ஒரு துறவியும் சீடர்களும் காட்டில் தங்கினர்.
அங்கிருந்த எலுமிச்சை வடிவில் பழங்கள் உள்ள ஒரு மரம் இருந்தது.
தாகம் தணிக்கும் நோக்கத்துடன் மரத்தை நெருங்கினான் சீடன்.
""வேண்டாம்.... பொறுமையாய் இரு! கிராமத்தில் நமக்காக உணவு தயாராக இருக்கும். சிறிது நேரம் பசி பொறு!'' என்றார் துறவி.
அவருக்குத் தெரியாமல் சீடன், மெதுவாக ஒரு பழத்தை மட்டும் பறித்து, அதன் சாற்றைப் பருகினான்.
ஆனால், சாறு உள்ளே போன வேகத்தில் மயங்கி கீழே விழுந்தான்.
பதறிப் போன துறவி, "எலுமிச்சையின் வடிவில் காய் காய்க்கும் விஷ மரமான இதன் பழத்தையா சாப்பிடுவது?' என்று சொல்லி பச்சிலைகளைப் பறித்து வந்தார். அதைப் பிழிந்து, சீடன் வாயில் செலுத்தினார்.
சிறிது நேரத்தில் கண்விழித்த சீடனைப் பார்த்து துறவி புன்னகைத்தார்.
""அன்பான சீடனே! இந்த உலகில் சில பொருட்கள் பார்ப்பதற்கு ஒன்றுபோலவே இருக்கும். ஆனால், அவற்றின் குணம் மாறுபட்டது. தோற்றத்தை வைத்தே ஒரு பொருளை நல்லது என முடிவு செய்து விடாதே,'' என்று அறிவுறுத்தினார்.

No comments:
Post a Comment