கங்காதேவியின் மகனான பீஷ்மர், தனது தந்தையின் சுகத்துக்காக பிரம்மச்சரிய விரதம்
மேற்கொண்ட உத்தமர்.
தம்பி விசித்திரவீரியனுக்கு பெண் பார்க்க, காசிராஜனின் அரண்மனையில் நடந்த சுயம்வரத்தில் கலந்து கொண்டார். அவனது மூன்று புத்திரிகளைக் கடத்தி வந்தார். அவர்களில் அம்பை என்பவள், சாலுவதேசத்து அரசனான பிரம்மதத்தனை விரும்பியதால் அவளை, அவனிடமே அனுப்பி வைத்தார். மாற்றானால் கடத்தப்பட்ட அவளை, பிரம்மதத்தன் ஏற்க மறுத்தான். எனவே, பீஷ்மரிடமே திரும்பிய அம்பை, தன்னை மணக்கும்படி வேண்டினாள். அவர் பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டிருந்ததால் அவளது வேண்டுகோளை நிராகரித்தார். எனவே, அவள் பீஷ்மரின் குருவான பரசுராமரிடம் சென்று புகார் செய்தாள்.
அம்பைக்காக பரிந்துபேசிய பரசுராமர், பீஷ்மரிடம் அவளை மணம் முடிக்க உத்தரவிட்டார். குருவிடமும் பீஷ்மர் மறுத்து விட்டார். கோபம் கொண்ட பரசுராமர், தனது பேச்சைக் கேட்காத சீடனுடன் போரிட்டார். வில்வித்தை கற்ற பீஷ்மர், குருவையே ஜெயித்தார்.
கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற எப்பேர்ப்பட்ட தியாகமும் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

No comments:
Post a Comment