தீட்டு எதாவது வந்துவிட்டால் சந்யாவந்தனம் செய்யலாமா ?
எந்த தீட்டு இருந்தாலும் விடாமல் செய்ய வேன்டிய கர்மா சந்யாவந்தனம்
ஏன் இன்னும் சொல்லப்போனால் ப்ரேத சம்ஸ்காரம் செய்ய வேண்டிய சமயத்தில் சந்த்யா காலம் வந்தால், சம்ஸ்காரத்தை நிறுத்தி, சந்த்யாவந்தனம் முடித்தே பித்ரு கார்யத்தை செய்ய வேண்டும் .
சந்த்யா வந்தனம் செய்ய வேண்டிய நேரம் எது?
காலை சூர்ய உதயத்துக்கு முன்னும், நடுப்பகலில் தலைக்கு மேல் சூரியன் இருக்கும்போதும், மாலை சூர்ய அஸ்தமனத்துக்கு முன்னும் செய்ய வேண்டும்.
கொஞ்சம் அவசரமா வெளியே கிளம்பணும்ன்னா சாயந்திரம் நாலு மணிக்கு செய்யலாமா?
இல்லை, குறித்த வேளைக்கு ஒரு மணி நேரம் முன் செய்யலாம். அதற்கு முன் செய்வது இல்லை.
ஏதோ காரணத்தால் ஒரு வேளை செய்ய முடியாமல் போய் விட்டது. என்ன செய்வது?
விட்டுபோனதை அடுத்த சந்த்யா நேரத்துக்கு முன் செய்தே, அடுத்த வேளை சந்தியாவந்தனம் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment