நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் தேவியை துர்க்கை, லஷ்மி, சரஸ்வதியாக
பூஜிக்கப்பட வேண்டும் என்பது வழக்கம். ஆயிரம் நாமங்கள் கொண்ட தேவிக்கு ஒன்பது
நாட்களுக்குமே விசேஷமான பெயரில் பூஜை செய்ய வேண்டும் என்று தேவிபாகவதத்தில்
கூறப்படுகிறது.
அதன்படி ஒன்பது நாட்கள் பூஜை செய்து விட்டு பத்தாம் நாள் ஒன்பது தேவிகளை
சிறப்பான ஆகம பூஜா முறையில் வழிபடுவது வழக்கம். அதற்கு நவசக்தி பூஜை என்று பெயர்.
ஒன்பது நாட்கள் பூஜை செய்ய முடியாதவர்கள் கூட இன்று நவசக்தி பூஜை செய்தால் அத்தனை
பலன்களும் கிடைத்து விடும்.
மிகவும் விசேஷமான பூஜை இது. அம்பிகை போரில் வெற்றி பெற்ற நாளாக இன்றைய தினம்
கொண்டாடப்படுகிறது. இன்று ஆலயங்களில் மகிஷாசுர மர்த்தினி அலங்காரம் செய்து மலர்ப்
பந்தலிட்டு ஆராதனைகள் செய்வார்கள். ஒரே வீட்டில் பத்து பெண்கள் சேர்ந்து அம்மனை
அலங்காரம் செய்து ஒவ்வொரு நாளும் பூஜைப் பொருட்கள், மலர்கள், நிவேதனம், பழம் என்ற
வகையில் எடுத்து வந்து செய்யலாம்.
வேலை நிமித்தமாக வெளிïர் சென்று விட்ட பெண்கள் கூட இந்த நவசக்தி பூஜை
செய்வதால் சாரதா நவராத்திரி ஒன்பது நாட்கள் பூஜை செய்து பலனைப் பெறுவர். ஆகம நூல்
கூறுகின்ற ஒன்பது சக்திகளுக்குரிய நிவேதனப் பொருட்கள், மலர்கள் இவைகளை வைத்து
சங்கல்பத்தைப் பொது நலன் கருதி செய்து லலிதா திரிசதி படித்து அர்ச்சனை செய்யலாம்.
அல்லது அம்மனுக்குரிய நவராத்திரி நாமாக்களை ஒன்றாகச் சேர்த்து (இங்கு
கூறியுள்ள 9 நாட்களுக்குரிய தமிழ்ப் போற்றிகள்) படித்து அர்ச்சிக்கலாம்.
நவசக்திகள்......
1. வாமா- சர்க்கரைப் பொங்கல்- முறுக்கு- முல்லை.
2. ஜ்யேஷ்டா- கடலை சாதம்- வடை- வாசமல்லி
3.ரௌத்ரி - எள்ளு சாதம்- அதிரசம்- வில்வம்
4. காளி- தேங்காய் சாதம்- சுழியன்- செங்கழுநீர்
5. பலவிகரணீ- புளி சாதம்- தேன் குழல்- செவ்வரளி.
6. கலவிகரணீ- அக்கார அடிசல்- லட்டு- சம்மங்கி.
7. பலப்ரமதினீ- புளியோதரை- ஜிலேபி- செம்பருத்தி.
8. சர்வபூத தமனீ- எலுமிச்சை சாதம்- திரட்டுப்பால்- ரோஜா.
9. மனோன்மணி- தயிர் சாதம்- பாயசம்- தாமரை.
அர்ச்சனை முடிந்ததும் எல்லா நிவேதனமும் செய்து மலர்கள் ஒன்பது சேர்த்து
புஷ்பாஞ்சலி செய்ததும், தோடி, கல்யாணி, காம்போதி, பைரவி, பிலகரி, பந்துவராளி,
புள்ளாகவரளி, நீலாம்பரி, வசந்தா ராகங்களைப் பாடி ஆசீர்வாதம் சொல்லி, ஒன்பது
பெண்களும் அம்மனுக்கு ஒரே சமயத்தில் கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
கூட்டாகப் பாடும் ஆரத்திப் பாடல் பாடி முடிந்ததும் ஆத்மப் பிரதட்சிணம்
(தன்னையே சுற்றிக் கொண்டு) நமஸ்காரம் செய்த பிறகு- ஆரத்தி சுற்றுதல் வேண்டும்.
எல்லோருக்கும் விபூதி, குங்குமம், தாம்பூலம் பரிமாறிக் கொண்டு பிரசாதங்களை
எடுத்துக் கொள்ளலாம்.
அன்று அம்மனே ஏழைப் பெண்ணாக வந்து பூஜை செய்வோரை கவனித்து எல்லோரையும்
அவமதிக்காமல் உபசரிக்கிறார்களா என்று பரிசோதிப்பாளாம். வித்தியாசம் பார்க்காமல்
அனைவரையும் சமமாகவே பாவிக்க வேண்டும். புனர் பூஜையை மறுநாள் மறக்காமல் செய்யவும்.
ji !! navasakthi archanai details, mantram,asthithram eruntha enaku mail pannunga plz...
ReplyDeleteMail.id: saravanan.s2015@vit.ac.in