எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லும் போது ஒருவர் செய்யும் தீய செயலும் கடவுள்
செயலாகி விடுமே.எத்தனையோ
பிறவிகள் எடுக்கிறோம். இதற்கு முன்பான பிறவிகளில் எவ்வளவோ நல்லதும், தீயதும்
செய்திருப்போம். அதன் பலனாகவே இன்பதுன்பம் கலந்த வாழ்வை அனுபவிக்கிறோம். அதுபோல,
நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் வாழ்வதும் இப்படித் தான். கடுமையான பாவம் செய்து
தண்டனை அனுபவிக்க வேண்டியவர்களையும் இறைவன் கருணையால் ஆட்கொள்கிறார். அதாவது ஒருவர்
தவறு செய்தால் தண்டனையை அனுபவித்தபின் பிறகு துன்பம் நீங்கி விடும். நல்லவர்கள்
கஷ்டப்படுவதும் கூட இந்த அடிப்படையில் தான். "தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று
புறநானூற்றுச் செய்யுள் குறிப்பிடுவதைக் காணலாம். சூரபத்மனைப் பிறக்கச் செய்ததும்,
அவன் மூலம் தேவர்கள் துன்பப்பட்டதும் இறைவன் செயல். சூரபத்மனையே மயில் வாகனமாக
ஏற்றுக் கொண்டதும் இறைவன் செயல் தான்.
No comments:
Post a Comment