Friday, December 21, 2012

நவராத்திரியில் நவாட்சரி மந்திரம்

மந்திரங்களில் காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை என்பார்கள். அதுபோலத்தான் 24 அட்சரங்களைக் கொண்ட நவாட்சரி காயத்ரிக்கு ஈடான மகாமந்திரமாகும். இதனை முறைப்படி ஜபம் செய்பவர்களுக்குக் எல்லா காரியமும் கைகூடும்.உயர்வான இந்த மந்திரத்திற்கு மகா சரஸ்வதியும், மகா லட்சுமியும் சக்தி தேவியர்களாக உள்ளார்கள்.


தெளிந்த ஞானத்துடன் உங்களிடம் அருட்பிரசாதங்கள் பெறும் விதமாக இம்மந்திரத்தை ஜபம் செய்கிறேன் என்பது நவாட்சரி மந்திரங்களில் உள்ள பொருள். ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிற நவராத்திரியில் முதல் நாள் கவசம் ஒன்றை வைத்து மாவிலை தேங்காய் வைத்து அலங்காரம் செய்து மனைப் பலகையில் நிறுத்தி வைக்கவும்.


வினாயகர் பூஜை, குரு பூஜை செய்து முடிந்த பிறகு துர்கேலட்சுமி சரஸ்வதி பிரசாத சித்யர்தம் - நவாட்சரி மகாமந்திர ஜபம் கரிஷ்யே என்று கூறி `ஓம் ஐம் ஹ்ரீம் க்லிம் சாமுண்டாயை விச்சே' என்று 108 தடவை ஜபம் செய்யவும். வெறுந்தரையில் உட்காராமல் வெள்ளைத்துணியின் மேல் அல்லது மனப்பலகையிலோ அமர்ந்து ஜபிக்க வேண்டும்.


ஜபம் செய்து முடித்ததும் அம்பிகைக்கு 9 நாட்களும் சூடு தணிவதற்காக பால் பாயாசம் மற்றும் தேங்காய் பழம் தாம்பூலம் நிவேதினம் செய்து ஆரத்தி காட்டவேண்டும். பிறகு குறைந்தது மூன்று சுமங்கலிகளை அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் தந்து பால் பாயாசம் பிரசாதமாகத் தந்து ஆசிபெற வேண்டும்.


தினமும் பால்பாயாசம் தரவசதியில்லை என்றால், ஒன்பதாம் நாள் 9 பெண்களை அழைத்துக் கொடுத்து விடலாம். நவாட்சரி ஜபத்தினால் வீடு சவுபாக்யத்துடன் திகழ்வதோடு தேவியின் அருள் நிலைத்திருக்கும்.

No comments:

Post a Comment