வேதகாலம் தொடங்கி, இன்று வரை கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் பெருமையையும்,
பசுவைப் பராமரிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தாத நூல்களோ சமயங்களோ கிடையாது.
பசுவைப் போற்றியவர்கள், பராமரித்தவர்கள், காப்பாற்றியவர்கள் அடைந்த நன்மைகளுக்கு
நம் புராணங்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன.
பசுவை வெறுமனே மாடு என்று அழைக்காமல் கோமாதா, பசுத்தாய் எனப் போற்றுவது நம்
வழக்கம். பெற்ற தாய்க்கு ஈடாக போற்றப்படுவது கோமாதா என்றழைக்கப்படும் பசுதான்.
இன்னும் சொல்லப் போனால் குழந்தைக்கு அமுது அளிப்பதில் பசு தாயைவிட மேலானதே.
தாயில்லாத குழந்தைகள் தாய்ப்பாலுக்குப் பதிலாக பசுவின் பாலை உண்டு வளர்வதை இன்றைய
நாளில் நாம் பல இடங்களில் காண்கிறோம்.
ஆன்மிக நோக்கில் மனிதனாகப் பிறப்பதற்கு ஓர் உயிர் எத்தனை புண்ணியம் செய்ய
வேண்டுமோ, அதே அளவு புண்ணியம் பசுவாகப் பிறப்பதற்கும் செய்ய வேண்டும் என்று
புராணங்கள் உரைக்கின்றன. பசுவின் பெருமையை உணர்ந்தே ஆன்றோர்கள் பிரார்த்தனை
செய்யும் போது `கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபமஸ்து நித்யம்' என்று பிரார்த்தனை செய்வார்கள்.
அதாவது, பசுவுக்கும் அந்தணர்களுக்கும் எப்போதும் நன்மை உண்டாகட்டும் என்பது
இதன் பொருள். "நீங்கள் புண்ணியமானவர்கள், நீங்கள் நல்ல வண்ணம் வாழுங்கள். காலையும்
மாலையும் பால் தரும் நீங்கள் கன்றுகளுடனும் காளைகளுடனும் இன்னும் பொலிவீராக
இங்கேயுள்ள நீர்நிலைகள் உமக்கு வற்றாத ஊற்றாகுக. நீவிர் இங்கு மகிழ்ச்சியாய்
வாழ்வீராக வளம் பெருக்குவீராக''.
என்று சாம வேதம் பசுவினை போற்றுகின்றது. பசு தான் வளரும் வீட்டிற்கு மகிழ்ச்சி
அளிப்பனவாகக் காணப்படுகிறது. பசு இருக்கும் இடத்தில் அன்னம், அழகு, ஐஸ்வர்யம்,
ஆரோக்கியம் அனைத்தும் வந்து சேர்ந்து விடும். சாணம் மெழுகிய நிலம், சாணிநீர்
தெளித்த முற்றம், சாணப்பரிமணமான விபூதிப் புழக்கம், பால் கொதிக்கும் நறுமணம், தயிர்
கடையும் மத்தோசை, தாக சாந்தி தரும் மோர் என்பன வீட்டிற்கு அனைத்து விதத்திலும்
மகிழ்ச்சியைத் தரும்.
கல்யாணம் என்ற சொல் மங்களத்தைக் குறிக்கும். அத்தகைய மங்களத்தைக் குறிக்கும்
கல்யாணி என்பது பசுவிற்கு உரியதாகும். `கோ' என்ற சொல்லுக்கு இறைவன் என்றும், அரசன்
என்றும், தலைவன் என்றும் எண்ணற்ற பொருள் உண்டு. அவற்றுள் ஒன்று பசு. மாடு என்ற
சொல்லுக்கு செல்வம் என்றும் பொருள் உண்டு. செல்வம் என்பது பொருட்செல்வத்தை
மட்டுமின்றி அருட்செல்வத்தையும் சேர்த்துதான் சொல்கிறோம்.
பசு நமக்குப் பொருட்செல்வத்தையும் அருட்செல்வத்தையும் ஒருசேர அளிக்க வல்லது
என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதனை உணர்ந்தே நமது முன்னோர்கள் ஒவ்வொருவரும்
பசுவினைத் தங்கள் வீடுகளில் வளர்த்து வந்தனர். இது தவிர பசுக்கள் கூடுகின்ற
இடங்களில் பசுக்களின் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர் தொட்டியை அமைத்தனர்.
அத்தொட்டிகளில் எந்நேரமும் நீர் நிரம்பியிருக்கும்படியும் செய்தார்கள். கூடவே
பசுக்களின் உடலில் ஈ, கொசுக்கள், உண்ணிகள் அமர்ந்து அவற்றிற்கு தீங்கு செய்யும்
போது, பசுக்கள் தங்கள் உடலைச் சொறிந்து கொள்வதற்காக ஆவுரிஞ்சுக்கற்ககளையும்
ஆங்காங்கே நட்டு வைத்தனர். ஒரு பசு குடும்பம் காக்கும். ஒன்பது பசு குலத்தைக்
காக்கும் என்பது நம் முன்னோர்கள் சொன்ன மொழியாகும்.
பசு தோன்றிய புராணம்
திருக்கயிலாயத்தில் சிவபெருமானின் சந்நிதியில் நந்திதேவர் இடபக்கமாக
வீற்றிருக்கிறார். அவர் அருகில் ஐந்து வகை பசுக்கள் வீற்றிருக்கின்றன. அவை:-
நந்தை - கபில நிறம் கொண்டது
சுரபி - கருமை நிறம் கொண்டது
சுசீலை - வெண்ணிறம் கொண்டது
பத்திரை - புகை நிறம் கொண்டது
கமனை - செந்நிறம் கொண்டது
இவற்றின் கோமலத்திலிருந்து விபூதி, பஸிதம், பஸ்மம், :க்ஷாரம், ரக்ஷை
என்னும் ஐவகை திருநீறுகள் உண்டாயின. மேற்கூறிய ஐந்து பசுக்களும் சிவபெருமானின்
திருவருளால் சிவபூஜையின் பொருட்டும். யாகாதி கருமங்களின் பொருட்டும்
திருப்பாற்கடலிலிருந்து உருவாக்கப்பட்டன என்று சைவபுராணங்கள் கூறுகின்றன.
இனி மற்றொரு புராண நோக்கில் பார்ப்போமானால் பாற்கடலிலிருந்து காமதேனு
(நந்தினி) தோன்றினாள். அவளது சக்தி இருக்கும் உலகம் கோலோகம் என்று
அழைக்கப்படுகிறது. அங்கு ஸ்ரீகிருஷ்ணன் பசுக்களுடனும் கோபியர்களுடனும் ஆனந்தமாக இருக்கிறார். காமதேனுவின் வழித்தோன்றலாகவே பூமியில்
பசுக்கள் தோன்றின என்று புராணங்களில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவலோகக் காமதேனு தான் இருக்குமிடத்தில் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றித் தரும்.
ஒரு முறை அரசன் ஒருவன் தனது பெரிய பரிவாரங்களுடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான்.
வேட்டையாடிக் களைத்துப் போன அரசனுக்கும் அவனது பரிவாரங்களுக்கும் கடுமையான பசியும்
தாகமும் ஏற்பட்டது. அவர்கள் காட்டில் அலைந்து திரிந்து ஒரு முனிவரின் ஆசிரமத்தை
வந்தடைந்தனர்.
அவ்வாசிரமம் வசிஷ்ட முனிவரின் ஆசிரமம் ஆகும். அரசன், அம்முனிவரிடம் தங்கள்
தாகத்தைத் தீர்க்க ஏதேனும் தரும்படி வேண்டினான். அதற்கு முனிவரோ, "வெறுமனே
தாகத்தைத் தீர்த்தால் மட்டும் போதுமாப நீங்கள் கடுமையான பசியால் இருப்பதால்
உங்களுக்கு விருந்தும் படைத்து அனுப்புகிறேன்'' என்று கூறினார்.
முனிவர் சொன்னது போலவே அரசனுக்கும் அவனது பரிவாரங்களுக்கும் சுவையான
விருந்தும் அளித்தார். இதனைக் கண்ட அரசன் மிகுந்த ஆச்சரியம் அடைந்தான். இந்த
காட்டில் இப்படியொரு விருந்தை இம்முனிவரால் எப்படி அளிக்க முடிந்தது என்று அதைப்
பற்றி முனிவரிடமே கேட்டான்.
அதற்கு முனிவர் தன்னிடம் இருக்கும் பசுவின் மகிமையால்தான் இப்படியொரு விருந்தை
அளிக்க முடிந்தது என்று கூறினார். ஆம் கேட்டதைக் கொடுக்கும் ஆற்றல் காமதேனுவுக்கு
உண்டு. வசிஷ்ட முனிவரிடமிருந்த அந்த பசுவே காமதேனு. அவர் தனது தவ வலிமையால்
விண்ணுலகிலிருந்து காமதேனுவைப் பெற்றிருந்தார்.
அப்பசுவைத் தான் அடைய நினைத்த அந்த அரசன் வசிஷ்டரிடமிருந்து அதனை அபகரிக்க
முயன்று தோல்வியுற்றான். பின்னாளில் வசிஷ்டரைப் போலவே தவ வாழ்க்கை மேற்கொண்டு
பிரம்மரிஷியாக மாறினான். அந்த அரசனே `ராஜரிஷி' என்று அழைக்கப்பட்ட விசுவாமித்திர
முனிவர் ஆவார். ஆக காமதேனுவின் சந்ததிகளான பசுக்கள் பூமியிலும் மக்கள் கேட்டதைக்
கொடுக்கும் தெய்வீக அன்னை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பசுவின் தெய்வீகத்தை உலகம் உணரும் வகையில் மகான்கள் பலரும் பசுவினைப் போற்றி,
பசுவிற்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால் அதனைப் போக்க தங்கள் உயிரைத் தரவும்
சித்தமாயிருந்தனர். இதனை நம் புராணங்களில் காணலாம். கிருஷ்ணர் மகாவிஷ்ணுவின்
அவதாரமான ஸ்ரீகிருஷ்ணர் பசுவைப் பராமரிக்கும் யாதவ குலத்திலேயே அவதரித்தார்.
கோபாலன் என்னும் பெயரே பசுக்களைக் காப்பாற்றுபவர் என்னும் பொருளில் அமைந்ததுதான்.
ஸ்ரீகிருஷ்ணன் கோகுலத்தில் பசுக்களுடன் வாழ்ந்தார். பசுவின் பாலைக்
குடித்தார். வெண்ணெயைத் திருடி உண்டார், தயிரை உண்டார். அவற்றை தன பக்தர்களுக்கும்
கொடுத்து மகிழ்ந்தார். மனித மனமானது பாலைப் போல தூய்மையாக இருக்க வேண்டும்.
சிந்தனை தயிரைப் போல குளிர்ச்சியாக இருக்க வேண்டும். பிறருக்காக மனமானது
வெண்ணெய் போல உருக வேண்டும். அவ்வாறு இருந்தால் மனிதன் இறையருளைப் பெறுவதோடு,
தானும் இறைத்தன்மையை அடைகிறான். பசுக்களின் பெருமையை உணர்த்தவே பரந்தாமன்
கோகுலத்தில் அவதரித்தார்.
திருமூலர்........
மூலன் என்னும் பசு மேய்க்கும் இடையன் இறந்து கிடக்க, அவனைச் சுற்றி பசுக்கள்
கண்ணீர் சொரிந்து கொண்டிருந்தன. அவ்வழியே வந்த சுந்தரநாதர் என்னும் யட்சர்
பசுக்களின் துன்பத்தைக் கண்டு மனம் வருந்தினார். அவர் தனது யோக சித்தியினால் தனது
உடலை மரத்தின் மேல் கிடத்தி விட்டு, மூலனின் உடலில் புகுந்தார். மூலன் உயிர் பெற்று
எழுந்து வந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்தன. பிறகு அவர் தன் உடலைக் காணாமல் மூலனின்
உடலிலேயே வாசம் செய்ததால் திருமூலர் என்று பெயர் பெற்றார்.
சண்டேசுவரர்...... பசு மேய்ப்பவன் பசுவைக் கோலால் அடிப்பதைக் கண்டு மனம்
பொறுக்காமல் மேய்ப்பவனை விலக்கி தானே பசுக்களை மேய்க்கும் பொறுப்பை ஏற்றுக்
கொண்டார். விசாரசருமர் என்பவர் அப்பசுக்களை மேய்க்கும் காலத்தில் அப்பசுக்கள்
தாமாகச் சொரியும் பாலைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடலானார்.
விசாரசருமரின் செயலைக் கண்ட அவனது தந்தையார் உண்மையை அறியாமல் அப்பால்
குடத்தைக் காலால் எட்டி உதைத்தார்.சிவபூஜைக்கு இடையூறு செய்ததால் தந்தையென்றும்
பாராமல் அவரது காலைத் துண்டித்தார் விசாரசருமர். தந்தையாக இருந்தும் சிவபூஜைக்கு
இடையூறு செய்தவரைத் தண்டித்த உறுதியைக் கண்ட சிவபெருமான் இருவருக்குமே அருள்
புரிந்தார். விசாரசருமருக்கு, சிவவழிபாட்டின் பயனை நல்கும் சண்டேஸ்வரர் என்னும்
பதவியையும் அளித்தார்.
ஆனாய நாயனார்...... தனது புல்லாங்குழலில் பஞ்சாட்சர
மந்திரத்தை இசைத்தபடி பசுக்களை மேய்த்து சிவபுண்ணிய கைங்கரியம் செய்தவர்
அனாயநாயனார்.
ஞானப்பிரகாசர்...... இலங்கையில் வசித்தவர் ஞானப்பிரகாசர்.
சில நூற்றாண்டுக்கு முன்பு அங்கு போர்த்துக்கீசியர் ஆட்சி நடைபெற்றது. அவர்கள்
அன்றாடம் தங்கள் உணவுக்கு பசு ஒன்றினை அனுப்பும்படி ஒவ்வொரு வீட்டாரிடமும்
உத்தரவிட்டனர். ஒரு நாள் ஞானப்பிரகாசரின் முறை வந்தது. பசுக் கொலையாகிய கொடிய
பாவத்தைச் செய்ய அவருக்கு மனம் ஒப்பவில்லை.
எனவே அவர் தன் சொத்துக்கள் அனைத்தையும் விட்டு விட்டு நாட்டிலிருந்தே
வெளியேறினார். மனு நீதித் சோழனின் புதல்வன் ரதத்தில் செல்லும் போது பசுவின் கன்று
ரதத்தில் அகப்பட்டு உயிரிழந்தது.அதனை அறிந்த மன்னன் மனு நீதிச் சோழன், தன் மகனையும்
படுக்க வைத்து அவன் மீது ரதத்தை ஏற்றிக் கொல்லத் துணிந்தான் என்பது நாம் அனைவரும்
அறிந்த வரலாறாகும். இவ்வாறு நம் நாட்டில் பசுவினைப் போற்றும் வழக்கம் அன்றும்
இன்றும் இருந்து வருகிறது.
கோபூஜை பூஜை செய்யும் முறை......
ஒருமுறை திலீப மகாராஜனின் அசுவமேதக் குதிரை யை தூக்கிச் சென்ற தேவேந்திரன் மாயையால்
தன்னை மறைத்துக் கொண்டான். குதிரையை தேடிச்சென்ற ரகு மகாராஜன், கோசலத்தால்
(கோமியம்) தன் கண்களைக் கழுவிக்கொள்ள, தேவேந்திரனின் மாயை அகன்றது. ரகு தேவேந்திர
னிடமிருந்து அசுவமேதக் குதிரையை மீட்டு வந்தான்.
எனவே சகல சவுபாக்கியத்தை அள்ளித்தரும் கோ பூஜையை ஒவ்வொரு வரும் ஆண்டுக்கு ஒருமுறை யாவது விதிப்படி செய்து வரவேண்டும். முன்பு ஒவ்வொரு வீட்டிலும் பசுவினை வளர்த்து வந்தார்கள். எனவே ஒவ்வொருவரும் அவரவர் வீட்டிலேயே கோபூஜை செய்தும் வந்தார்கள்.
இன்றைய தினத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பசு வழிபாடு செய்ய இயலாது என்பதால் ஆலயங்களில் கோசாலை (பசுமடம்) அமைத்து, அன்றாடம் கோ பூஜை செய்யும் மரபு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆலயத்தில் பசுமடம் இருப்பின் மக்கள் அனைவருமே பசு பராமரிப்பிலும், கோபூஜையிலும் கலந்து கொள்ளலாம். அன்றாடம் செய்ய இயலாதவர்கள்கூட வெள்ளிக்கிழமை கோபூஜை செய்ய வேண்டும்.
வசதியுள்ளவர்கள் 108 பசுக்களைக் கொண்டு பெரிய அளவில் கோபூஜை செய்யலாம். அவ்வாறு கோபூஜை செய்வது ஆலயத்திற்கும் மக்களுக்கும் மட்டுமின்றி அகிலத்திற்கே நன்மை அளிக்கும். லோகநாயகியான அன்னை புவனேஸ்வரி இப்பூலோகத்தில் வசிஷ்டர் ஆசிரமத்தில் தேவ பசுவாக இருந்த நந்தினியின் சொரூபமாக விளங்குகிறாள் என்று தேவி புராணங்கள் கூறுகின்றன.
பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜ சக்ரவர்த்தி, தசரதச் சக்ரவர்த்தி போன்ற ராஜாதி ராஜாக்கள் எல்லோரும் பூசிக்கொண் டார்கள். ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி (தை மாதம் முதல் தேதி) இந்திர பூஜையுடன் சேர்த்து கோபூஜையைச் செய்து வருவது வழக்கம். இயன்றவர்கள் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் கூட கோபூஜையைச் செய்து வரலாம்.
பொதுவாக பசு வழிபாட்டினை இருவகையாகச் செய்யும் மரபு உண்டு. பசுமாடுகளை சந்தனம், குங்குமம் போன்றவற்றால் அலங்கரித்து எல்லா மந்திரங்களும் கூறி, மலர்களால் அர்ச்சித்து தூப, தீப நிவேதனங்களால் வழிபடுவது ஒருமுறையாகும். இவ்வாறு வழிபட இயலாதவர்கள் கோமாதாவின் படத்தை மட்டும் வைத்து வழிபடுவதும் உண்டு. இதைத்தவிர பசுவை வீட்டிலோ, ஆலயத்திலோ நேரடியாக வழிபடுவது மற்றொரு முறையாகும்.
கோபூஜை பூஜை செய்யும் முறை......
கோபூஜை செய்யும் போது பசுவையும் கன்றையும் சேர்த்து பூஜிக்க வேண்டும். முதலில் பசுவையும் கன்றையும் நன்கு குளிப்பாட்டி அழைத்து வர வேண்டும். அதற்கு பன்னீர் தெளித்து, மஞ்சள், குங்குமம் கொண்டு அதன் நெற்றியில் பொட்டு வைக்க வேண்டும். கண்டா மணியுடன் மாலையையும் அணிவிக்க வேண்டும்.
பசுவின் உடலில் மஞ்சள், சந்தனம் தெளிக்க வேண்டும். குறிப்பாக வால் பகுதியில் தெளித்து பொட்டு வைக்க வேண்டும். கோபூஜையை மூன்று அங்கங்களாக அதாவது விநாயகர் பூஜை, கோபூஜை, இந்திர பூஜை என்னும் நிலைகளில் செய்ய வேண்டும்.

No comments:
Post a Comment