ஏழரைச் சனிதோஷம் அகல என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
சனிதோஷம் நீங்க பிரதோஷத்தன்று சிவவழிபாடு செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசிமாலை அணிவித்து வணங்கலாம். நவக்கிரக மண்டபத்தில் உள்ள சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி வழிபடலாம். திருப்பதி வெங்கடேசப்பெருமாளை நினைத்து சனிவார விரதம் மேற்கொள்ளலாம். குலதெய்வ வழிபாடு மேற்கொண்டாலும் சனியின் கடுமை குறையும்.
* கல்யாணம் போன்ற சுபவிஷயங்களில் பூவும் தாருமாக குலையுடன் கூடிய வாழை மரத்தைக் கட்டுவது ஏன்?
சுபநிகழ்ச்சிகள் நடக்கும் இடத்தை மங்களம் பொருந்தியதாக அலங்கரிக்க வேண்டும். மாவிலை, தென்னங்குருத்து தோரணம், வாழைமரம், மாக்கோலத்தை மங்களத்தின் அடையாளங்களாக சாஸ்திரம் கூறுகிறது. பொதுவாக எல்லோரும் விரும்புவது நம் குலம் தழைக்க வேண்டும் என்பதையே. பூவும் தாருமாக இருக்கும் வாழையின் அடியில் கன்றுகள் தோன்றி தழைக்கும். அதுபோல நம் வம்சமும் விருத்தியாக வேண்டும் என்று செய்கிறோம்.
* கனவில் குரங்கு அடிக்கடி வந்து பயமுறுத்துகிறது. இது எதைக் குறிக்கிறது?
கனவு என்பது ஆழ்மனதில் ஏற்படும் எண்ணங்களின் வெளிப்பாடு தான். டிஸ்கவரி சேனலில் பார்க்கும் விஷயங்கள் ஆழ்மனதில் பதிந்து பாதிக்கின்றதோ என்னவோ! பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.

No comments:
Post a Comment