோரனைவரும் ஸாமவேத வித்பன்னர். அதி காலையில் தாம்ரபர்ணி நதியில் நீராடி நித்ய கர்மாக்களை அனுஷ்டித்தனர். ஆயினும் ஔபாஸனாதி கர்மங்களை சிராத்த தினம் போன்ற சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே செய்தனர். காலப் போக்கில் சந்ததிகள் வளர்ந்தன.
மக்கள் கிராமத்தை விட்டு வௌயே சென்று வேறு பிரவிருத்திகளில் ஈடு பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. விஞ்ஞானவளர்ச்சி நம் வாழ்க்கையில் பல புரட்சிகரமான மாற்றங்களை நாளடைவில் ஏற்படுத்தியது. வேதம் சாத்திரம் இவையே கல்வி என்ற நிலை அறவே மாறியது. பிராம்மணரும் பொறியியல், மருத்துவம், சட்டம், போன்ற பல துறைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என்ற படி, உண்ண உணவு, உடுக்க ஆடை இருக்க வீடு முதல் தன் மக்களுக்கு கல்வி மகளுக்கு திருமணம் போன்ற எதற்கும் பணம் சம்பாதிப்பது அத்தியாவசியமாகிறது ஆனால் அது நேர்மையான தார்மிக வழியில் சம்பாதிக்கப் படவேண்டும்.
यल्लभसे निजकर्मोपत्तं वित्तं तेन विनोदय चित्तम्
என்ற பகவான் ஸ்ரீ சங்கரபகத்பாதரின் அறிவுரையை மனதில் கொள்ள வேண்டும்.
சாத்திரவித்பன்னர்களான சில பிரவசன கர்த்தாக்கள் ராமாயணம் மஹாபாரதம் ஸ்ரீமத் பாகவதம் முதலியவற்றில் கூறப்பட்டுள்ள பல தர்மங்களை பற்றி மிக தௌவாக நமக்கு விளக்குகிறார்கள். ஆனால் வெகு சிலரே, நாம் இன்றைய காலகட்டத்தில் எந்த அளவிற்கு அவைகளை நாம் கடைப்பிடிக்க முடியும் என்பதை விளக்குகிறார்கள். இதுவே நம்மனைவருக்கும் தேவையாகிறது பேருதவியாகிறது.
சில ஆண்டுளுக்குமுன் பாலாமடையில் நம் ஜகத்குரு ஸ்ரீ ஸந்நினிதானம் அவர்கள் அருளிய அனுக்கிரஹ பாஷணத்தில் கூறிய சில கருத்துக்களை குருதேவருக்கும் ஒரு சிஷ்யருக்கும் இடையே நடக்கும் ஒரு சம்பாஷணை வடிவில் இங்கு குறிப்பிடுகிறேன்.
சிஷ்யர்: குருதேவர் கூறியபடி திரிகால ஸந்த்யாவந்தனம் செய்ய வேண்டிய அவசியத்தை உணர்கிறேன். தினம் காலை ஒன்பது மணிக்கு வேலைக்கு ஆஜராக வேண்டும். வீட்டிலிருந்து ஆபீசுக்குச் செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேலாகிறது. அதற்குள் காலையில் எழுந்து காலக்கடன்களை முடித்து நீராடி, காலை உணவருந்தி உடையணிந்து புறப்பட வேண்டும். அதனால் ஸந்தியா வந்தனம் செய்ய அவகாசமில்லை.
ஜகத்குரு: காயத்ரி ஜபம நூற்றெட்டு அவர்த்தியுடன் ப்ராத ஸந்தியாவந்தனம் செய்ய பத்து நிமிஷங்கள் போதுமே!
சிஷ்யர்: அவ்வளவுகூட அவகாசமில்லையே!
ஜகத்குரு: முப்பத்திரண்டு ஆவர்த்தி ஜபம் செய்யுங்கள். ஐந்து நிமிஷங்கள் போதும். அதுவும் செய்ய முடியாத நாட்களில் பத்து ஆவர்த்தி ஜபம் செய்யுங்கள். ஆனால் அதைவிட குறைவாகச்செய்ய இடமே இல்லை. ஸந்தியாவந்தனம் ஒரு பிராம்மணன் செய்ய வேண்டிய மிக முக்கிய நித்ய கர்மா. அதைச் செய்தே தீரவேண்டும்.
பல பெரியோர்களின் அறிவுரையை கருத்தில் கொண்டு இன்றைய சூழ் நிலையில் நாம் என்ன செய்யலாம் என்று சிந்திப்போம்.
காலையில் சூரியன் உதிக்குமுன் சுமார் ஐந்தரை மணிக்கு முன் துயிலெழ வேண்டும். இது நமக்கு மிக நன்மை பயக்க வல்லது. நாம் எல்லோரும் இதனை அறிந்திருந்தும் சிலரே இதை கடைப் பிடிக்கிறோம்.
காலைக்கடன் முடித்து நீராடி ஸந்தியாவந்தனம் செய்தபின் பால் அல்லது காபி அருந்தலாம். அல்லது குறைந்த பக்ஷம் தந்தசுத்தி செய்து கை கால் கழுவு நெற்றிக்கிட்டுக்கொண்டு ஸந்தியாவந்தனம் செய்தபின் பால் அல்லது காபி அருந்தலாம்.
பிராம்மணர் எல்லோரும் திரிகால ஸந்தியாவந்தனம் செய்ய வேண்டும்.
பிரம்மசாரி உபாகர்மம, காயத்திரி ஜபம் போன்ற விசேஷ தினங்களிலாவது ஸமிதாதானம் செய்யவேண்டும்.
எல்லோரும் தன் பெற்றோர்களின் சிரத்தத்தை தவறாமல் செய்யவேண்டும். சிராத்த தினம் போன்ற முக்கிய தினங்களில் கிருகஸ்தன் ஔபாஸனம் செய்ய வேண்டும்
பிராம்மணர் எல்லோரும் உபாகர்மத்தை விடாமல் அனுஷ்டிக்க வேண்டும். காயத்திரி ஜபத்தன்று ஆயிரத்து எட்டு ஆவர்த்தி கயத்திரியை ஜபிக்க வேண்டும்.
தன் வேதத்தை முடிந்த வரையிலாவது அத்யயனம் செய்ய வேண்டும். யஜுர் வேதிகள் குறைந்தபக்ஷம் புருஷ ஸூக்தம், ருத்ரம், சமகம, துர்கா ஸூக்தம் ஸ்ரீ ஸூக்தம் முதலியவற்றை கற்கலாம். ஸாமவேதிகள் ஸாமஸூக்த மஞ்சரியில் குறிப்பிட்டுள்ள முக்கிய ஸாமாக்களை கற்கலாம்.
. .வைதிக பிரவிருத்தியில் இருக்கும் பிராம்மணர் தர்மசாஸ்திர விதிகளை மிக கவனமாக பின்பற்ற வேண்டும். ஒரு சிராத்தத்தில் பங்கு கொள்ளுதல், அடுத்த சிராத்தத்தில் பங்கேற்பதற்கு வேண்டிய இடைவௌ, ப்ரதிகிருகம் வாங்கினால் அதன் தரத்துக்கேற்ப செய்யவேண்டிய பிராயசித்தம் முதலியவற்றுக்கு தர்ம சாத்திரங்களில் விதிக்கப்பட்டபடி பிராயச் சித்தம் செய்ய வேண்டும்.

பூர்ணமாக வேதாத்யயனம் செய்த ப்ராம்மணன் மதிப்பிற்குரியவன். ஆனால் அந்த கௌரவத்தை அவன் காப்பாற்றிக் கொள்வது அவனது கடமை. அவன் “அஸந்துஷ்டோ த்விஜோ நஷ்ட::” என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment