Sunday, November 9, 2014

மூஷிக வாகன மோதக ஹஸ்த பொருள்:''வக்ரதுண்ட மஹாகாய பொருள்:


மூஷிக வாகன மோதக ஹஸ்த
ச்சாமர கர்ண விளம்பித்த சூத்ர
வாமண ரூப மகேஸ்வரப் புத்திர
விக்ன விநாயக பாத நமஸ்தே!''
பொருள்:
மூஷிகத்தை வாகனாமாக கொண்டவரே, மோதகப் பிரியரே
சாமரத்தை போன்ற பெரிய காதுகளை உடையவரே, இடுப்பில் சங்கிலியை போன்ற ஆபரணங்களை அணிந்தவரே
வாமணனை ஒத்த ரூபம் உடையவரே
விக்னங்களை நீக்கியருள்வாய் என உன் பாதம் பணிகிறேன்!
குறிப்பு:
மூஷிகம் என்றல் மூஞ்சூறு. மோதகம் என்றால் ஒரு வகை இனிப்புப் பண்டம்.. பெரிய காதுகளும், வாமாண ரூபமும் (அதாவது அதிகம் உயரம் இல்லாத ரூபம்) … ரசித்து பாடுங்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் பாராயணம் பண்ணுங்கள்.விநாயகர் உங்களை … அரவணைத்து கொள்வார் உறுதியாக..!


ஸ்லோகம்:
''வக்ரதுண்ட மஹாகாய
சுர்யகோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமேதேவா
சர்வ கார்யஷு சர்வதா''
பொருள்:
அழகான வலைவுடைய துதிக்கையுடன் மிகப்பெரிய உடலை உடையவரே (விநாயகா)
கோடி சூரியனின் பொலிவை உடையவரே
என்னுடைய அனைத்து செயல்களும் எந்த தடையுமின்றி எப்போதும் சரிவர நடந்திட எமக்கருள்வாய்!
குறிப்பு:
இந்த ஸ்லோகம் இந்து மதத்தில் அனைவராலும் முதல் கடவுளாக போற்றப்படுகின்ற சிவ சுதனாகிய விநாயகரை குறிக்கிறது. பொதுவாகவே, எந்த ஒரு செயல் செய்யும் முன்னர், விநாயகனை வழிபட்டு விட்டே துவங்கவேண்டும் என்ற தத்துவம் உண்டு. அனைத்து விக்னங்களையும் நீக்கக்கூடிய சக்தி உடையவர் விக்னேஸ்வரர்.. அவரை வணங்கி ஆரம்பிக்கும் காரியம் அனைத்தும் வெற்றியே!

No comments:

Post a Comment