Sunday, October 20, 2013

ஸ்வர்கம் இங்கு தான் இருக்கிறது நரகமும் இங்குதான் இருக்கிறது

 
ஸ்வர்கம் இங்கு தான் இருக்கிறது நரகமும் இங்குதான் இருக்கிறது மோட்சம் இதில் இருந்து விடுபட்ட நிலை கீதை யின் மூலம்:

தொழில் புரிவதை விளக்குவதே

கடமை என்று சொல்லப்ட்டுவது அதுவே...

கடமை யை செய் பலனை எதிர்பாராதே!!

ஸ்வர்கம் என்பது எந்த தொழிலும் செய்யாமல் சுகங்களை பெறும் இடமாக சித்தரிக்கப்பட்டு வருகிறது

அதனால் தான் இங்கு மோட்சம் என்பதை மறந்து சுவர்கத்துக்கு ஏங்குகிறார்கள்

சுகங்களில் லயிக்கும் எண்ணம் இருக்கும் வரை புலன் அடக்கம் பெறாது உடலுக்கு தான் புலன்கள்
ஆன்மாவுக்கு ஏது புலன்கள்?

சுவர்கத்தில் கனிகளும் மதுவும் சுவைக்கும் ஆசை இருந்தால் எப்படி அது ஸ்வர்கம் தனியே இருக்க முடியும்.

அனைத்து புலன் களும் அனைத்து சுகங்களும் பூவுலகில் கிடைக்கிறதே.

சுவர்கம் என்பது பிறப்பு இறப்பு எனும் மாயை வட்டத்துக்குள் நடக்கும் செயல்

மோட்சம் இதில் இருந்து விடுபட்ட நிலை.

பிரபஞ்சத்தில் காணும் காண முடியாத உணரகூடிய யாவும் இறைவனின் சொருபமே.

இறைவனுக்குள் இருந்து கொண்டு எங்கோ ஸ்வர்கம் இருக்கு என்று நம்புபவர், சுவர்கதை காண முடியாது மோட்சமும் பெற முடியாது.

ஸ்வர்கம் இங்கு தான் இருக்கிறது நரகமும் இங்குதான் இருக்கிறது , இதை உணர்ந்து யார் ஒருவன் பற்று அற்று கடமை செய்கிறானோ அவனே இறைவனை உணர்கிறான் நட்பு கொள்கிறான். அவனே மோட்சம் அடைகிறான்.

மோட்சம் என்பது சுகங்களுக்கு அப்பாற்பட்டு இறைவனில் மூழ்கி கலப்பது.

ஒரு தீக்குச்சியின் நெருப்பை இன்னொரு தீ தீக்குச்சியின் நெருப்புடன் இணைத்து விட்டு இரண்டையும் பிரித்து பார்க்க முடியுமா?அது போல் மனிதனின் ஆன்மாவானது இறைவனின் பரமாத்மாவுடன் கலந்துவிடுவது.

பிறப்பு இறப்பு மாயைக்குள் ஆகப்படாது இறைவனுக்குள் நித்யா சுகம் பெறும்.

அப்போ ஸ்வர்கம் என்பது இலையா? நரகம் என்பது இலையா ?

ஆன்மா இறைவனால் ஷிரிஷ்டிக்கப்பட்டது

அவை ஷிரிஷ்டி ஆன உடனே பிறப்பெடுக்கும். பின் ஓர் அறிவில் இருந்து ஆறு அறிவு வரை அது கடைந்தேறும்
ஆன்மா அழிவில்லாதது.

சட்டயை கழட்டி வேறு சட்டை போடுவது போல் உடல் எடுத்து கொண்டே வரும்.

கடை சியில் மனிதனாக பிறந்து மெய்ஞானம் அடைய முற்படுகிறது.

இவை எல்லாம் மாயை என்னும் இறைவனின் சூட்சுமத்தில் இயங்குகிறது.

ஆன்மா உடல் எடுத்து மனிதன் ஆக பிறந்து காண்பது எல்லாம் இறைவனின் ரூபம் என்பதை உணராமல் மாயை அவன் கண்களை மறைக்கிறது.

ஐந்து புலன்களுடன் பல சொந்தங்களுடன் பிறக்கிறான்.
தானும் அவர்களுடன் பந்தத்தில் இணைகிறான்.

மகனாக ,மகளாக ,தந்தையாக,தாயாக ,கணவனாக ,மனைவியாக இன்னும் பல பரிணாமங்களில் மனிதனும் மற்றொரு மனிதனுடனும் ஜீவராசிகளுடனும் இணைகிறான்.

இவைகள் மூலம் கிடைக்கும் சுகத்தை வெறுக்கவேண்டும் என்று உணர்த்த படவிலை. இவைகளில் இருந்து பற்று ஆற்று கடமை செய்தால் இறைவனின் வசம் மோட்சம் பெறலாம்.

இவைகளில் சொந்தங்களுக்கும் பந்தங்களுக்கும் பிற பொருள்களுக்கும் புலன் சுகத்திற்கும் அடிமைப்பட்டு அவை மீது பற்று கொண்டு அவையே கதி என்று ஏங்குவோர் மறுபடியும் பிறப்பு எடுத்து அவைகளை அடைகிறார்கள்.

இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை

பெண்ணாக பிறந்திருந்தால் நன்றாக இருப்பேன் என்று எண்ணுபவர் பெண்ணாக பிறப்பார், ஆணாக பிறந்திருந்தால் நன்றாக இருப்பேன் என்று எனுபவர் ஆணாக பிறப்பார்.

இறைவனை எண்ணி விடுபட முயற்சிப்பவர் மட்டுமே இந்த சுழற்சியில் இருந்து மீள முடியும்.

மெய்ஞானம் ஆக வாழ்பவன் நல்ல குடியில் பிறக்கிறான் இறை பற்றி அறிந்து இறுதியில் இறைவனை அடைகிறான்.
தீய குணங்களுக்கு அடிமைப்பபடுபவன் மாயை இல் சிக்கி மேலும் தீய குடியில் பிறக்கிறான். மேலும் பிறப்பு எடுத்து துன்புருகிறான் இறைவனை அறிய முடியாமல் மாயை மூழ்கி விடுகிறான்.

வாழும் காலத்தில் ஏற்படும் இன்னல்கள் மனிதர்களின் முன் பிறவிகர்ம பலன்களை பொறுத்து இன்பமும் துன்பமும் கலந்தே இருக்கும்.

சுவர்க்கமும் நரகமும் இங்கு பூவுலகில் உள்ளது தானே அன்றி வெளியில் இல்லை. மோட்சம் என்பதே அதாவது இறைவனுக்குள் ஒன்றாக கலப்பதே சனாதான தர்மம் வகுத்த பாதை. கீதை இல் கண்ணன் காட்டும் மெய்ஞானம் இதுவே.

கண்ணன் மனித உருவில் கலி இல் தோன்றி பரமாத்மவுக்கும்க் ஜீவாத்மாவுக்கும்
ஆன்ம பாலமாக விளங்குகிறார்.

எவன் ஒருவன் பூ உலக கடமைகளை சரியாக செய்து தான் என்னும் எண்ணம் அறுத்து எனது என்னும் மாயை இல் இருந்து விலகி செயலுக்கான பலன்களை இறைவனுக்கு சமர்ப்பிக்கிரானோ அவனேய் மோட்சம் பெறுவான்.
சுவர்கத்துக்காக புண்ணிய காரியம் செய்பவர்கள் தங்கள் செய்த புண்ணியங்களுக்கு ஏற்றவாறு இன்பத்தை அடைந்து மீண்டும் மாயை இல் பிறப்பு எடுப்பார்கள்.

மோட்சம் பெறுபவனோ நித்ய சுகம் பெறுகிறான்.

No comments:

Post a Comment