திருமாலின் இடது திருக்கரத்தில் உள்ள ஆபரணம் சங்கு, இதற்கு பாஞ்சஜன்யம், என்று
பெயர். இந்த சங்கு பாஞ்சன் என்ற அசுரனிடம் இருந்ததாகவும் திருமால் அவனை போரில்
வென்று மேலும் பஞ்ச இந்திரியங்களை அடக்குவதாலும் காரணப்பெயர் உண்டானது. பாற்கடலைக்
கடைந்த போது அதிலிருந்து வெளிப்பட்டு மங்கலப் பொருள்களில் சங்கும் ஒன்று.
எனவே, இது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. இதனால் சிவனுக்கு
சங்காபிஷேகம் நடத்துவது சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.
பாற்கடலை கடந்த நேரத்தில் மகாலட்சுமி வெளிப்பட்டபோது அவளது பேரழகில் மயங்கியவர்கள்
அவள் தனக்கு மாலையிடமாட்டாளா என அவள் முன்னால் போய் நின்றனர்.
கண்ணனின் பூர்ணாவதாரமான மகாவிஷ்ணுவோ ஒதுங்கியே இருந்தார். இப்படிப்பட்ட திடமான
துள்ளவருவுடன் வாழ்ந்தால் அல்லவா நமக்கு பெருமை என நினைத்த மகாலட்சுமி அவருக்கே
மலையிட்டாள். அவர் எந்த அளவுக்கு திடமானதுள்ளவரோ. அந்தளவுக்கு கருணையும் உள்ளவர்.
எனவே, மனைவியே தன் மார்பிலேயே வைத்துக் கொண்டார்.
No comments:
Post a Comment