Friday, January 18, 2013

அக்னி தீர்த்தம், பாதாள பைரவர்

ராமேஸ்வரம் கடல் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக சீதையை அக்னி பிரவேசம் செய்யச் செய்தார் ராமர். சீதையைத் தொட்ட பாவம் நீங்க அக்னி பகவான் இங்கு கடலில் நீராடி தோஷம் நீங்கப் பெற்றார். எனவே இந்த தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது சீதையின் கற்புத்திறன் அக்னியையே சுட்டதாகவும் அந்த வெம்மை தாளாத அக்னி இந்தக்கடலில் மூழ்கி தனது வெப்பத்தை தணித்ததாகவும் மற்றொரு புராண வரலாறு சொல்வதுண்டு.

பாதாள பைரவர்......

ராமேசுவரம் கடலோரத்தில் ராமர் சிவபூஜை செய்தபோது அவரைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வது என தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க சிவபெருமான் பைரவரை அனுப்பினார். பைரவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் காலால் அழுத்தி பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே பைரவர் அமர்ந்து விட்டார். இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இதனால் இவருக்கு பாதாள பைரவர் என்று பெயர். இவரது சன்னதி கோடி தீர்த்தம் அருகில் உள்ளது.

No comments:

Post a Comment