"காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா' என்பது சித்தர் வாக்கு. நாம் கண்ணால் காண்கின்ற, பிற புலன்களாலும் உணரமுடிகின்ற பருவுடலை ஏன் சித்தர்கள் "பொய்' என்றார்கள்?
கண்ணாலும், பிற புலன்களாலும் காண முடியாத, உணரமுடியாத சக்தி உடல்களை "பொய்' என்று சொன்னால்கூட அதில் ஓரளவு நியாயம் இருக்கும்! புலன்களுக்கு எட்டிய பருவுடலை ஏன் பொய் என்கிறார் கள்? இதற்கு ஒரு காரணம் உண்டு.
நாம் நமது பருவுடலின் இயக்கங்கள் என நினைத்துக்கொண்டிருக்கும் எதுவுமே உண்மையில் பருவுடலின் இயக்கங்கள் அல்ல! சக்தி உடல்களின் இயக்கங்களே பருவுடல் வழியாக வெளிப்படுகின்றது.
சக்தி உடல்கள் இயங்க உதவும் ஒரு கருவி யாக மட்டுமே இந்தப் பருவுடல் உதவுகிறது. அதனால்தான் காயத்தை (பருவுடலை) பொய் என்றார்கள் சித்தர்கள். இதை ஒரு எளிய உதாரணத்தின் மூலம் விளக்கினால் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.
ஒரு கணினியில் முக்கியமானவை இரண்டு- வன்பொருள்மென்பொருள் கணினியில் உள்ள பிளாஸ்டிக், உலோகங்கள், சர்க்யூட்டுகள், ஒயர்கள் என அதன் அடிப்படைக் கட்டமைப்புகளே "வன்பொருள்' எனப்படுகிறது.
இந்த வன்பொருளை நமது பருவுடலுக்கு ஒப்பிடலாம். ஒரு கணினியில் இருக்க வேண்டிய பாகங்கள் அனைத்தும் இருந்தாலே அதை கணினி என்று கூறலாம். அதுபோலவே ஒரு உடலில் இருக்க வேண்டிய பாகங்களும் உறுப்புகளும் இருந்தால் அதை ஒரு உடல் என்று கூறுகிறோம்.
கணினியில் தேவையான மென்பொருளை ஏற்றினால் மட்டுமே அது ஒரு கணினியாக இயங்க முடியும். மென்பொருள் உள்ளே ஏற்றப் படாதவரையில் அது பல பாகங்களால் உருவாக்கப்பட்ட ஒரு "டப்பா'. மென்பொருள் இல்லாமல் அது ஒரு கணினியாகச் செயல்பட முடியாது! மென்பொருள் இல்லாத (வன்பொருள் மட்டுமே கொண்ட) டப்பாவை கணினி எனக் கூற முடியாது. அவ்வாறு கூறினால் அது பொய்தானே?
அதுபோலவே நமது பருவுடலும் பல திசுக்களாலும், உள் உறுப்புகளாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது கணினியின் "வன்பொருளு'க்குச் சமமானது.
நமது சக்தி உடல்கள் என்ற மென்பொருள் உடலில் நுழையும்போதுதான் அது ஒரு "உடலாக' செயல்பட முடியும். எனவேதான் பருவுடலை சித்தர்கள் "பொய்' என்றனர். பருவுடலின் எந்த இயக்கமும் பருவுடலைச் சார்ந்ததல்ல!
சக்தி உடல்களின் இயக்கங்களே பரு வுடலின் இயக்கங்களாக வெளிப்படுகின்றன. சக்தி உடல்கள் இல்லையெனில் பருவுடல் ஒரு சதைப் பிண்டம் மட்டுமே!
தாயின் வயிற்றில் ஒரு கரு உருவாகும்போதே அதனுள் உயிர் இருப்பதில்லை. தாயின் கரு முட்டையும், தந்தையின் விந்தணுவும் இணைந்து ஒரு கருமுட்டையாக உருவாகும். இது படிப்படியாக வளரும். அந்த நிலையில் அது ஒரு செல்களின் குவியல் அல்லது இணைப்பு என்றே கொள்ளப்படுகிறது. (தசைப் பிண்டம்).
மறுபிறவி எடுக்கும் ஒரு சக்தி உடல் அந்த தசைப் பிண்டத்தினுள் நுழையும்போதுதான் அது உயிருள்ள ஒரு கருவாக உருமாறுகிறது.
நினைவில் கொள்ள வேண்டியவை
* ஒரு கருவுக்கு உயிரைத் தருவது சக்தி உடல்களே.
* பருவுடலை இயங்க வைப்பதும் சக்தி உடல்களே.
* இறப்பின்போது பருவுடல் மட்டுமே அழிந்து போகும். சக்தி உடல்கள் மீண்டும் ஒரு பருவுடலில் புகுந்து மறுபிறவி எடுக்கும்.
இந்த அடிப்படையான உண்மைகளை மனதில் இருத்திக்கொண்டு மேலே படியுங்கள்.
1. அன்னமய கோசம்
"அன்னம்' என்பது உணவைக் குறிக்கும் சொல். நாம் உண்ணும் உணவு, அருந்தும் நீர் ஆகிய இரண்டும் "அன்னம்' என்பதனுள் அடங்கும்.
உணவு, நீர் ஆகிய இரண்டிலுமிருந்து பெறப்படும் சக்தியால் இயங்கும் சக்தி உடலே அன்னமய கோசம் என்று அழைக்கப்படுகிறது.
பருவுடலோடு இணைந்து, ஒட்டி நிற்கும் முதல் சக்தி உடல் அடுக்கு இது. பிற நான்கு சக்தி உடல்களைவிட இந்த முதல் சக்தி உடலே பருவுடலோடு நெருங்கிய தொடர்பில் உள்ளது.
நமது பருவுடலில் இருக்கும் அனைத்து பாகங்களும், உள்ளுறுப்புகளும் இந்த அன்னமய கோசத்திலும் இருக்கும். பருவுடலை வார்க்கப் பயன்படுத்தப்படும் அச்சு என்று அன்னமய கோசத்தைக் கூறலாம்.
அன்னமய கோசமே அசல். பருவுடல் அதன் நகல்
இதற்கு முன்னர் எடுத்த ஜென்மங்களில் செய்த கர்ம வினைகளின் பலனாக அன்னமய கோசத்தில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டிருந்தால் அவை இந்தப் பிறவியில் எடுத்த பருவுடலில் வெளிப்படும்.
உதாரணமாக, சில குழந்தைகள் பிறக்கும் போதே சில ஊனங்களுடன் பிறக்கின்றன. சில குழந்தைகள் இதயத்தில் ஓட்டை போன்ற பிறவி நோய்களுடன் பிறக்கின்றன. அன்னமய கோசம் பழுதுபட்டிருந்தால் இது நிகழும்.
மூன்று பூதங்கள்
* நிலம், நீர், நெருப்பு ஆகிய மூன்று பூதங்களின் ஆளுமைக்கு உட்பட்டே அன்னமய கோசம் இயங்குகிறது.
* நாம் உண்ணும் திடப் பொருட்கள் அனைத்துமே நிலம் எனும் பூதத்தைச் சார்ந்தவை.
* நாம் அருந்தும் நீர், பானங்கள் அனைத் தும் நீர் எனும் பூதத்தைச் சார்ந்தவை.
* திடப் பொருட்களும், நீரும் செரிமானமாகி உடலில் சத்தாகச் சேர நெருப்பு என்ற பூதத்தின் துணை தேவையாக உள்ளது.
இந்த மூன்று பூதங்களின் சம நிலைகளில் ஏற்படும் மாறுதல்கள் அன்னமய கோசத்தை பாதிக்கும். இந்த பாதிப்பே நோயாக பருவுட லில் உணரப்படும்.
சக்கரங்கள்
* நிலம் எனும் பூதத்தோடு தொடர்புடைய சக்கரம் மூலாதாரம்.
* நீர் எனும் பூதத்தால் ஆளப்படும் சக்கரம் சுவாதிஷ்டானம்.
* நெருப்பு எனும் பூதத்தால் இயக்கப்படும் சக்கரம் மணிப்பூரகம்.
இந்த மூன்று சக்கரங்களே அன்னமய கோசத்தை இயக்கும் சக்கரங்களாகும். இந்த சக்கரங்கள் நலமாக இயங்கும்போது அன்னமய கோசமும் நலமாக இருக்கும்.
இந்த சக்கரங்களில் சக்தித் தடைகளோ தேக்கங்களோ உருவாகும்போது அன்னமய கோசத்திலும் தடைகளும் தேக்கங்களும் உருவாகும். பருவுடலில் அது நோயாக வெளிப்படும். உதாரணமாக...
* மூலாதார சக்கரத்தில் சக்தித் தடைகள் ஏற்படும்போது அது அன்னமய கோசத்தை பாதிக்கும். இதனால் பருவுடலில் மலச்சிக்கல், மூலநோய் போன்ற நோய்கள் உருவாகலாம்.
* சுவாதிஷ்டான சக்கரத்தில் சக்தித் தடைகள் தோன்றினால் அன்னமய கோசம் பாதிக்கப்பட்டு பருவுடலில் இனப்பெருக்க உறுப்புகளிலும், சிறுநீரகங்களிலும் பாதிப்பு ஏற்படலாம்.
* மணிப்பூரகச் சக்கரத்தில் சக்தித் தேக்கங் கள் உருவானால் அது அன்னமய கோசத்தை பாதிக்கும். பருவுடலில் வயிறு, குடல், கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, கணையம் போன்ற உள்ளுறுப்புகளில் ஏதேனும் பாதிக்கப்படலாம். அவற்றோடு தொடர்பு டைய நோய்கள் உருவாகலாம். உதாரணமாக, கணையத்தின் இயக்கங்கள் பாதிக்கப்படுவதால் சர்க்கரை நோய் உருவாகலாம்.
இந்த நோய்களின் வெளிப்பாடு பருவுடலில் இருந்தாலும், அதன் மூல காரணம் அன்னமய கோசத்திலும், சக்கரங்களிலும், பஞ்ச பூதங்களிலும் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இந்திரியங்கள்
நமது பருவுடலில் இந்திரியங்கள் உள்ளதாக நினைக்கிறோம். ஆனால் அந்த இந்திரியங் களை இயக்குவது அன்னமய கோசமே! இந்த இந்திரியங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
* ஞானேந்திரியங்கள்.
* கர்மேந்திரியங்கள்.
ஞானேந்திரியங்கள்
நமது புலன் உறுப்புகளே (பொறிகள்) ஞானேந்திரியங்கள் எனப்படுகின்றன.
* மெய் (தொக்கு)
* வாய் (சிங்குவை)
* கண் (சட்சு)
* மூக்கு (ஆக்கிராணம்)
* செவி (சோத்திரம்)
ஆகியவையே ஐந்து பொறிகள் எனப்படும் ஞானேந்திரியங்களாகும். இந்த ஐந்து பொறி களும் பருவுடலில் உள்ள உறுப்புகள் மட்டுமே.
இந்த உறுப்புகளின் "புலன்களே' தன்மாத்திரை கள் எனப்படுகின்றன. இந்த புலன்களை ஆளுவது அன்னமய கோசம், பிராணமய கோசம் ஆகிய இரு கோசங்களே! ஐம்பொறி களின் புலன்கள் எவை என்பதை தனித்தனியே காணலாம்.
தன்மாத்திரைகள் (ஐம்புலன்கள்)
1. மெய் (தோல் அல்லது தொக்கு)
"ஸ்பரிசம்' எனப்படும் தொடு உணர்ச்சியே மெய்யின் புலனாகும். இந்த மெய்யினால்-
* குளிர்ச்சி
* வெப்பம்
* மென்மை
* வன்மை
போன்ற நான்குவிதமான தொடு உணர்வு களை சக்தி உடல்கள் உணர்ந்து கொள்ளும்.
தோல் என்பது வாயுவின் அம்சம். அதை ஆளும் சக்கரம் அனாஹதம். அவற்றோடு தொடர்புடைய சக்தி உடல் நமது இரண்டாவது சக்தி உடலான பிராணமய கோசம். ஆக, தொடுவுணர்ச்சி என்ற புலனை ஆளுவதும், உணர்ந்து கொள்வதும் பிராணமய கோசமே!
2. வாய் (நாக்கு- சிங்குவை)
சுவை என்பதே வாய் எனும் பொறியின் புலன். இதனை வடமொழியில் "ரசம்' என்பார்கள்.
* உவர்ப்பு
* புளிப்பு
* இனிப்பு
* கசப்பு
* கைப்பு
* துவர்ப்பு
போன்ற ஆறுவகையான சுவைகளை நாக்கு உணர்ந்து கொள்ளும். இவற்றையே நாக்கு எனும் உறுப்பின் தன்மாத்திரைகள் என்கிறோம்.
நாக்கும் சுவையும் நீரின் அம்சம். சுவாதிஷ் டான சக்கரத்தால் ஆளப்படுகின்றன. அன்னமய கோசத்தோடு தொடர்பு கொண்டவை.
நாக்கு எனும் புலன் உறுப்பு பருவுடலில் இருந்தாலும், அறுசுவைகளை உணர்ந்து கொள்வது அன்னமய கோசமே தவிர பருவுடல் அல்ல.
3. கண் (சட்சு)
ஒளி, ரூபம் ஆகிய இரண்டையும் கண் எனும் உறுப்பு பகுத்தறியும். கண் எனும் புலன் உறுப்புக்கு உரியவை என மொத்தம் பத்து தன்மாத்திரைகள் உண்டு. அவை:
* ஒளி
* கருப்பு
* சிவப்பு
* பச்சை
* நீலம்
* மாசிர நிறம்
* நீளம்
* குட்டை
* பருமன்
* மெலிவு
ஆகிய பத்துமே கண் எனும் உறுப்பின் தன்மாத்திரைகளாகும்.
இது நெருப்பு எனும் பூதத்தின் அம்சமா கும். நெருப்பை ஆளுவது மணிப்பூரகச் சக்கரம். இவற்றோடு தொடர்புடைய அன்னமய கோசமே கண் எனும் உறுப்பின் தன் மாத்திரைகளை உணர்ந்து கொள்ளும்.
4. மூக்கு ( ஆக்கிராணம்)
வாசனைகளைப் பிரித்துணரும் மோப்பத் தன்மையே மூக்கு எனும் பொறியின் புலனா கும்.
* சுகந்தம்
* துர்கந்தம்
ஆகிய இருவகையான கந்தங்களை மூக்கு எனும் புலனால் பிரித்தறிய முடியும்.
இது நிலம் எனும் பூதத்தின் அம்சமாகும். தொடர்புடைய சக்கரம் மூலாதாரம். அதனு டன் தொடர்புடைய சக்தி உடல் அன்னமய கோசம்.
"மூக்கு' எனும் உறுப்பு பருவுடலில் இருந் தாலும், பலவிதமான வாசனைகளை உணர்ந்து கொள்வது "அன்னமய கோசம்' எனும் சக்தி உடலே!
5. காது (சோத்திரம்)
பலவிதமான ஒலிகளையும், ஓசைகளையும் உணர்ந்து கொள்ளும்- பிரித்தறியும் திறனே "கேட்டல்' என்ற தன்மாத்திரையாகும்.
இது ஆகாயம் எனும் பூதத்தின் அம்ச மாகும். விஷுதி சக்கரமே ஆகாயத்தால் ஆளப்படும் சக்கரம். அதனுடன் தொடர்பு டைய சக்தி உடல்- பிராணமய கோசம்.
காது எனும் உறுப்பு மட்டுமே பருவுடலில் உள்ளது. கேட்கும் திறன் என்பது பிராணமய கோசம் எனப்படும் இரண்டாவது சக்தி உடலின் செயலாக உள்ளது.
கர்மேந்திரியங்கள்
கர்மேந்திரியங்களை தமிழில் தொழில் உறுப்புகள் என்று கூறலாம்.
1. வாக்கு
பேச்சு அல்லது வசனம் என்றும் இதைக் கூறலாம். வாய் என்ற தொழில் உறுப்பின் தொழில் வாக்கு. வாய் என்ற தொழில் உறுப்பு பருவுடலில் இருந்தாலும், வாக்கு அல்லது பேச்சு என்ற தொழிலைச் செய்வது பிராண மய கோசமாகும்.
2. பாணி (கை)
கை என்ற தொழில் உறுப்பு பருவுடலில் உள்ளது. ஆனால், அதன் கர்மங்களான கொடுத் தல், வாங்கல், பிடித்தல், விடுதல் ஆகியவற்றை இயக்குவது பிராணமய கோசமாகும்.
3. பாதம் (கால்)
கால் என்ற தொழில் உறுப்பு பருவுடலில் இருந்தாலும் அதன் கர்மங்களான நிற்றல், நடத்தல், அமர்தல், எழுதல் போன்றவற்றை இயக்குவது அன்னமய கோசம் என்ற சக்தி உடலாகும்.
4. பாயுரு (குதம் அல்லது மலவாய்)
மலவாய் என்ற கர்மேந்திரியம் பருவுடலில் உள்ளது. ஆனால் அதன் கர்மமான மல, ஜலங்களை வெளியேற்றும் பணியைச் செய்வது அன்னமய கோசமே.
5. உபஸ்தம் (கருவாய்)
ஆண்- பெண் இனப்பெருக்க உறுப்புகள் அனைத்துமே "உபஸ்தம்' என்ற கர்மேந்திரிய மாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த உறுப்புகள் அனைத்தும் பருவுடலில் இருந்தா லும், சிறுநீர் கழிப்பது, உடலுறவு கொள்வது, இனப்பெருக்கம் செய்வது போன்ற கர்மங்க ளைச் செய்வது (பருவுடலின் துணையோடு) அன்னமய கோசம் எனும் சக்தி உடலே!

No comments:
Post a Comment