* எல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு சக்தி இருக்கிறது. அதுதான் கடவுள். அதனைச்
சொற்களால் விளக்க முடியாது. அனைத்திற்கும் மூலகாரணமாக விளங்குவது அதுவே.
* கடவுள் இல்லை என்று சொல்வது, பேச்சுக்கு ஆதாரமான நாக்காலேயே "எனக்கு நாக்கு இல்லை' என்று சொல்வது போலாகும். விதைக்குள் மரமும், பாலில் வெண்ணெயும் இருப்பது போல கடவுள் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறார்.
* கடவுளைச் சரணாகதி அடைந்து விட்டால் உலகில் ஒருவருக்கும் அஞ்சத் தேவையில்லை. அவர் ஒருவரே உங்களுக்குத் தேவையான அனைத்தையும் பார்த்துக் கொள்வார்.
* ஒரு கோடி ரூபாயை வீணாக்கினாலும் வருத்தப்படத் தேவையில்லை. ஆனால், ஒருநிமிட நேரத்தைக் கூட வீணாக்கக்கூடாது. காலம் பொன் போன்றது. காலமறிந்து கடமையாற்றுங்கள்.
* இன்று நண்பனாக இருப்பவன், நாளை எதிரியாகி விடலாம். ஆனால் என்றென்றும் நம்பிக்கைக்குரிய ஒரே நண்பன் கடவுள் மட்டுமே.
* கடவுளை நம்புவதால் நமக்குத் தான் லாபம். நம்மால் கடவுளுக்கு என்ன ஆகப்போகிறது? ஆனால், நாம் அவரை அடைக்கலம் புகுந்துவிட்டால் மனதில் நிம்மதி உண்டாகும்.
* நீங்கள் கொண்டிருக்கும் இறைநம்பிக்கை முழுமையானதாக இருந்தால், மனதில் அன்பும் அருளும் பிறக்கும். அப்போது பிற உயிர்களின் மீது இரக்கம் உண்டாகும்.
* ஆன்மிக உலகில் எத்தனையோ நூல்கள் பரந்து விரிந்து கிடக்கின்றன. அவை அனைத்தும் நமக்குத் தேவையில்லை. அவற்றின் சாரமான கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
* தொடக்கத்தில் கடவுள் மீது பயமும் பக்தியும் வேண்டும். காலம் செல்லச் செல்ல பயம் காணாமல் போய்விடும். அன்பு மயமான பக்தி மட்டும் நிறைந்திருக்கும்.
* மனம் கடவுள் வசமாகி விட்டால் ஆணவம், அகங்காரம் போன்ற மனமாசுகள் நம்மை விட்டு விலகிவிடும்.
* எந்தச் செயலையும் சிரத்தையுடன் கவனமாகச் செய்யுங்கள். இல்லாவிட்டால் அந்தச் செயல் பயனற்றதாகி விடும். எந்தச் செயலலையும் அற்பமானது என்று அலட்சியம் காட்டாதீர்கள்.
* எப்போதும் இறைசிந்தனையுடன் இருப்பவனே கர்மயோகி. அவன் செய்யும் ஒவ்வொரு செயலிலும், எண்ணத்திலும் இறைவனையே காணும் பேறு பெறுவான்.
* இறைவனின் திருநாமங்களே மந்திரம். மந்திரம் ஜெபிப்பதன் நோக்கம் மனத்தூய்மை அடைவதேயாகும். இறைவனைத் திருப்திப்படுத்துவது அல்ல.
* கடல் அலைகளைக் கட்டுப்படுத்த கரை இருப்பது போல, மனதில் தோன்றும் எண்ண அலைகளைக் கட்டுப்படுத்தவே விரதம் மேற்கொள்கின்றனர்.
* எங்கு சென்றாலும் மனதிற்குள்பிரார்த்தனைசெய்வதை விட்டு விடாதீர்கள். இது சாத்தியமில்லாவிட்டால் ஆன்மிக நூல்களை வாசியுங்கள்.

No comments:
Post a Comment