Tuesday, December 25, 2012

தத்தாத்ரேயர்.

ப்தரிஷிகளில் ஒருவரான அத்ரி முனிவரின் தர்மபத்தினி அனுசூயா தேவி. இந்த அம்மையாரின் கற்புத் திறனை நாரதர் மூலம் அறிந்த சரஸ்வதி, லட்சுமி, பார்வதி முதலான மூன்று தேவியரும் அனுசூயாமீது பொறாமை கொண்டனர். அவள் கற்பை சோதிக்க தங்கள் கணவர்களை அனுப்பினர்.

அதன்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் சந்நியாசிகள்போல முனிவரின் ஆசிரமம் வந்தனர். அவர்களை முறைப்படி வரவேற்ற அனுசுயா தேவி உணவு பரிமாற ஆயத்தமாகும்போது, ""ஆடை எதுவுமின்றி வந்து உணவிட்டால்தான் உண்போம்'' என்று மூன்று பேரும் நிபந்தனை விதித்தனர்.

தன் கணவனை எண்ணி வணங்கிய அனுசூயா, வந்திருப்பவர்கள் யாரென்று புரிந்துகொண்டாள். கற்பின் திறத்தால் மும்மூர்த்திகளையும் சிறு குழந்தைகளாக்கி உணவு பரிமாறினாள்.

அக்குழந்தைகளைத் தன்னிடமே வைத்துக்கொண்டாள்.

கணவர்களைக் காணாமல் தவித்த மூன்று தேவியரும் உண்மையறிந்து அனுசூயாவிடம் வந்து மன்னிப்பு கேட்டனர். அவளும் மும்மூர்த்திகளையும் பழைய நிலைக்குக் கொண்டு வந்தாள்.

""உனக்கு என்ன வரம் வேண்டும்?'' என்று அவர்கள் கேட்க, ""உங்கள் மூவரின் அம்சத்தோடும் ஒரு மகன் வேண்டும்'' என்றாள்.

அதன்படி மூன்று முகங்களுடன் அவதரித்தவரே தத்தாத்ரேயர். ஆறு கரங்கள் கொண்டவர். மேலிரு கரங்களில் சூலமும் சங்கும்; நடுவிரண்டு கரங்களில் சக்கரமும் கதாயுதமும்; கீழிரண்டு கரங்களில் ருத்ராட்ச மாலையும் கமண்டலமும் கொண்டு திகழ்கிறார். (சில படங்களில் இவ்வமைப்பு மாறுபட்டும் காணப்படும்.) அவருக்குப் பின்புறமாக காமதேனு காட்சிஅளிக்கும். நான்கு வேதங்களும் நாய் வடிவில் அவருடனிருக்கும்.



தத்தாத்ரேயரை வழிபட்டால் தீராத வயிற்றுவலி, இதய நோய், புத்தி சுவாதீனமின்மை, சத்ரு உபாதை, கடன் தொல்லைகள் நீங்கும். பெண்களுக்கு மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பர். இவரை வணங்குவதால் மும்மூர்த்திகளையும் பூஜித்த பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment