** கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்துவதன் நோக்கம் என்ன?
கர்ப்பிணிகளுக்கு ஏழு அல்லது ஒன்பதாம் மாதத்தில் வளைகாப்பு நடத்துவர். காப்பு என்பது ரட்சை. தாயும், சேயும் பாதுகாப்பாக நலமோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே குலதெய்வத்தை வேண்டி இச்சடங்கை நடத்துகிறார்கள். கைநிறைய அணியும் கண்ணாடி வளையல்களால் எழும்பும் "ஜல்ஜல்' ஓசை கேட்டு குழந்தை விழிப்புணர்வைப் பெறுவதோடு, தாயோடு நெருங்கிய தொடர்பையும் பெறுகிறது.
* ÷க்ஷத்திராடனம் சென்று வந்தவர்களை ஏன் சேவிக்க வேண்டும்?
.
அருளாளர்களின் பாதம் பட்ட திவ்யதேசங்களை தரிசிப்பது புண்ணியம். அங்கு சென்று வந்தவர்களைச் சேவிப்பதன் மூலம் நாமும் அந்த புண்ணியத்தை பெறுகிறோம்."நல்லாரைக் காண்பதுவும் நன்றே' என்று அவ்வையார் சொல்வதும் இது போன்ற நல்ல விஷயம் குறித்தே.
* ஆரியங்காவு ஐயப்பன் திருமணமானவர் என்று சொல்கிறார்களே. உண்மையா?
உண்மையே. ஆரியங்காவில் ஐயப்பன் புஷ்கலாதேவியுடன் மணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். சபரிமலையில் யோகநிலையில் இருக்கும் அவரே ஆரியங்காவில் தம்பதி சமேதராக வீற்றிருக்கிறார்.
*
No comments:
Post a Comment