அன்னை ஆதிபராசக்தியையும், பெற்ற தாயையும் நாம் `மாதா' என்று அழைப்போம். `ஸ்ரீ மாதா'
என்றே தொடங்குகிறது. ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம். இவர்களுக்கு அடுத்தபடியாக நாம் `மாதா'
என்று சிறப்பாக அழைப்பது பசுவைத் தான். `கோமாதா' என்று பசுவைப் போற்றி வழிபாடு
செய்து. தொன்று தொட்டு அதனை ஓர் உத்தம தர்மமாகவே கடைப்பிடித்து வருகிறோம்.
மகாலக்ஷ்மியின் முழு சாந்நித்யம் உள்ள இடம் பசுவின் உடல் தான். இதனால் தான்
நாம் பசுவைத் தெய்வமாக எண்ணி. வணங்கிக் கொண்டாடி வருகிறோம். மகாலக்ஷ்மியின்
பரிபூரணமான அருளை நாம் பிரத்யக்ஷமாகப் பெறவும். சகலவித பாவங்களும். தோஷங்களும்
தீரவும் நாம் கோபூஜை செய்தே ஆக வேண்டும். அகில உலகங்களும், முப்பத்து முக்கோடி
தேவர்களும், மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவியரும் நிறைந்து விளங்கும் ஸ்வரூபமாக
எண்ணிக் கோமாதாவைப் பூஜை செய்ய வேண்டும். கோபூஜையின் பயனைச் சொல்லி முடியாது.
அதன் மகிமையை எழுத முடியாது. இத்தகைய பெருமைக்குரிய பசுவைத் தெய்வமாக,
மகாலக்ஷ்மியின் வடிவமாகக் கருதி, அதற்குப் பூஜை செய்வது, வணங்குவது, நம் நாட்டில்
தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும். முனிவர்களின் குடில்களில் பசுக்கொட்டில்
கட்டாயம் இருக்கும். அங்குப் பசுக்கள் கூட்டம் கூட்டமாய் இருக்கும்.
தெய்வ ஆராதனை நடப்பதற்குப் பசு மிகவும் முக்கியம். ஏனெனில் அபிஷேகத்திற்குப்
பாலும், தயிரும், வெண்ணெயும், நெய்யும், பஞ்சகவ்யமும் அவசியம். மேலும் ஹோமம்
செய்திட நெய் அதை விட அவசியம். கோபூஜை செய்த புண்ணியத்தால்தான் ஸ்ரீராமச்சந்திர
மூர்த்தியின் அவதாரமே நிகழ்ந்தது. திலீபச் சக்ரவர்த்திக்கு நெடுங்காலமாகக்
குழந்தைப் பேறு வாய்க்கவில்லை.
அவர், வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்தில் வளர்ந்து வந்த காமதேனுவின் மகளான
நந்தினிப் பசுவை, அம்முனிவரின் ஆணைப்படி. போற்றிப் பாதுகாத்து வளர்த்து வந்தார்.
முறைப்படி. அதற்குப் பூஜை செய்து வணங்கி வந்தார். அதன் பயனாகத் திலீபச்
சக்கரவர்த்திக்கு ரகு என்ற மகன் பிறந்தான். ரகு சக்கரவர்த்திக்குப் பிறந்த மகன்
அஜன். அஜ சக்கரவர்த்திக்குப் பிறந்த மகன் தசரதன்.
தசரத சக்கரவர்த்திக்குப் பிறந்தவர் சாட்சாத் ஸ்ரீமகாவிஷ்ணுவின் அவதாரமான
ஸ்ரீராமர். ஆதலால், கோபூஜை மிகவும் மகத்தானது. அனைத்துப் பேறுகளையும் தரவல்லது.
கோபூஜை செய்யத் தொடங்கும் முன்னரே மகாலக்ஷ்மி அங்கு வந்து விடுகிறாள். முறைப்படி
செய்த கோபூஜையில் திருப்தியடைந்து அங்கேயே குடி கொண்டு விடுகிறாள். பசுவின் கால்
பட்ட மண், பசுக் கொட்டிலில் கிளம்பும் புழுதி நம்மீது படுவதற்குப் புண்ணியம்
செய்திருக்க வேண்டும்.
கோபூஜை செய்தால் சகல பாவங்களும் விலகி விடுகிறது. அனைத்துப் புண்ணிய
நதிகளிலும், தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைக்கிறது. பசுவின் கோமயம் மிகவும்
புனிதமாகக் கருதப்படுகிறது. இந்தக் கோமயத்துடன் பசுவின் சாணம், நெய், பால், தயிர்
ஆகியவை கலந்த கலவையே மிகவும் புனிதமான பஞ்ச கவ்யம் என்று அழைக்கப்படுகிறது.
சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்கு இந்தப் பஞ்சகவ்யம் மிகவும் சிறந்ததாகக்
கருதப்படுகிறது. நமது ஆசிரமத்தில் கோபூஜை மிகச் சிறப்பாக நடத்தப்படு கிறது. பசுவின்
பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் அங்குப் பட்டுக் குடையைப் பிடிக்கச்
செய்து. நாணயங்கள், ரோஜா, தாமரை, செவ்வரளி போன்ற மலர்களால் ஸ்ரீசூக்தம் சொல்லி,
அர்ச்சனைகள் செய்யப்படுகிறது.
நெய் சேர்க்காத சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்யப்படுகிறது. இந்தப்
பூஜையைப் பார்த்து, மனதார வணங்கினாலே அனைத்துத் தோஷங்களும் நீங்கி வாழ்வில் ஆனந்தம்
நிலைக்கும். வீட்டில் எப்போதும் கஷ்டம், சண்டை, சச்சரவு இருந்து கொண்டே இருக்கிறது
என்று அர்த்தம். இந்த நவக்ரஹ கோளாறு நீங்க வேண்டும் என்றால் கோபூஜை, கோதானம்
செய்தாக வேண்டும்.
பசுவின் உடலில் அனைத்துத் தேவர்களும், நவக்ரஹங்களும் குடியிருப்பதால், கோபூஜை
செய்தால் நவக்ரஹ தொல்லையிலிருந்து விடுபடலாம். குழந்தைப் பேறு வாய்க்கவில்லை
என்றாலோ, குழந்தைகள் தீய வழிகளில் சென்றாலோ, கோபூஜை அல்லது கோதானம் செய்தேயாக
வேண்டும். பிதுர் தர்ப்பணம், திவசம் ஆகியவற்றை முறையாகச் செய்யவில்லை என்றால்
பிதுர் தோஷம், பிதுர் சாபம் ஆகியவை ஏற்படும்.
அவை தீர வேண்டுமானால் கோதானம் செய்ய வேண்டும். திருமண தடைபட்டுக் கொண்டே
இருக்கிறது என்றால் கடுமையான தோஷம் இருக்கிறது என்று பொருள். அதற்குப் பரிகாரம்
கோதானமும் கோபூஜையுமே! வலிமை வாய்ந்த சனிக் கிரக தோஷங்களிலிருந்து விடுபடவும்,
நோய்களிலிருந்து விடுபடவும் கோபூஜை மிகவும் அவசியமாகிறது.
பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேரவும், கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கவும் கோபூஜை
செய்வது அவசியம். மாட்டுப் பொங்கல் திருநாளில் நமது ஸ்ரீயோகமாயா புவனேஸ்வரி
பீடத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் கோபூஜை நடக்கும். நீங்களும் பசுவைப் பூஜை
செய்து அனைத்து நலன்களும் பெறுவீர்களாக. அனைவரும் நீங்காத செல்வம் நிறைந்து வாழ
வேண்டுமாய் எம்பெருமானார் புவனேஸ்வரி சுவாமிகளின் திருவடிகளைச் சிந்தித்துக்
கொள்கிறேன்.
பஞ்ச கவ்யம்
பசு மனிதர்க்கு தேவையற்ற புல்லையும் வைக்கோலையும் உண்டாலும் மனிதர்க்குத் தேவையான
பால், நெய், வெண்ணெய், தயிர் ஆகிய வற்றைத் தந்து காக்கிறது. பசுவின் சாணமும்,
சிறுநீரும் சுத்தி செய்யும் தன்மை வாய்ந்தன. பஞ்சகவ்லயம் என்பது- பசுவின் பால்,
தயிர், நெய், கோசலம் (கோமுத்திரம்), கோமயம் (கோமலம்) ஆகியவற்றின் சேர்க்கையே ஆகும்.
பஞ்ச கவ்யம் என்பது தெய்வீக ஆற்றல் பொருந்திய மருந்தாகும்.
உடலின் புறத்தே தூய்மை செய்வது நீர். அகத்தே தூய்மை செய்வது பஞ்ச கவ்யம்.
சில வழிபாட்டுச் சடங்குகளில் பஞ்சகவ்யம் முக்கிய இடத்தைத் பெறுகிறது. உதாரணமாக
உபகர்மா அன்று பக்தர்கள் முதலில் நீராடி, பஞ்ச கவ்யத்தைப, பருகி மீண்டும்
நீராடுகின்றனர். பஞ்சகவ்யமானத அதை உண்போரின் உடல், தோல், மாமிசம், ரத்தம் மற்றும்
எலும்பு வரையுள்ள பாவங்களை அக்னி விறகுக் கட்டையை எரிப்பது போல எரித்து விடுகிறது
என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஆயுர்வேதத்தில் பஞ்ச கவ்யத்தை பஞ்சகவ்வியக் கிருதம் என்பர். கிருதம் என்றால்
திரவ மருந்து, காக்காய் வலிப்பு முதலான சில நோய்களுக்கு இது ஓர் அரிய
மருந்தாகும்.இப்போது பயிர்கள் செழித்து வளரவும், நோய் நீக்கியாகவும் பஞ்சகவ்யம்
பயன்படுகின்றது.
தெய்வ வழிபாட்டில் பஞ்சகவ்யம்.........
பசுவும் பஞ்ச கவ்யமும் தெய்வீகத்தன்மை வாய்ந்தது. எனவே தெய்வ வழிபாட்டில்
பஞ்சகவ்யத்திற்கு முக்கிய பங்கு உண்டு. பஞ்ச கவ்யத்தைப் பெறுவதற்காகவே ஆலயங்களில்
கோசாலைகள் அமைக்கப்பெற்று பசுக்கள் வளர்க்கப்படுகின்றன. முற்காலத்தில் மன்னர்களும்
செல்வந்தர்களும் ஆலயங்களுக்கு பசுக்களைத் தானம் கொடுத்த காரணமும் இதுவே
இச்செய்திகள் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன.
தானம் அளிக்கப்பட்ட பசுக்கள் வாழையடி வாழையாய் பெருகி வளர்வதால் இவற்றை முசா
சாவாப் பசுக்கள் அதாவது முப்படையாத சாவாத பசுக்கள் என்று கல்வெட்டுகள,
குறிப்பிடுகின்றன. பஞ்ச கவ்யத்தின் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு தெய்வங்கள் வாசம்
செய்கின்றன.
பசுவின் பாலில் சந்திரனும், பசுவின் தயிரில் வாயு பகவானும் நெய்யில் சூரிய
பகவானும், கோசலத்தில் (கோமியம்) வருணதேவனும், பசும் சாண்ததில் அக்னி தேவனும் வாசம்
செய்கின்றனர். பஞ்ச கவ்யம் தயாரிப்பதற்கு முன்னோர் சில அளவு முறைகளை
வரையறுத்துள்ளனர்.
பசும் பால் - 1 அளவு
பசும் தயிர்- 2 அளவு
பசும் நெய்- 3 அளவு
கோசலம்- 1 அளவு
கோமலம்- 1 அளவு
தர்ப்பை கலந்த நீர்- 3 அளவு
இவ்வாறு பஞ்சகவ்யத்தைத் தயாரிக்கும் போது மந்திரங்களை இடையறாது உச்சரிக்கை
வேண்டும். பஞ்சகவ்யத்திற்கு பசும் பால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். எருமைப்பால்
பயன்படுத்தக் கூடாது. பசுக்களில் பல்வேறு நிறங்களைக் கொண்ட பசுக்கள் உள்ளன.
பசுக்களின் நிறத்திற்கு அவை தரும் பாலின் தன்மைக்கும் வேறுபாடு உள்ளது.
பொன்னிறப் பசுவிடமிருந்து பாலும், நீல நிற பசுவிடம் இருந்து தயிரும், கருமை
நிறப் பசுவிடமிருந்து நெய்யும், செந்நிரப் பசுவிடமிருந்து கோசலமும், தனித்தனியே
எடுத்து பஞ்சகவ்யம் தயாரிக்க வேண்டும். இவ்வாறு சிறந்த முறையில் தயாரிக்கப்படும்
பஞ்சகவ்யத்தைத் தமிழில் ஆனைந்த என்பர்.
இப்பஞ்சகவ்யம் நோய் நீக்கும் மாமருந்தாகும். ஒரு பலம் கோமூத்திரம், கட்டை
விரலில் பாதி சாணம், ஏழு பலம் பால், இரண்டு பலம் தயிர், ஒரு பலம் தர்ப்ப ஜலம்
ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் பிரம்ம கூர்ச்சம் என்று
அழைக்கப்படுகிறது.
பால்-தயிர்- நெய்..........
பசும் பாலின் பெருமையை நாம் அனைவருமே அறிவோம். எளிதில் சீரணமாகுமம் பசுவின்
பால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அரிய உணவாகப் பயன்படுத்திறது. அறிவை
விருத்தி செய்கிறது. பசுவின் மடியில் ஏழு சமுத்திரங்கள் வாசம் செய்வதால்,
இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்தால், ஏழு சமுத்திரங்களாலும் அபிஷேகம் செய்த
புண்ணியம் கிடைக்கும்.
பசுவின் கன்று குடித்த பின், பசுவிடம் பாலைக் கறந்தால் அந்த பாலுக்குத்
தீட்டு இல்லை என்பது சிவபுராணம் கூறும் செய்தியாகும். இரவில் பூமியின் மீது
பொழியும் சந்திரனின் கிரணம் என்னும் அமுதம் பூமியைக் குளிப்பது போல பசுவின்
பாலமுதமும் பூமியைச் குளிர்விக்கிறது என்று கயிலாய முனிவர் அறிவுறுத்துகிறார்கள்.
பிற பாலிலிருந்து உருவாக்கப்படும் தயிர்களை விட பசுந்தயிர் நமக்கு மிக்க
ஏற்புடையதாக உள்ளது.
பசுந்தயிர் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது, ஆற்றலைத் தருவதோடு
சுக்கிலத்திற்கும் வீரியம் அளிப்பது. வெண்ணெய் கலந்த தயிரனத்தை இறைவனுக்குப்
படைத்து, தானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும். இனி பசு நெய்யை நோக்கும் போது, மற்ற
நெய்களைவிட கொழுப்புச் சத்து குறைவானது.
பசு நெய்யினை எரிக்கும் போது ஏற்படும் புகை நம்மை பாதிக்காது. எனவே நெய்
விளக்கேற்றும் போது பசு நெய்யே மிகவும் நல்லது,. பசு நெய் உணவின் சுவையை
அதிகரிக்கும். யாகங்கள், ஹோமங்கள் செய்யும் போது தீயினை வளர்க்க நெய்தான் வார்க்க
வேண்டும். நெய்யில் எரியும் அக்னியே, நம் ஆகுதிகளை தெய்வங்களிடம் கொண்டு
சேர்க்கும் என்பது ஐதீகம்.
கோசலம் (கோமியம்)...........
கோசலத்தில் ஆகாய கங்கை வாசம் செய்கிறாள். சப்த மாதர்கள் வாசம் செய்யும்
பசுவின் யோனி வழியாகப் பாய்ந்து வரும் கோசலம் சப்தமாதர்களின் அருளையும் பெற்றுத்
தருகிறது. வீடுகளில் விசேஷங்கள் நடைபெறும் போது தீட்டு நீக்கவும், வீட்டை,
தூய்மை செய்யவும் கோசலம் பயன்படுடுகிறது. கோசலத்தை வீட்டினுள்ளேயும் புறத்திலும்
தெளித்தால் அவ்விடம் தூய்மை பெறுகிறது.
கோசலம் கிருமிநாசினியாகவும், அரிய மருந்தாகவும் பயன்படுகிறது. கோசலத்தால்
கண்களை அடிக்கடி கழுவிக் கொள்வதால் கண்நோய் தோன்றாது. கோசலம் புற்று நோயைத்
தீர்ப்பதில் ஓர் அருமருந்தாக விளங்குகிறது.
பிறரது தீய பார்வையால் (துர் திருஷ்டி) பாதிக்கப்பட்டவர்கள் கோசலத்தை உடல்
முழுவதும் தேய்த்துக் கொண்டால் பிறரது தீய பார்வையின் தீய பலன்கள் மறைந்து விடும்.
வீடுகளில் கோசலத்தை, தெளிப்பதன் தாத்பரியமும் இதுவேயாகும். கடல் நீரில் குளிப்பது
போலவே கோசலத்தில் நீராடலாம். காசத்தில் நீராடியபின் பிறகு நன்னீரில் நீராடிக்
கொள்ளலாம்.
சாணம்........
உலகின் மற்ற பகுதிகளில் நாகரீகம் வளர்வதற்க முன்பே இந்தியாவில் பசுவின்
சாணத்தின் மகிமைகளை இந்தியர்கள் அறிந்திருந்தனர். பிரம்ம முகூர்த்தம் என்னும்
விடியற்காலையில் பசுஞ்சாணத்தால் வீட்டையும், முற்றத்தையும் மெழுக வேண்டும்,.
இவ்வாறு செய்வதால் அவ்வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதீகம். விஞ்ஞான
ரீதியாக சாணம் சிறந்த கிருமி நாசினியாகும்.
அதிகாலைப் பொழுதின் காற்றின் குளிர்ச்சியும், இளங்காற்றும் சாணத்தின் மணத்தை
அப்பகுதியில் பரவச் செய்து கிருமிகளை அழிக்கிறது. கோவில் முற்றங்களை சாணத்தால்
மெழுகுவதைச் சரியை மார்க்கத்தின் திருப்பணிகளில் ஒன்றாகக் குறித்துள்ளார்
திருநாவுக்கரசு சுவாமிகள். சிறந்த கிருமி நாசினியான சாணத்திற்கு உலோகங்களிலுள்ள
நச்சுத்தன்மையை ஒழிக்கும் ஆற்றலும் உண்டு.
எனவேதான் ஈயம் பூசப்பட்ட பாத்திரத்தை முதன் முதலில் சாண நீரால் கழுவி
நச்சுத்தன்மைகளை அகற்றித் தூய்மைப் படுத்துகின்றனர். பசுஞ்சானி கிருமி நாசினியாக
மட்டுமிக்றி பில்லி, சூனியம், திருஷ்டி, கெட்ட எண்ணம் ஆகியவற்றிலிருந்தும் நம்மைக்
காக்கும் குணம் உடையது. நம் வீட்டினையும் சுற்று புறத்தையும் சாணம் கொண்டடு
தெழுகி, சாணநீர் தெளித்து வருவது நம் பரபம்பரை பழக்கம் நம்மை அறியாமல்
ஏற்பட்டிருக்கக் கூடிய தீமவினைகள், மனைக்கு அடியில் உள்ள தீய வினைகளின்
பாதிப்புகளுக்கு ஆளாகாமல் இருப்பதற்காகவே சாணம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு
வந்தது.
வீடுகளில் மட்டுமல்லாமல் ஆலயத்தையும் மந்திரத்தால் தூய்மைபடுத்துவது போல சாணம்
கொண்டும் தூய்மை செய்தனர். சாண வறட்டிகளை நெருப்பில் எரிப்பதால் கிடைக்கும் சாம்பலே
திருநீறு ஆகும். இதன் மூலம் சாணத்தை விட அதன் சாம்பல் அதிக வீரியமுள்ளது என்பதை
நாம் அறிந்து கொள்ள முடியும். பசும் புற்களை மேயும் பசுவின் சாணத்தை நெருப்பில்
எரித்துக் கிடைக்கும் திருநீறு பசிதம் என்னும் வகை திருநீறாகும்.
இதுவே அனைத்திலும் சிறந்தது. சிவனடியார்களுக்கு ஏற்றது. இவை தவிர சாணமும்,
சாணத்தின் சாம்பலும் செடி, கொடி, மரங்களுக்கு நல்ல உயரமாகவும் பயன்படுகிறது.
பூச்செடிகளுக்கு சாணத்தை உரமாக இடுவதால் அச்செடி சிறந்த பூக்களை பூக்கின்றன என்பது
விஞ்ஞான ரீதியாக உண்மையாகும். கோவில்கள் மட்டுமின்றி வீடுகளிலும் விசேஷ நாட்களில்
சாணம் மெழுகி சுண்ணாம்பு பூசி, செம்மண் பட்டைகளை வரைந்து அலங்கரிப்பது வழக்கம்.
அவ்வாறு செய்வதால் மும்மூëர்த்திகளான பிரம்மனும், திருமாலும், ருத்திரனும்
அங்கு எழுந்தருள்வார்கள் என்பது ஐதீகம். வெண்மை பிரம்மனின் அம்சமாகவும், பசுமை
விஷ்ணுவின் அம்சமாகவும், செம்மை சிவனின் அம்சமாகவும் விளங்குகின்றன. பூஜைகளின் போது
சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து சந்தனம், குங்குமம் வைத்து விநாயகப் பெருமானாக
ஆவாகனம் செய்து வழிபடுவது நம் வழக்கம் என்பதை நாம் அறிவோம்.
மார்கழி மாதங்களில் முற்றத்தில் சாணம் தெளித்து, கோலமிட்டு அதன் நடுவில்
சாணத்தைப் பிடித்து வைத்து, அதன் உச்சியில் பூசணிப் பூக்களைச் சூட்டி வைப்பார்.
பூக்களுக்குப் பதிலாக அறுகம்புல்லையும் சாணத்தின் மீது செருகி வைப்பதுண்டு. விநாயப்
பெருமானாக வீற்றிருக்கும் சாணம் விக்னங்களை நீக்கி, அனைத்து நற்காரியங்களையும்
குறைவற நிறைவேற்றித்தரும்.
பிள்ளையாராகப் பிடித்து வைக்கும் சாணம் நெடுநாள் கெடாது. பூச்சிகள்
அரிப்பதில்லை. வண்டுகள் துளைப்ப தில்லை. தங்கத்தைத் தூய்மைப்படுத்த, அதனை
புடம்போடும் பக்குவத்திலும் சாணம் முக்கியப்பங்கு வகிக்கிறது.
வெண்ணெய்.........
பசுவின் வெண்ணெய் நேரடியாக இறைவனின் அபிஷேகத்திற்குப் பயன்படுவதில்லை. ஆனால்
ஸ்ரீகிருஷ்ணர் பாலமூர்த்தியாக விளங்கும் கோவில்களில் சிலைகளுக்கு வெண்ணெய்
சாத்தப்படுவது வழக்கம். உதாரணம் கேரளாவிலுள்ள குருவாயூரப்பன் கோவிலாகும். இது தவிர
அனுமன் கோவில்களிலும் அனுமன் சிலைக்கும் வெண்ணெய் தடவி வழிபாடு செய்கிறார்கள்.
குல தெய்வம் தெரிந்து விட............
எவர் ஒருவருக்குக் குலதெய்வம் தெரியாமல் சிரமப்பட்டுக் கொண்டு குலதேவதா
தோஷத்திற்கும் முன்னோர் கடனுக்கும் ஆளாகி இருக்கிறார்களோ! அவர்கள் வேத அங்க
முறைப்படி ஆறு மாத காலம் ஜென்ம நாளில் கோ பூஜை செய்கிறார்களோ அவர்களுக்கு குலம்
காக்கும் குலதெய்வம் தெரிந்து தோஷங் களும் அகன்று சுபிட்சமான வாழ்வு உண்டாவது
உறுதி.
No comments:
Post a Comment